Gautam Gambhir: என் தலைமை பயிற்சிக்கு ஜெய் ஷாதான் காரணம்.. சீக்ரெட்டை உடைத்த கவுதம் கம்பீர்!
Indian Head Coach Gautam Gambhir: கடந்த 2024 ஐபிஎல்லின் போது கம்பீர் கேகேஆரின் வழிகாட்டியாக இருந்தார். அந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு, 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2026 டி20 உலகக் கோப்பையை தொடர்ச்சியாக வென்றது.
இந்திய அணி (Indian Cricket team) 2026 டி20 உலகக் கோப்பையை (2026 T20 World Cup) பயிற்சியாளர் கவுதம் கம்பீர் பயிற்சியின்கீழ் வென்றது. இதனால, பலரும் கவுதம் கம்பீரை பாராட்டி வருகின்றனர். ஆனால் அதற்கு நடுவில், கவுதம் கம்பீர் மிகப்பெரிய ரகசியத்தை வெளியிட்டார். கடந்த 2024 ஐபிஎல்லின் போது கம்பீர் கேகேஆரின் வழிகாட்டியாக இருந்தார். அந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் பதவியேற்ற பிறகு, 2025 சாம்பியன்ஸ் டிராபி, 2025 ஆசிய கோப்பை மற்றும் 2026 டி20 உலகக் கோப்பையை தொடர்ச்சியாக வென்ற முதல் இந்திய பயிற்சியாளர் என்ற பெருமையையும் பெற்றார். முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் பயிற்சியாளர் என இரு அணிகளிலும் உலகக் கோப்பையை வென்ற ஒரே நபர் கவுதம் கம்பீர்தான்.
ALSO READ: டிராவிட், மிதாலிக்கு சிறப்பு கௌரவம்.. பிசிசிஐ விருது பட்டியலில் சுப்மன் கில்..!
பயிற்சியாளர் வாய்ப்பு:
கவுதம் கம்பீர் பயிற்சியின்கீழ் கொல்கத்தா அணியின் வழிகாட்டியாக இருந்தபோது, ஜெய் ஷா இந்திய அணியின் பயிற்சியாளராக வருமாறு அவரை அழைத்தார் என்றார். இதுகுறித்து பேசிய கவுதம் கம்பீர், ” ஒருநாள் காலையில், ஜெய் ஷா பாய் எனக்கு போன் செய்து இந்த வாய்ப்பை வழங்கினார். இந்த வாய்ப்பை நீங்கள் மறுக்க கூடாது என்றார். இந்த வாய்ப்பைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். அவர் எனக்கு தலைமை பயிற்சியாளராக வருமாறு வாய்ப்பளித்தபோது, நான் தயாராக இல்லை. ஏனென்றால் இந்தியாவின் தலைமை பயிற்சியாளராக இருப்பது மிகவும் பொறுப்பான வேலை. எத்தனை முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு மீண்டும் நாட்டின் ஜெர்சியில் பயிற்சியாளராக வாய்ப்பு கிடைக்கிறது? அந்த வகையில் நான் அதிர்ஷ்டசாலி. அதன் பிறகு, நான் என் மனைவி நடாஷாவிடம் பேசினேன். ஜெய் பாய்க்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.” என்றார்.




சிறப்பாக செயல்படுவோம்..
டெஸ்டில் இந்திய அணியில் சொதப்பதிய குறித்து பேசிய கவுதம் கம்பீர், ”இந்திய அணிக்கு டெஸ்ட் முடிவுகள் எதிர்பார்த்தபடி இல்லை. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா தோற்றது. அப்போதும் கூட, ஜெய் ஷா எனக்கு ஆறுதலாக இருந்தார். அந்த நேரத்தில் அந்த இழப்பை நான் ஜீரணிக்க கடினமாக இருந்தது. என்னை சமாதானப்படுத்தியது ஜெய் ஷாதான். விமான நிலையத்தில் அவர் என்னை அழைத்தார். அவரது வார்த்தைகளால், நான் மனதளவில் தைரியத்தை திரும்பப் பெற்றேன்” என்று கூறினார்.
ALSO READ: இந்திய அணியின் அடுத்த சர்வதேச போட்டி எப்போது..? எந்த அணிக்கு எதிராக விளையாடும்?
செய்தி நிறுவனமான ANI-யிடம் கம்பீர் கூறுகையில், ”நாங்கள் மிகவும் நல்ல அணி, இவற்றைப் பற்றி நாங்கள் சிந்திக்கத் தேவையில்லை. நாங்கள் ஆஸ்திரேலிய, நியூசிலாந்து மைதானங்களிலும் பெரிய ரன்கள் எடுத்துள்ளோம். சிலர் சர்ச்சையை விரும்புகிறார்கள். இது எல்லாம் TRP இன் விளையாட்டு. எனது அடுத்த இலக்கு ஒரு அணியை உருவாக்கி 2027 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கு தகுதி பெறுவதாகும். இறுதிப் போட்டியில் விளையாடுவோம் என்று நம்புகிறேன். எங்களுக்கு இன்னும் ஒன்பது டெஸ்ட் போட்டிகள் உள்ளன. அதுதான் எனது முழு கவனமும்” என்று கூறினார்.