Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

டென்மார்க்கில் கடலுக்குள் 8,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு – ஆச்சரிய தகவல்

Ancient Discovery : டென்மார்க் நாட்டில் கடலில் மூழ்கிய 8,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த பழமையான நகரம் கடல் நீர் மட்ட உயர்வால் கடலில் மூழ்கியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது அங்கிருந்து கற்களால் ஆன ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

டென்மார்க்கில் கடலுக்குள் 8,500 ஆண்டுகள் பழமையான நகரம் கண்டுபிடிப்பு – ஆச்சரிய தகவல்
டென்மார்க்கில் 8, 500 ஆண்டுகள் பழமையான நகரை ஆய்வு செய்யும் விஞ்ஞானிகள்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 04 Sep 2025 15:59 PM IST

டென்மார்க் நாட்டில் உள்ள ஆர்ஹல் வளைகுடாவில் விஞ்ஞானிகள் கடலுக்குள் மூழ்கிய 8,500 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். பனிகாலம் முடிந்து கடல் நீர் மட்டம் உயரும் என்பதால் இந்த நகரம் தண்ணீரில் முழ்கியதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த நகரம் ஸ்டோன் ஏஜ் அட்லாண்டிஸ் என அழைக்கப்படுகிறது. இந்த நகரத்தில் கல்லால் ஆன கருவிகள், விலங்கு எலும்புகள் மற்றும் மரத்தால் ஆனதாக கூறப்படும் ஒரு கருவி ஆகியவற்றை கண்டுபிடித்துள்ளனர். இந்த பழமையான நகரம் குறித்து மேலும் தகவல்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கற்காலத்தில் மனிதர்கள் வாழ்க்கைய இந்த நகரம் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. கடலுக்கு அடியில் 430 சதுர அடிகள் பரப்பளவை விஞ்ஞானிகள் ஆய்வுசெய்த போது இந்த நகரைக் கண்டறிந்துள்ளனர். கடலுக்கு அடியில் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், பொருட்கள் அனைத்தும் எந்த சேதமும் இல்லாமல் சீராக காப்பாற்றப்பட்டுள்ளன. இவை அன்றைய காலகட்டத்தில் வாழ்ந்த மனிதர்களின் வாழ்க்கை முறை, பழக்க வழக்கங்களை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

இதையும் படிக்க : என்ன நடக்குமோ? பூமியை கடக்கப்போகும் விண்கல்.. நாசா கொடுத்த வார்னிங்!

இந்த நகரத்தை கண்டறிந்த ஆய்வாளர்களில் ஒருவரான தொல்லியல் நிபுணர் பீட்டர் மோ அஸ்டிரப், இங்கு நேரம் நின்றுவிட்டது போல தோன்றுகிறது என தனது வியப்பை பதிவு செய்துள்ளார்.

கற்கால மனிதர்களின் வாழ்க்கை முறை

தற்போது அந்த பகுதியில் மீன்பிடி கருவிகள், ஈட்டிகள் போன்றவை இன்னும் கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். இது தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த ஆய்வின் முடிவில் கற்கால மனிதர்கள் கடலோரத்தில் அவர்களது வாழ்க்கை முறை, அவர்கள் மீன்பிடி தொழில் ஆகியவற்றை தெரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வடக்கு யூரோப்பியக் கடற்கரைப் பகுதிகளில் மூழ்கிய கற்கால நகரங்களை கண்டறியும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நகரம் கண்டறியப்பட்டுள்ளது. இது ஆறு ஆண்டு திட்டத்தின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த திட்டத்துக்கு 15.5 டாலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த கோடைகாலத்தில் ஆராய்ச்சியாளர்கள் 26 அடி ஆழத்தில் சிறப்பு அண்டர் வாக்யூம் கருவி மூலம் பழங்கால பொருட்களை சேகரித்துள்ளனர்.

இதையும் படிக்க : ஆபத்து!.. ஸ்பெயின் கடற்கரைகளில் படையெடுக்கும் நீல டிராகன்கள்.. பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

காலநிலை மாற்ற சவால்களுக்கான தீர்வு

இதன் அடுத்த கட்டமாக, அதனையொட்டிய இரண்டு இடங்களை ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அந்தப் பகுதியில் உள்ள கடலின் தன்மையை பொறுத்து ஆய்வு மேற்கொள்ளப்படும் என விளக்கமளித்துள்ளனர். இந்த ஆய்வுகள் பழங்கால மனிதர்கள் கடல் நீர் மட்டம் உயர்வது போன்ற சுற்றுச்சூழல் மாற்றங்களுக்கு தங்களை எப்படி பொருத்திக் கொள்கிறார்கள் என்பதை புரிந்துகொள்ள முடியும். இதன் மூலம் காலநிலை மாற்ற சவால்களுக்கு தீர்வு காண முடியும் என அவர்கள் நம்புகிறார்கள்.