AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Eye Dryness: இளம் வயதினரையும் விடாத கண் வறட்சி.. வறண்ட கண்களை எவ்வாறு சரிசெய்வது..?

Digital Eye Strain: ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப் அதிக பயன்பாட்டால் வறண்ட கண்கள் பிரச்சனை அதிகரித்துள்ளது. கண் தண்ணீர் பற்றாக்குறையால் ஏற்படும் எரிச்சல், அரிப்பு போன்ற அறிகுறிகளை கண் சொட்டுகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையால் சரி செய்யலாம். வைட்டமின் ஏ நிறைந்த உணவு, வெயில் கண்ணாடி பயன்பாடு மற்றும் தூசி, மாசுபாட்டைத் தவிர்க்க வேண்டும்.

Eye Dryness: இளம் வயதினரையும் விடாத கண் வறட்சி.. வறண்ட கண்களை எவ்வாறு சரிசெய்வது..?
கண் வறட்சிImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Jun 2025 15:47 PM IST

ஸ்மார்ட்போன்கள் (Smart Phone) மற்றும் லேப்டாப் போன்றவற்றை நாம் அதிகமாக பயன்படுத்தி வருவதால், கண் தொடர்பான பல பிரச்சனைகளை மக்கள் அதிகமாக சந்திக்கின்றன. அதில் ஒன்றுதான் வறண்ட கண்கள் (Dry Eyes). இது இன்றைய கால இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை, வறண்ட கண்கள் பிரச்சனை வயதுக்கு ஏற்ப ஏற்படும். இப்போது, கண்களுக்கு தீங்கு விளைவிக்கும் பல விஷயங்களை அதிகம் பயன்படுத்துவதால், இளம் தலைமுறையினர் கூட இந்த பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். வறண்ட கண்கள் என்பது கண்ணீரிலிருந்து கண்களுக்கு போதுமான ஈரப்பதம் கிடைக்காத ஒரு நிலையாகும். கண்களில் போதுமான கண்ணீர் உற்பத்தி ஆகாததால் அசௌகரியம் ஏற்படும். இது கண்களில் எரிச்சலை தரும்.

கண்களில் தண்ணீர் ஏன் முக்கியம்..?

கண்ணீர் நம் கண்களில் மேற்பரப்பை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கும். கண்களில் போதுமான தண்ணீர் இல்லாதது கண் தொற்றி அபாயத்தை அதிகரிக்கும். இந்த பிரச்சனை அடிக்கடி ஏற்படாமல் இருக்க அனைத்து வயதினரும் வருடட்த்திற்கு ஒரு முறையாவது தங்கள் கண்களை பரிசோதித்து கொள்வது நல்லது. கண்கள் வறட்சி பிரச்சனை இளைஞர்களிடையே மிகவும் பொதுவானதாகி வருகிறது. இந்த பிரச்சனையால் கண்களில் எரிச்சல், கண்களில் அரிப்பு, கூச்ச உணர்வு, வாகனம் ஓட்டுவதில் சிரமம், மங்கலான பார்வை போன்றவை ஏற்படும்.

கண்கள் வறண்டு போவது ஏன்..?

கண்களில் உள்ள கண்ணீர் படலம் 3 அடுக்குகளை கொண்டுள்ளது. அதன்படி, கொழுப்பு படலம், நீர் திரவம் மற்றும் சளி போன்றவை உள்ளது. இந்த 3 கலவைகளும் பொதுவாக உங்கள் கண்களின் மேற்பரப்பை மென்மையாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க உதவி செய்யும். இந்த அடுக்குகளில் ஏதேனும் ஒன்றின் பிரச்சனைகளால் கண்கள் வறண்டு போகலாம். புகைபிடித்தல், ஸ்மார்ட்போன்கள் மற்றும் கணினிகளை அதிகமாகப் பயன்படுத்துவதாலும் இந்தப் பிரச்சனை அதிகரித்துள்ளது.

கண் வறட்சியை எவ்வாறு குணப்படுத்துவது?

கண் வறட்சி பிரச்சனை சாதாரணமாக இருந்தால், சில கண் சொட்டுகள் மற்றும் மருந்துகளால் அதன் அறிகுறிகள் குறையும். முடிந்த அளவு, தூசி மற்றும் மாசுபாட்டைத் தவிர்ப்பது நல்லது. கண் வறட்சியைக் குணப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சத்தான உணவு மிகவும் முக்கியம். இதற்காக, பச்சை காய்கறிகள், வைட்டமின்-ஏ நிறைந்த உணவை உணவில் சேர்க்க வேண்டும்.

வெளியே செல்லும்போது சன்கிளாஸ்கள் அணிவதன் மூலம் இந்தப் பிரச்சனையைத் தடுக்கலாம். ஹேர் ட்ரையர், கார் ஹீட்டர், ஏர் கண்டிஷனர் அல்லது ஃபேன் கீழ் நேரடியாக படுப்பதை தவிர்க்கவும்.

Follow Us