நடுவானில் பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூறிய விமான ஊழியர்கள்.. அதிர்ச்சி சம்பம்!
Toilet Issue in Flight | நேற்று (செப்டம்பர் 01, 2025) இந்தோனேசியாவில் இருந்த் ஆஸ்திரேலியா நோக்கி விமானம் ஒன்று பயணிகளுடன் சென்றுக்கொண்டு இருந்துள்ளது. இந்த விமானத்தின் கழிவறையில் சிக்கல் இருந்த நிலையில், பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்குமாறு ஊழியர்கள் கூறியுள்ளனர்.

கான்பெரா, செப்டம்பர் 02 : இந்தோனேசியாவில் (Indonesia) இருந்து ஆஸ்திரேலியாவுக்கு (Australia) சென்றுக்கொண்டு இருந்த விமானத்தில், பயணிகள் நடுவானில் பாட்டிலில் சிறுநீர் கழித்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளை பாட்டிலில் சிறுநீர் கழிக்குமாறு அந்த விமான பணியாளர்களே கூறியுள்ளனர். இதன் காரணமாக விமானம் முழுவதும் துர்நாற்றம் வீச தொடங்கிய நிலையில், பயணிகள் சுமார் மூன்று மணி நேரம் அதனுடன் கூடவே விமானத்தில் பயணம் செய்துள்ளனர். இந்த நிலையில், பயணிகளை விமான ஊழியர்கள் பாட்டிலில் சிறுநீர் கழிக்க கூறியது ஏன் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நடுவானில் பாட்டிலில் சிறுநீர் கழித்த விமான பயணிகள்
இந்தோனேசியாவின் பாலி பகுதியில் இருந்து வெர்ஜின் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் ஒன்று நேற்று (செப்டம்பர் 01, 2025), ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பகுதியை நோக்கி சென்றுக்கொண்டு இருந்துள்ளது. பொதுவாக விமானங்கள் புறப்படுவதற்கு முன்னதாக அதன் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசிய அம்சங்கள் குறித்து சோதனை செய்யப்படும். அதாவது, கழிவறை சுத்தமாக உள்ளதா, கழிவறை டேங்க் காலியாக உள்ளதா, பயணிகளுக்கு தேவையான கழிவறை வசதிகள் உள்ளதா என்பது சோதனை செய்யப்படும். இந்த சோதனையின் போது கழிவறையில் ஏதேனும் சிக்கல் இருந்தால் விமானம் டேக் ஆஃப் ஆவதற்கு முன்னதாகவே அது சரிசெய்யப்படும்.
இதையும் படிங்க : Earthquake: ஆப்கானிஸ்தானில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்- 9 பேர் உயிரிழப்பு




கழிவறையை சுத்தம் செய்யாமலே டேக் ஆஃப் ஆன விமானம்
ஆனால், இந்தோனேசியாவில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற அந்த விமானத்தில் கழிவறை சுத்தம் செய்யப்படாமலே விமானம் டேக் ஆஃப் ஆகியுள்ளது. இந்த நிலையில், விமான பயணிகள் வழக்கம் போல கழிவறை சுத்தமாக இருக்கும் என நினைத்து சென்றுள்ளனர். ஆனால், கழிவறை டேங் முழுமையாக இருந்த நிலையில், அவர்களால் கழிவறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தம் 6 மணி நேரத்தில் மூன்று மணி நேரம் பயணிகள் தங்களது இயற்கை உபாதைகளை கட்டுப்படுத்தியுள்ளனர். அதற்கு பிறகு கழிவறையை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க : அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து.. 49 பேர் பலியான நிலையில்.. 100 பேர் மாயம்!
இந்த நிலையில், விமான ஊழியர்கள் பயணிகளை பாட்டில்களில் சிறுநீர் கழிக்குமாறு கூறியுள்ளனர். அதன்படி பயணிகளும் பாட்டிலில் சிறுநீர் கழித்துள்ளனர். அவர்கள் அவ்வாறு பாட்டிலில் சிறுநீர் கழித்தபோது சிறுநீர் தரை முழுவதும் சிந்தி விமானம் முழுவதும் நாற்றம் வீச தொடங்கியுள்ளது. வேறு வழியில்லாமல் அதனுடனே பயணிகள் பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.