என்ன நடக்குமோ? பூமியை கடக்கப்போகும் விண்கல்.. நாசா கொடுத்த வார்னிங்!
Nasa Asterioid : பூமியை சிறுகோள் ஒன்று கடக்க உள்ளதாக நாசா எச்சரித்துள்ளது. பூமிக்கு அருகில் இந்த சிறுகோள் கடக்க உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது. ஆனால், இந்த சிறுகோள் காரணமாக, பூமிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது எனவும் விளக்கம் அளித்துள்ளது. அதோடு, இந்த சிறுகோள் மணிக்கு 18,583 மைல் வேகத்தில் பயணிக்கிறது.

வாஷிங்டன், செப்டம்பர் 03 : QH16 என்ற சிறுகோள் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும், 2025 செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று இந்த விண்கல் பூமிக்கு மிக அருகில் 2.81 மில்லியன் மைல் தொலைவில் கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. இந்த விண்கலம் பூமியில் இருந்து தொலைவில் இருந்தாலும், இது ஆபத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பூமியில் மட்டுமே மனிதர்கள் வாழ்வதற்கான தண்ணீர், உணவு கிடைக்கின்றன. மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறதா? அதற்கான சாத்தியம் உள்ளதா என்பது குறித்து பல கட்ட ஆராய்ச்சிகள் நடந்து வருகிறது. பூமி மட்டுமில்லாமல், மற்ற கிரகத்திலும் மனிதர்கள் வாழ முடியுமா என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது.
சூரிய குடும்பத்தில் பூமி இருந்தாலும், அவ்வப்போது சிறு விண்கற்கள் அச்சுறுத்தல் ஏற்படும். விண்கல்கள் வளிமண்டலத்திற்குள் வரும்போது, பெரும்பாலும் எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒருசில விண்கற்கள் மட்டுமே பூமியை தாக்குகின்றன. இந்த நிலையில், பூமியை நோக்கி சிறுகோள் ஒன்று வந்துக் கொண்டிருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. அதாவது, QH16 என்ற சிறுகோள் சுமார் 43 அடி அகலம் கொண்டது. இது மணிக்கு 18,583 மைல் வேகத்தில் பயணிக்கிறது. இந்த சிறுகோள், 2025 செப்டம்பர் 3ஆம் தேதியான இன்று பூமியை கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது.
Also Read : பாகிஸ்தானில் பயங்கரம்.. பேரணியில் குண்டுவெடித்து 14 பேர் பலி.. பலர் காயம்!




பூமிக்கு கடக்கும் விண்கல்
ஆனால், இந்த பூமியை தாக்காது என்றும் அமைதியாக கடந்து செல்லும் என நாசா தெரிவித்துள்ளது. பூமியில் இருந்து 2,810,000 மைல்கள் தொலைவில் இந்த சிறுகோள் இருக்கும. இது பூமிக்கு அருகில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இருப்பினும், இந்த சிறுகோள் பூமிக்கு எந்தவித ஆபத்தையும் ஏற்படுத்தாது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட 11 மடங்கு அதிகம் என கூறுகின்றனர். இந்த சிறுகோள் ஏடன் குழுவைச் சேர்ந்தது, இது பூமிக்கு அருகிலுள்ள சிறுகோள்களின் வகையாகும். இதனை ஆராய்ச்சியாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். மேலும், விண்கல் அமைதியாக கடந்து சென்றாலும், சூரிய மண்டலத்தில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகிறது.
Also Read : நடுவானில் பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூறிய விமான ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பவம்!
இந்த விண்கல் பூமியை நெருக்கும்போது, சில மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது, வானம் வேகமாக நகரலாம் என கூறப்படுகிறது. இது அறிவியலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. பூமிக்கு அருகில் உள்ள சிறிய விண்கற்களை ஆராய்வதன் மூலம், விஞ்ஞானிகள் கணிப்புகளை மேம்படுத்தலாம், சிறுகோள்களின் நடத்தையைப் புரிந்து கொள்ளலாம் மற்றும் எதிர்கால ஆபத்துகளை கணிக்கலாம் என கூறுகின்றனர்.