Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

ஆபத்து!.. ஸ்பெயின் கடற்கரைகளில் படையெடுக்கும் நீல டிராகன்கள்.. பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!

Blue Dragons in Spain Beaches | ஸ்பெயினில் உள்ள கடற்கரைகளில் நீல டிராகன்கள் படையெடுத்துள்ளதால் அவற்றை குறித்து பாதுகாப்பாக இருக்க அந்த நாட்டு அரசு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது. இதன் காரணமாக பாதுகாப்பு கருதி கடற்கரைகளையும் அந்த அரசு மூடி வைத்துள்ளது.

ஆபத்து!.. ஸ்பெயின் கடற்கரைகளில் படையெடுக்கும் நீல டிராகன்கள்.. பொதுமக்களுக்கு அரசு எச்சரிக்கை!
நீல டிராகன்கள்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 Aug 2025 08:21 AM

மாட்ரிட், ஆகஸ்ட் 29 : ஸ்பெயினில் (Spain) உள்ள கடற்கரைகளில் நீல டிராகன்கள் (Blue Dragon)  படையெடுத்துள்ளதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நீல டிராகன்கள் கொடிய விஷம் கொண்ட கடல்வாழ் உயிரினமாக கருதப்படும் நிலையில், பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கடற்கரைகளுக்கு செல்ல வேண்டாம் என்று அந்த நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கடற்கரைகளையும் அதிகாரிகள் மூடியுள்ளனர்.

ஸ்பெயின் கடற்கரைகளில் படையெடுக்கும் நீல டிராகன்கள்

ஸ்பெயின்  நாட்டின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது குவார்டமார் டெல் செகுராவின் அழகிய கடற்கரைகள். இந்த கடற்கரையில் நீல டிராகன்கள் என அழைக்கபப்டும் க்ளாக்கஸ் அட்லாண்டிகள் (Glaucus Atlanticus) என அழைக்கப்படும் உயிரினங்கள் மொத்தமாக திரண்டுள்ளன. இந்த சிறிய அளவிலான நீல நிற நத்தைகள் ஆபத்து அற்ற அழகிய உயிரினங்களை போல தோன்றினாலும், அவற்றின் மூலம் ஏராளமான பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக, இந்த நீல டிராகன்கள் கடிக்கும்போது கடுமையான வலி, குமட்டல் மற்றும் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : பூமியை நோக்கி வரும் மர்ம பொருள்.. ஏலியன் ஸ்பேஸ்ஷிப்பா?.. விஞ்ஞானிகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

பேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ள போலீசார்

இந்த நீல நிற டிராகன்கள் குறித்து தனது பேஸ்புக் பக்கத்தில் எச்சரிக்கை விடுத்துள்ள காவல்துறை, நீல நிற டிராகன்கள் திடீரென படையெடுத்துள்ளன. இதனால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, மறு அறிவிப்பு வரும் வரை அனைத்து கடற்கரைகளிலும் நீந்த தடை செய்துள்ளோம். கடற்கரை பகுதிகளுக்கு அருகே உள்ள பொதுமக்கள் மற்று  கடற்கரைக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் இந்த வழிகாட்டுதல்களை மதிக்குமாறும், எச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம். மேலும், கடற்கரையில் இந்த உயிரினங்கள் காணப்பட்டால் அதை நேரடியாக தொட வேண்டாம் என்றும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க : தொங்கு பாலம் வெயிட் தாங்குமா? 96 கனரக லாரிகளை ஓட்டி சோதனை.. மாஸ் செய்த சீனா!

கொடிய விஷம் கொண்ட நீல டிராகன்கள்

இந்த நீல டிராகன்கள் குறித்து கூறியுள்ள குவார்டமார் டெல் செகுராவின் மேயர், நீல டிராகன் கடல் நத்தைகள் விஷம் கொண்டவை என்பதால் அவற்றை தொட வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். கடற்கரையில் அவற்றை கண்டால் கையுறையுடன் கூட தொட வேண்டாம் என்றும் அவற்றிடம் இருந்து மிகுந்த பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.