Health Tips: தூங்குவதற்கு முன் ஒரு கப் இலவங்கப்பட்டை தண்ணீர்.. செரிமானத்தை சிறப்பாக்கும்..!
Cinnamon Water Benefits: இரவில் தூங்குவதற்கு முன் இலவங்கப்பட்டை நீர் அருந்துவதால் செரிமானம், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடு, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு மற்றும் எடை இழப்பு போன்ற பல நன்மைகள் உண்டு. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

இன்றைய நவீன வாழ்க்கையில் பெரும்பாலும் நாம் உடலின் ஆரோக்கியத்தை பற்றி கவலை கொள்வது கிடையாது. நமது உடலானது ஒவ்வொரு நாளும் பல நோய்களை சந்தித்து மீண்டு வருகிறது. துரித உணவு, மன அழுத்தம் (Mental Pressure) மற்றும் குறைவான தூக்கம் ஆகியவை நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துகின்றன. அதன்படி, அன்றாட பழக்கவழக்கத்தில் ஒரு சிறிய மாற்றத்தை செய்வதன்மூலம், உடலை பல வகையான நோய்களிலிருந்து பாதுகாக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், இலவங்கப்பட்டை தண்ணீர் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், பல கடுமையான நோய்களிலிருந்து பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், இலவங்கப்பட்டை தண்ணீர் (Cinnamon Water) தினமும் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
செரிமான அமைப்பு:
இரவில் தூங்குவதற்கு முன் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பது செரிமான சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. மேலும், இது இரவில் ஏற்படும் வாயு, அஜீரணம் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகளை நீக்குகிறது. இரவில் தூங்குவதற்கு முன் இதை குடிப்பது உணவு சரியாக ஜீரணிக்க உதவி செய்யும். இதனால், மறுநாள் காலை நீங்கள் எழுந்திரிக்கும்போது உங்களுக்கு வயிறு லேசான உணர்வை தரும்.
இரத்த சர்க்கரை:
இலவங்கப்பட்டையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த கூடிய இயற்கையான பண்புகள் நிறைய உள்ளன. அதன்படி, இரவில் தூங்குவதற்கு முன் இலவங்கப்பட்டை தண்ணீரை குடிப்பதன்மூலம், அது காலை வரை இரத்த சர்க்கரையை சமநிலையில் வைக்க உதவி செய்யும். இது சர்க்கரை நோயாளிகளுக்கும், சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.




ALSO READ: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இந்திய மசாலாக்கள்.. தினம் தினம் ஆரோக்கியம் தரும்!
நோய் எதிர்ப்பு சக்தி:
இலவங்கப்பட்டை நீர் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவி செய்யும். இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலின் தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் திறனை அதிகரிக்கின்றன. மேலும் இது சளி, இருமல் மற்றும் காய்ச்சல் போன்று அடிக்கடி ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து விலக்கி வைக்கும்.
இதய ஆரோக்கியம்:
இலவங்கப்பட்டை தண்ணீர் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. இது கொழுப்பின் அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது இதய நோய்களின் அபாயத்தைக் குறைத்து இரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கிறது.
எடையை குறைக்க உதவி செய்யும்:
எடையை குறைக்க முயற்சி செய்பவர்களுக்கு இலவங்கப்பட்டை தண்ணீர் உங்களுக்கு நன்மை பயக்கும். இதை எடுத்துகொள்வதன்மூலம், இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடலில் கொழுப்பை எரிக்கும் செயல்முறையை துரிதப்படுத்துகிறது . தூங்குவதற்கு முன் உட்கொண்டால், மறுநாள் வரை உடலில் உள்ள கலோரிகளை எரிக்க உதவுகிறது.
ALSO READ: லவங்கத்தை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?
இலவங்கப்பட்டை தண்ணீரை எப்படி தயாரிப்பது..?
முதலில் ஒரு கிளாஸ் தண்ணீரை கொதிக்க வைக்கவும். இதனுடன் 1 அங்குல இலவங்கப்பட்டை சேர்க்கவும். 5-7 நிமிடங்கள் கொதிக்க வைத்து , பின்னர் வடிகட்டவும். இரவு தூங்குவதற்கு 30 நிமிடங்களுக்கு முன் சூடாகவோ அல்லது சற்று குளிர வைத்து குடிக்கலாம்.