இரவில் மோர் குடிக்கலாமா? மருத்துவர்கள் சொல்வது என்ன?
Drinking Buttermilk Before Bed : பலர் இரவு தூங்க செல்வதற்கு முன் மோர் குடிக்க விரும்புகிறார்கள். ஆனால் மோர் குளிர்ச்சி என்பதால் இரவில் மோர் குடிக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். ஆனால் மருத்துவர்கள் இரவில் மோர் குடிப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் என தெரிவிக்கின்றனர். அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

பாலைப் போல மோரிலும் கால்சியம், புரதம், வைட்டமின் பி2, வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம், பாஸ்பரஸ், அயோடின், துத்தநாகம் மற்றும் புரோபயாடிக்குகள் உள்ளன. குறிப்பாக மோரில் (Butter Milk) உள்ள புரோபயாடிக்குகள் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. மோரில் உள்ள கால்சியம் காரணமாக, தினமும் மோர் குடிப்பது எலும்புகளை (Bone Health) வலுப்படுத்துகிறது. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இருப்பினும், சிலர் இரவில் தூங்க செல்வதற்கு முன் மோர் குடிக்கும் பழக்கத்தை வைத்திருக்கின்றனர். பொதுவாக மோர் குளிர்ச்சி என சொல்லப்படுகிறது. இப்படி இரவில் மோர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
கோடை காலத்தில், இந்த மோர் குடிப்பது நம் உடலை குளிர்விக்க உதவும் என்று நம்பப்படுகிறது. இருப்பினும், இரவில் தூங்க செல்வதற்கு முன் மோர் குடித்தால் என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா?. மோர் ஒரு புரோபயாடிக் நிறைந்த உணவு. இதில் கலோரிகள் மிகக் குறைவு. இது உடலுக்கு பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக கோடையில், மோர் குடிப்பது.. நம் உடல் சூடாகாமல் தடுத்து மிகவும் குளிர்விக்கிறது. உடல் சூடு அதிகரித்தால் பல வித நோய்களை ஏற்படுத்தும். அந்த வகையில் நோய்களைத் தவிர்க்க மோர் குடிப்பது அவசியம். அதுமட்டுமின்றி, எடை இழப்புக்கும் இது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
இதையும் படிக்க : ஒற்றைத் தலைவலி மீண்டும் மீண்டும் ஏற்படுகிறதா? தடுப்பது எப்படி?
இரவில் மோர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
எடை குறைக்க முயற்சிப்பவர்கள் பகலில் அல்லாமல் இரவில் மோர் குடிப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இரவில் மோர் உட்கொள்வதன் மூலம், அதில் உள்ள புரதம் மற்றும் கால்சியம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் தடுக்கிறது. இது இரவில் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது. இதன் விளைவாக, உங்கள் எடை அதிகரிக்காது. மோரில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது நல்ல தூக்கத்திற்கும் உதவுகிறது.
மோர் குடித்த பிறகு, நீங்கள் நீண்ட நேரம் வயிறு நிரம்பியதாக உணர்கிறீர்கள். உங்களுக்கு பசி ஏற்படாது. மேலும், மோர் புரதத்தைக் கொண்டுள்ளது. இது ஜீரணிக்க நீண்ட நேரம் எடுக்கும். இது விரைவாக பசிப்பதைத் தடுக்கிறது. இது எடை குறைக்கவும் உதவுகிறது. இரவில் சீரகம் மற்றும் கருப்பு மிளகு கலந்த மோர் சாப்பிட்டால், செரிமானம் மேம்படும். எடை இழப்புக்குத் தேவையான வளர்சிதை மாற்றமும் நன்றாக இருக்கும்.
இதையும் படிக்க : காலையில் எழுந்ததும் இந்த அறிகுறிகளா..? சர்க்கரை நோயாக இருக்கலாம்..!
மோரில் உள்ள புரோபயாடிக்குகள் குடல்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. எனவே நீண்ட காலமாக அல்சர் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் தினமும் மோர் குடித்து வர அது முற்றிலும் குணமாகும். மோர் உட்கொள்வது எலும்புகளை பலப்படுத்துகிறது. எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு மோர் மிகவும் நல்லது.