பிஸ்தாவால் பரவும் நோய் தொற்று – கனடா மருத்துவர்கள் எச்சரிக்கை!
Pistachio Salmonella Alert : பிஸ்தா பருப்பு நமது உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. இந்த நிலையில் பிஸ்தா சாப்பிட கனடா நாட்டு மருத்துவர்கள் தடை விதித்துள்ளனர். காரணம் பிஸ்தா சாப்பிடுவதன் மூலம் சால்மோனெல்லா பாக்டீரியா என்ற தொற்று உடலில் பரவுவதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

பிஸ்தாக்கள் மிகவும் சக்திவாய்ந்த உணவாக கருதப்படுகின்றன. பிஸ்தாக்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பிஸ்தாக்கள் ஒமேகா 3 (Omega 3) உட்பட பல ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. பிஸ்தாக்கள் பொதுவாக இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கூறப்படுகிறது. அவை இரத்த அழுத்தம் (Blood Pressure) மற்றும் கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகின்றன. இருப்பினும், பிஸ்தாக்கள் உட்கொள்வது கனடாவில் சால்மோனெல்லா பாக்டீரியாவைப் பரப்பக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கூடுதலாக, கனடா உணவு ஆய்வு நிறுவனம், பிஸ்தா மற்றும் பிஸ்தா பொருட்களை சாப்பிட வேண்டாம் என்று மக்களை அறிவுறுத்தியுள்ளது.
கனடாவில் பிஸ்தா சாப்பிட்ட பிறகு சுமார் 52 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். குறிப்பாக 10க்கும் மேற்பட்டோர் கடுமையாக பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். சால்மோனெல்லா பாக்டீரியா பரவி வருவதால், பிஸ்தா சாப்பிடவே வேண்டாம் என்று அங்குள்ள மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும், சால்மோனெல்லா பாக்டீரியா என்றால் என்ன என்பது குறித்து இந்த பகுதியில் பார்க்கலாம்.
இதையும் படிக்க : வெள்ளை வெங்காயத்தில் இவ்வளவு நன்மைகளா? ஆச்சரிய தகவல்!
சால்மோனெல்லா பாக்டீரியா ஏற்படுவதற்கான கராணம்
சால்மோனெல்லா என்பது கெட்டுப்போன உணவை சாப்பிடுவதாலும், அழுக்கு நீரைக் குடிப்பதாலும் ஏற்படும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று வயிற்றுப்போக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலியை ஏற்படுத்துகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது ஒரு சில நாட்களுக்குள் தானாகவே குணமாகும். சில நேரங்களில் நிலைமை மோசமாகிவிடும்.
சால்மோனெல்லா பாக்டீரியா குடலில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. உண்மையில், இந்த பாக்டீரியா குடலின் செல்களை அழிக்கிறது. இதன் காரணமாக, உடல் தண்ணீரை உறிஞ்சுவதில் சிரமத்தை ஏற்படுத்துகிறது. சால்மோனெல்லா பாக்டீரியா தொற்று ஏற்பட்டால், வயிற்றில் வலி தோன்றும். அதே நேரத்தில், வயிற்றுப்போக்கு ஏற்பட்டு உடலில் இருந்து தண்ணீர் வெளியேறுகிறது.
சால்மோனெல்லா பாக்டீரியா உடலுக்குள் எப்படி நுழைகிறது?
சால்மோனெல்லா ஒரு சிறிய பாக்டீரியா, அதன் நீளம் சுமார் 0.7 முதல் 1.5 மைக்ரோமீட்டர்கள் வரை இருக்கும்.. இந்த பாக்டீரியா அழுக்கு நீர், கெட்டுப்போன உணவு மூலம் உடலுக்குள் நுழைகிறது. இது உடலில் நுழைந்த பிறகு குடலில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. நோயாளிக்கு சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மரண ஆபத்துகள் ஏற்படலாம் என கூறப்படுகிறது. சில நேரங்களில் அது தானாகவே குணமாகும். சில நேரங்களில் அது ஆபத்தானது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிக்க : உணவில் கூடுதல் உப்பு சேர்த்து சாப்பிடும் நபர்களா நீங்கள்..? இது உங்கள் உடலில் என்ன செய்யும் தெரியுமா?
சால்மோனெல்லா பாக்டீரியாவின் அறிகுறிகள்
சால்மோனெல்லா பாக்டீரியா இருக்கும்போது உடலில் சில அறிகுறிகள் தோன்றும். இந்த அறிகுறிகளை அடையாளம் காண்பதன் மூலம், பிரச்னையைத் தடுக்கலாம். குறிப்பாக காய்ச்சல், தலைவலி, வாந்தி, குமட்டல், வயிற்றுப்போக்கு ஆகிய பாதிப்புகள் ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
யாருக்கு பாதிப்புகள் அதிகம்?
குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் சால்மோனெல்லா பாக்டீரியாவால் அதிகமாக பாதிக்கப்படலாம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். மேற்கண்ட அறிகுறிகளை நீங்கள் கண்டால், உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சை பெறுவது நல்லது.