Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 5 பேர் பலி!

New York Bus Accident : அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்தியர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் அப்படியே கவிழ்ந்தது.

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து.. இந்தியர்களுக்கு நேர்ந்த சோகம்.. 5 பேர் பலி!
சுற்றுலா பேருந்து விபத்துImage Source: X
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 23 Aug 2025 11:04 AM

அமெரிக்கா, ஆகஸ்ட் 23 :  அமெரிக்கா நியூ யார்க்கில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து (New York Tour Bus Accident) ஏற்பட்ட பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐந்து பேர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த பேருந்தில் பயணித்த இந்தியர்கள் உட்பட 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களுக்கு உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறதுஉலக நாடுகளில் சாலை விபத்துகள் என்பது தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தியா மட்டுமின்றி, பல்வேறு நாடுகளில் சாலை விபத்துக்களால் ஆயிரக்கணக்கனோர் உயிரிழந்து வருகின்றனர். நம் நாட்டை காட்டிலும் வெளிநாடுகளில் சாலை விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருகிறது. இருப்பினும் கூட, சாலை விபத்துகள் நடந்து வருகிறது. அப்படியொரு சம்பவம் தான், அமெரிக்காவில் நடந்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று புறப்பட்டு சென்றது.

இந்த பேருந்தில் இந்தியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பயணித்தனர். கனடா எல்லையில் உள்ள நையாகரா நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலாவுக்காக பலரும் சென்றுள்ளனர். அவர்கள் நையாகரா நீர்வீழ்ச்சியை பார்வையிட்ட பிறகு, மீண்டும் நியூயார்க்கிற்கு பேருந்து திரும்பி வந்துக் கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து பஃபலோவிலிருந்து கிழக்கே 25 மைல் (40 கிலோமீட்டர்) தொலைவில் நடந்துள்ளது.

Also Read : இலங்கை முன்னாள் அதிபர் ரணில் விக்ரமசிங்கே கைது.. பகீர் குற்றச்சாட்டு.. பின்னணி என்ன?

சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து

இந்த விபத்து குறித்து அறிந்ததும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு 40க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை ளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்இந்திய, சீன மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த பயணிகளுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்துக்காள காரணத்தையும்க கண்டறியும் விசாரணையும் நடந்து வருகிறதுஇதுகுறித்து போலீசார் கூறுகையில், “ஓட்டுநர் உயிருடன் இருக்கிறார். நாங்கள் அவரிடம் விசாரித்து வருகின்றோம். பேருந்து கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது. எனவே பேருந்து ஏன் கட்டுப்பாட்டை இழந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம்.

Also Read : ஆப்கானிஸ்தான் பேருந்து விபத்து.. 19 குழந்தைகள் உட்பட 79 அகதிகள் உடல் கருகி பரிதாப பலி!

முழுமையான விசாரணைக்கு பிறகே, விபத்துக்கான காரணம் தெரியவரும்என்றார்இந்த விபத்து குறித்து அறிந்ததும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியதாக ஆளுநர் கேத்தி ஹோச்சுல் கூறியுள்ளார். மேலும், இந்த கடினமான நேரத்தில் எங்கள் இதயங்கள் அவர்களின் அன்புக்குரியவர்களுடன் உள்ளன. இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்என்றார்.