திராட்சை Vs உலர் திராட்சை – எது உடல்நலத்திற்கு சிறந்தது?
Raisins or Grapes? : பொதுவாக உலர் பலங்கள் உடலுக்கு சிறந்த நன்மைகளை வழங்குவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். அந்த வகையில் மக்களுக்கு உலர் திராட்சை அல்லது திராட்சை, ஆகிய இரண்டில் எதை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் நீடிக்கிறது. இந்த கட்டுரையில் அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள விரும்புபவர்கள் திராட்சையை உணவில் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது. காரணம், திராட்சையில் (Grape) பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. திராட்சையில் வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இவை சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கின்றன. நீங்கள் செரிமான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் திராட்சை உங்களுக்கு பெரிதும் கைகொடுக்கும். அவற்றில் வைட்டமின் சி, ஈ, கே, பி1 மற்றும் பி2 குறைவாகவே உள்ளன. ஆனால் மருத்துவர்கள் உலர் திராட்சை (Raisins)எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கிறார்கள். இந்த கட்டுரையில் திராட்சைக்கும் உலர் திராட்சைக்கும் உள்ள வித்தியாசம் குறித்து பார்க்கலாம்.
உலர் திராட்சையில் உள்ள நன்மைகள்
- உலர் திராட்சையில் அதிக அளவில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன.
- இது திராட்சையை விட மூன்றரை மடங்கு அதிகமான ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.
- உலர் திராட்சை சாப்பிடுவதால் வயிற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அதிகரிக்கும். இது மலச்சிக்கலம் மற்றும் செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.
- ஒரு கப் திராட்சையில் 250 கலோரிகள் உள்ளன. எனவே அதிகமாக எடுத்துக்கொள்வது உடல் பருமன் பிரச்னைக்கு வழி வகுக்கும்.
இதையும் படிக்க : Eye Dryness: இளம் வயதினரையும் விடாத கண் வறட்சி.. வறண்ட கண்களை எவ்வாறு சரிசெய்வது..?
திராட்சையின் நன்மைகள்
- உலர் திராட்சையைக் காட்டிலும் திராட்சையில் 80 சதவிகிதம் தண்ணீர் உள்ளது. திராட்சையில் வைட்டமின் சி, இ, கே, பி1 ஆகியவை உள்ளன. மேலும் திராட்சையில் ஆக்ஸிஜனேற்றிகள் அதிகம்.
- இதில் உள்ள ஆண்டிஆக்ஸிடென்ட்கள் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகின்றன.
- திராட்சையில் நார்ச்சத்து அதிகம் இது உங்கள் பசியை கட்டுக்குள் வைத்திருக்கும்.
- திராட்சையில் வைட்டமின் சி உள்ளது. இது சருமத்தை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
- மேலும் திராட்சையை குடல் பாக்டீரியாவை மேம்படுத்தி செரிமான பிரச்னைகளை சரி செய்யும்.
இதையும் படிக்க : ஸ்மூத்தி Vs ஜூஸ்: எது ஆரோக்கியமானது? பழங்களை உட்கொள்ள சிறந்த வழி எது?
இரண்டில் எது சிறந்தது?
உங்களுக்கு ஊட்டச்சத்துகள் தேவைப்பட்டால் உலர் திராட்சை சிறந்த தேர்வாக பார்க்கப்படுகிறது. அதே நேரம் சருமம் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்கள் என்றால் திராட்சை சாப்பிடலாம். மேலும் உடல் எடையால் அவதிப்படுகிறீர்கள் என்றால் அதிக கலோரிகள் கொண்ட உலர் திராட்சையை கட்டுப்பாடுடன் சாப்பிடுங்கள். செரிமான பிரச்னைகள் இருந்தால் உலர் திராட்சை உங்களுக்கு பெரிதும் உதவும். திராட்சை மற்றும் உலர் திராட்சை ஆகிய இரண்டிலும் ஏராளமான நன்மைகள் உள்ளன. உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்ந்தெடுத்து குறைவான அளவில் சாப்பிடுவதால் பக்கவிளைவுகள் இல்லாமல் நல்ல பலன்கள் கிடைக்கும். இது தொடர்பாக ஒருமுறை கலந்தாலோசித்த பிறகு நமது உடலுக்கு எது சிறந்தது என தெரிந்துகொண்டு தேர்ந்தெடுப்பது நல்லது.