ஆத்தாடி இவ்வளவு பெருசா? 20,000 மக்கள் வசிக்கும் உலகின் மிகப்பெரிய கட்டிடம்.. வியக்க வைக்கும் தகவல்!
World Largest Residential Building : உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடம் சீனாவில் அமைந்துள்ளது. சீனாவில் ஹாங்சோவில் ’ரீஜண்ட் இன்டர்நேஷனல்' என அழைக்கப்படும் இந்த பிரம்மாண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அனைத்து அத்தியாவசிய தேவைகளும் இந்த கட்டிடத்திற்குள்ளேயே கிடைக்கும். இவர்கள் எதற்காகவும் வெளியே செல்ல தேவையில்லையாம்.

சீனா, செப்டம்பர் 07 : உலக நாடுகளில் வானுயர் கட்டிடங்கள் கட்டுவது அதிகரித்து வருகிறது. குறிப்பாக, நகரங்களில் பெரிய அளவில் கட்டிடங்கள் இருந்து வருகிறது. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளில் வானுயர் கட்டிடங்கள் (World Largest Residential Building) அதிகளவில் உள்ளன. குறிப்பாக, அலுவலக கட்டிடங்கள் மட்டுமே வானுயர் கட்டிடங்கள் இருந்து வருகிறது. பெம்பாலும் குடியிருப்பு கட்டிடங்கள் அவ்வளவு பெரிதகா எங்கேயும் கட்டப்படுவதில். பாதுகாப்பு காரணங்களுக்கு குடியிருப்பு கட்டிடங்கள் வானுயர் கட்டப்படுவதில்லை. இருப்பினும் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடத்தை பற்றி தெரியுமா? சீனாவில் தான் உலகின் மிகப்பெரிய கட்டிடம் இருக்கிறது. இந்த கட்டிடத்தில் 20,000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்தக் கட்டிடம் சீனாவின் ஹாங்சோ நகரில் அமைந்துள்ளது. சீனாவில் உள்ள ரீஜண்ட் இன்டர்நேஷனல் அபார்ட்மென்ட் உலகின் மிகப்பெரிய குடியிருப்பு கட்டிடங்களில் ஒன்றாகும். இது நகர்ப்புற வாழ்க்கையின் வரையறையை முற்றிலுமாக மாற்றுகிறது. இந்தக் கட்டிடம் 206 மீட்டர் உயரம் கொண்டது. 36 முதல் 40 மாடிகளை கொண்டுள்ளது. இருப்பினும், குடியிருப்பாளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் ஒரே கட்டிடத்தில் உள்ளன. இந்தக் கட்டிடத்தில் ஒரு பள்ளி, நீச்சல் குளம், பல்பொருள் அங்காடிகள், உணவு அரங்கம், முடிதிருத்தும் கடை, சலூன், கஃபே, ஜிம், நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன.




Also Read : கேன்சருக்கான தடுப்பூசி.. பயன்பாட்டுக்கு வந்ததாக ரஷ்யா அறிவிப்பு.. குணப்படுத்துமா?
இந்தக் கட்டிடத்தில் வசிக்கும் மக்களுக்கு, வெளியே செல்வது ஒரு விருப்பமே தவிர, ஒரு தேவை அல்ல. அதனால்தான் இது நிலையான நகர்ப்புற வாழ்க்கையின் ஒரு மாதிரியாகக் கருதப்படுகிறது. இங்கு இருக்கும் மக்கள் வெளியவே செல்வதில்லையாம். தேவையான பொருட்கள் அனைத்து இந்த கட்டிடத்திற்குள்ளே கிடைக்கிறது.
20,000 மக்கள் வசிக்கும் உலகின் மிகப்பெரிய கட்டிடம்
World’s largest residential building in China. Will such projects answer India’s urban redevelopment ? pic.twitter.com/5tb7rPIXVD
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 27, 2023
கட்டிடத்தின் குடியிருப்பாளர்களில் பலர் இந்த சிறிய நகரத்திற்குள் அமைந்துள்ள பல்வேறு கடைகளில் பணிபுரிகிறார்கள். 260,000 சதுர மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த கட்டிடம் நவீன அளவில் மட்டுமல்ல, தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்பட்டது. இது இயற்கை பேரழிவுகளைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் S-வடிவ அமைப்பில் உருவாக்கப்பட்டது.
இந்தக் கட்டிடத்தை சிங்கப்பூர் சாண்ட்ஸ் ஹோட்டலின் பிரபல வடிவமைப்பாளரான அலிசியா லூ வடிவமைத்தார். ரீஜண்ட் இன்டர்நேஷனல் கட்டிடம் 2013 இல் திறக்கப்பட்டது. ஆனால் அப்போது, ஆறு நட்சத்திர சொகுசு ஹோட்டலாக வடிவமைக்கப்பட்டது. அதன்பிறகு, குடியிருப்பு கட்டிடமாக மாற்றப்பட்டது.
Also Read : ஆப்கானிஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய பெண்கள் மீட்கப்படவில்லை?.. அதிர்ச்சியூட்டும் காரணம்!
தகவலின்படி, இங்குள்ள ஒரு சிறிய ஜன்னல் இல்லாத அடுக்குமாடி குடியிருப்புக்கு வாடகையாக இந்திய ரூபாய் மதிப்பில் 17,000 முதல் 20,000 வரை செலுத்த வேண்டியிருககும். அதே நேரத்தில் பால்கனி மற்றும் திறந்தவெளி கொண்ட ஒரு பெரிய பிளாட்டுக்கு வாடகையாக ரூ.45,000 மேல் செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.