அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து.. 49 பேர் பலியான நிலையில்.. 100 பேர் மாயம்!
Africa Migrant Boat Tragedy | ஆப்ரிக்காவின் சில பகுதிகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு வாழ்வாதாரம் தேடி 100-க்கும் மேற்பட்ட அகதிகள் கடல் வழியாக கப்பலில் பயணம் செய்துள்ளனர். அப்போது படகு விபத்துக்குள்ளான நிலையில், 49 பேர் விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

நாக்ஷொட், ஆகஸ்ட் 30 : ஆப்ரிக்காவின் (Africa) காம்பியா, செனகல் நாடுகளை சேர்ந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கு (European Countries) பயணம் செய்த நிலையில், அந்த படகு விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் படகில் பயணம் செய்த 49 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இந்த விபத்தில் வெறும் 17 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ள நிலையில், 100 பேர் கடலில் மாயமாகியுள்ளனர். இந்த நிலையில், மாயமானவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அகதிகள் படகு விபத்து – 49 பேர் பரிதாப பலி
பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரம் தேடி ஆப்ரிக்கா, எகிப்து, பாகிஸ்தான், ஈரான், ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்கின்றனர். சட்டவிரோதமாக பயணம் செய்யும் அவர்கள், கடல் வழியாக அந்த நாடுகளில் நுழையும் ஆபத்தான முயற்சியை மேற்கொள்கின்றனர். இவ்வாறு ஆயிரக்கணக்கான மக்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சட்டவிரோத மற்றும் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் நிலையில், அவர்கள் செல்லும் படகுகள் அவ்வப்போது விபத்துக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது.
இதையும் படிங்க : காட்டுத்தீயை அணைக்க தண்ணீர் எடுக்க சென்ற ஹெலிகாப்டர்.. ஏரியில் விழுந்து விபத்து!




ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் செய்த அகதிகள்
இந்த நிலையில், மேற்கு ஆப்ரிக்காவில் அமைந்துள்ள காம்பியா, செனகல் ஆகிய நாடுகளை சேர்ந்த சுமார் 150 அகதிகள் ஐரோப்பிய நாடுகளுக்குள் சட்டவிரோதமாக நுழைய மத்திய தரைக்கடல் வழியாக பயணம் மேற்கொண்டுள்ளனர். கப்பல் மொரிடேனியா நாட்டின் ஹிஜிரட் நகர் அருகே சென்ற போது திடீரென கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்த மொரிடேனியா கடற்படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க : கணவன் மீது விழுந்த 100 கிலோ மனைவி.. மாரடைப்பு ஏற்பட்டு பலியான கணவர்.. சோக சம்பவம்!
வெறும் 17 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர்
இந்த மீட்பு பணியின் போது கப்பலில் பயணம் செய்த 150 பேரில் வெறும் 17 பேர் மட்டுமே மீட்கப்பட்டுள்ளனர். 49 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கடலில் மாயமான 100 பேரை தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வாழ்வாதாரம் தேடி சென்ற அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.