Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Morning Water Benefits: காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர்.. உடலுக்குள் இவ்வளவு நன்மைகள் நடக்குமா..?

Drink Water in the Morning: காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது செரிமானம், இரத்த ஓட்டம் மற்றும் நச்சு நீக்கம் ஆகியவற்றை மேம்படுத்துகிறது. இது உடலை நீரேற்றமாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. குளிர்ந்த நீர் கலோரிகளை எரிக்க உதவும் என்றாலும், அதிக அளவில் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Morning Water Benefits: காலையில் எழுந்ததும் ஒரு கிளாஸ் தண்ணீர்.. உடலுக்குள் இவ்வளவு நன்மைகள் நடக்குமா..?
தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 23 Aug 2025 18:05 PM

காலையில் எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் (Drinking Water) குடிக்கும் பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் ஒன்றாகும். நாம் தூங்கும்போது நம் உடலில் பல செயல்முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதன்படி, காலையில் எழுந்ததும் உடலை நீரேற்றமாக வைத்திருக்க தண்ணீர் குடிப்பது முக்கியமானது. காலையில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை (Digestion) மேம்படுத்துவது மட்டுமல்லாமல், உடலின் வளர்சிதை மாற்றத்தையும் துரிதப்படுத்துகிறது. எனவே, காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

செரிமான அமைப்புக்கு நன்மை:

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது வயிற்றில் உள்ள செரிமான நொதிகளை செயல்படுத்தி உடலை நச்சு நீக்குவதால் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. இது இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதன் மூலம் செரிமான அமைப்பு உணவை எளிதில் உடைக்க உதவுகிறது. இதன் காரணமாக, வாயு மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகள் குறையும்.

இரத்த ஓட்டம் மேம்படும்:

காலையில் தண்ணீர் குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. அதாவது, நீரானது இரத்த நாளங்களை தளர்த்தி, ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலின் பல்வேறு பகுதிகளை சிறப்பாக சென்றடைய அனுமதிக்கிறது.

நச்சு நீக்கம்:

காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. ஒரு ஆய்வின்படி, நீர் உடலின் நச்சு நீக்க செயல்முறையை துரிதப்படுத்துகிறது. நீர் இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது, இதனால் உடலின் செல்களில் இருந்து நச்சுகளை அகற்றி வெளியேற்றும் உறுப்புகளுக்கு கொண்டு செல்வது எளிதாகிறது.

புத்துணர்ச்சி:

காலையில் எழுந்ததும் தண்ணீர் குடிப்பது மூளைக்கு உற்சாகத்தை அளித்து, நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் உணர வைக்கிறது. இந்த ஒரு பழக்கம் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

ALSO READ: சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?

சற்று குளிர்ந்த நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்:

எடையை குறைக்க உதவும்:

குளிர்ந்த நீரைக் குடிப்பது கலோரிகளை எரிக்கும். இருப்பினும், இது பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக இல்லை. குளிர்ந்த நீரைக் குடிப்பது உடலை சாதாரண வெப்பநிலைக்குக் கொண்டுவர கடினமாக உழைக்கச் செய்கிறது. இது ஒரு சிறிய அளவு கலோரிகளை எரிக்கிறது என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

நீர்ச்சத்து:

உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்புக்குப் பிறகு உடனடியாக உடலை நீரேற்றமாக வைத்திருக்க குளிர்ந்த நீர் உதவுகிறது. குளிர்ந்த நீர் செரிமான அமைப்புக்கும் நன்மை பயக்கும். ஏனெனில் இது உடல் ஊட்டச்சத்துக்களை விரைவாக உறிஞ்ச உதவுகிறது.

ALSO READ: எடை குறைக்க உதவுவது முதல்… நீரிழிவு நோய் வரை…. பிளாக் காபியில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?

என்ன செய்யக்கூடாது..?

காலையில் எழுந்ததும் ஒரே நேரத்தில் அதிகமாக தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. இது நம் சிறுநீரகங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. காலையில் 2-3 பாட்டில் தண்ணீர் குடிப்பவர்கள், இந்தப் பழக்கம் சிறுநீரகங்களுக்கு நல்லதல்ல. காலையில் எழுந்தவுடன் 1 முதல் 2 கிளாஸ் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம். ஒரே நேரத்தில் இதை விட அதிகமாக தண்ணீர் குடிக்கக் கூடாது.