சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்?
Ayurvedic Secrets : மாறிவரும் உணவுப் பழக்கம் காரணமாக மக்கள் செரிமான பிரச்னை முதல் தீவிர நோய் பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். நம் வீட்டில் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிக்க கூடாது என சொல்வதை கேட்டிருப்போம். அப்படி சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், மக்கள் பெரும்பாலும் தங்கள் ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை புறக்கணிக்கிறார்கள். இதன் விளைவாக, செரிமானப் பிரச்னைகள் (Digestion) தொடங்கி, தீவிர நோய்களாக மாறுகின்றன. இந்த அவசர காலத்தில் மக்கள் தங்கள் உடல் நலனை கவனிக்க நேரம் இருப்பதில்லை. பலரும் பசி அடங்க வேண்டும் என்பதற்காக மட்டுமே சாப்பிடுகிறார்கள். நான் என்ன சாப்பிடுகிறோம் அதனால் என்ன பலன் ஆகியவை குறித்து சிந்திப்பதில்லை. இதன் ஒரு பகுதியாக சாப்பிட்ட உடன் தண்ணீர் அருந்தக் கூடாது என நம் வீடுகளில் சொல்லக் கேட்டிருப்போம். உண்மையில் சாப்பிட்ட உடன் தண்ணீர் (Water) குடித்தால் என்ன பிரசன்னை ஏற்படும், சாப்பிட்ட பிறகு எவ்வளவு நேரம் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
உணவை உண்ணும் சரியான வழி
ஆயுர்வேதம் உள்ளிட்ட இயற்கை மருத்துவ முறைகள் நாம் என்ன சாப்பிட வேண்டும் என்று நமக்குச் சொல்வது மட்டுமல்லாமல், எப்படி… எப்போது சாப்பிட வேண்டும் என்பதையும் நமக்குக் கற்பிக்கிறது. சாப்பிடும்போது அமைதியான சூழ்நிலை, நேர்மறையான சிந்தனை இருப்பது அவசியம். கோபம், பயம் மற்றும் மன அழுத்தம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகள் செரிமானத்தில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்துகின்றன.
இதையும் படிக்க : தூங்குவதற்கு முன் ஒரு கப் இலவங்கப்பட்டை தண்ணீர்.. செரிமானத்தை சிறப்பாக்கும்..!
உணவை மெதுவாக சாப்பிடுங்கள்
உணவை மெதுவாக மென்று சாப்பிடுவது அதன் சுவையை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் செரிமான நொதிகளையும் செயல்படுத்துகிறது. இது உணவை முறையாக ஜீரணிக்க உதவுகிறது. இது வாயு மற்றும் அஜீரணம் போன்ற வயிற்றுப் பிரச்சினைகளைத் தடுக்கிறது.
தண்ணீர் குடிக்க சரியான வழி
ஆயுர்வேதத்தின்படி, சாப்பிடும் போது தேவைப்பட்டால் மிகச்சிறிய அளவில் தண்ணீர் குடிக்கலாம். ஆனால் சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பது செரிமானத்தைத் தடுக்கும். செரிமான செயல்முறை சரியாக நடைபெற, உணவுக்கு 40 முதல் 45 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.
இதையும் படிக்க : இளநீரின் பக்க விளைவுகள் – யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
பருவகால உணவுகளை உண்ணுங்கள்
ஆயுர்வேதம் உணவு புதியதாகவும் பருவத்துக்கு ஏற்றதாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. உணவைத் தேர்ந்தெடுக்கும்போது உடலின் இயல்பை மனதில் கொள்வதும் முக்கியம். இதனுடன், இரவு உணவு லேசாக இருக்க வேண்டும். விரைவாக சாப்பிடுங்கள். இதனால் தூங்குவதற்கு முன் உடல் ஜீரணிக்க போதுமான நேரம் கிடைக்கும்.
அதிக உணவுகளைத் தவிர்க்கவும்
எண்ணெய் நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன. இது வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. எனவே, ஆயுர்வேத நிபுணர்கள் மதியம் பிரதான உணவை சாப்பிட்டு இரவில் லேசான உணவை சாப்பிடுவது நல்லது என்று கூறுகிறார்கள்.