பூமியை நோக்கி வரும் மர்ம பொருள்.. ஏலியன் ஸ்பேஸ்ஷிப்பா?.. விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!
Mysterious Object Approaching Earth | பூமியை நோக்கி மர்ம விண்கல் ஒன்று வந்துக்கொண்டு இருக்கிறது. இதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்த விஞ்ஞானிகள் அது குறித்து பல முக்கிய தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த நிலையில், இந்த மர்ம விண்கல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

வாஷிங்டன், ஆகஸ்ட் 27 : சூரிய குடும்பத்துடன் (Solar Planet) தொடர்பில்லாத கொஞ்சம் கூட சம்மந்தமே இல்லாத மர்ம பொருள் ஒன்று பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருப்பதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளனர். அந்த மர்ம பொருள் பார்ப்பதற்கு விண்கல் போல இருந்தாலும் அது ஏலியன்களின் ஸ்பேஸ்ஷிப்பாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த நிலையில், பூமியை நோக்கி வரும் அந்த மர்ம பொருள் என்ன அதனால் பூமிக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பூமியை நோக்கி வரும் மர்ம விண்கல்
பூமியை நோக்கி வரும் அந்த மர்ம விண்கல்லில் தண்ணீர் இருப்பதால் அது ஏலியன்களில் ஸ்பேஷிப்பாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் சந்தேக்கிக்கின்றனர். இந்த விண்கல்லுக்கு 3I/ATLAS என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். விண்வெளியை ஆய்வு செய்ய பயன்படுத்தப்படும் மிகவும் சக்தியாந்த தொலைநோக்கிகளில் ஒன்றான SPHEREx மூலம் ஆகஸ்ட் 07, 2025 முதல் ஆகஸ்ட் 15, 2025 வரை இந்த விண்கல் கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்த கண்காணிப்பின் மூலம் அந்த மர்ம விண்கல் குறித்து பல முக்கிய விஷயங்கள் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க : யுரேனஸ் கிரகத்தை சுற்றும் புதிய நிலவு.. ஜேம்ஸ் வெப் மூலம் நாசா கண்டுபிடிப்பு!




மர்ம விண்கல் குறித்து கண்டறியப்பட்ட முக்கிய விஷயங்கள்
பூமியை நோக்கி வந்துக்கொண்டு இருக்கும் அந்த மர்ம விண்கல்லில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி (James Web Telescope) மூலம் மிக தீவிரமாக அந்த விண்கல் ஆய்வு செய்யப்பட்டது. இந்த மர்ம பொருள் ஆரம்பத்தில் பார்ப்பதற்கு விண்கல் போல இருந்தாலும், அது ஒரு வால்நட்சத்திரம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இந்த விண்கல்லில் நீர் பனி மற்றும் கார்பன் மோனாக்சைடு (Carbon Monoxide) ஆகியவை குறைந்த அளவில் இருப்பதை ஜேம்ஸ் வெப் கண்டறிந்துள்ளது.
இதையும் படிங்க : 10 ஆண்டுகள் மர்மம்.. கூட்டம் கூட்டமாக இறந்த நட்சத்திர மீன்கள்.. உண்மையை கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
பொதுவாக நீர் பனி மற்றும் கார்பன் மோனாக்சைடு உள்ளிட்டவை சூரிய குடும்பத்தின் எல்லை பகுதியாக இருக்கும் கைப்பர் பெல்ட் (Kuiper Belt) பகுதியில் இருக்கும் பொருட்களில் மட்டும்தான் இருக்கும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். எனவே இந்த மர்ம விண்கல் கைப்பர் பெல்ட் பகுதியில் இருந்து வந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 5.5 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்த மர்ம விண்கல் வேற்று கிரக நட்சத்திர அமைப்பில் இருந்து வெளியேற்றப்பட்டு விண்வெளி மண்டலத்தில் வீசப்பட்டு இருக்கலாம் என கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.