Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

பச்சை வெங்காயத்தின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்

Raw Onion Power: வெங்காயம் வெறும் சுவைக்காக உணவில் சேர்க்கப்படுவதில்லை. அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. சிலர் வெங்காயத்தை சமைக்காமல் பச்சையாக சாப்பிடுவதை பார்த்திருப்போம். வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பச்சை வெங்காயத்தின் ஆச்சரியமான ஆரோக்கிய நன்மைகள்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 03 Aug 2025 23:09 PM

இந்தியாவில் குறிப்பாக, தென்னிந்தியாவில் வெங்காயம் (Onion) இல்லாத சமையலே இருக்க முடியாது. ஹோட்டல்களில் சாப்பிடும்போது நிறைய பேர் கூடுதலாக பச்சை வெங்காயத்தை வாங்கி சாப்பிடுவதை கவனித்திருப்போம். வெறும் சுவைக்காக அவர்கள் பச்சையாக வெங்காயத்தை சாப்பிடுவதில்லை.  அதற்கு பின்னால் அழுத்தமான காரணங்களும் இருக்கின்றன. பிரியாணி (Briyani) போன்ற கனமான உணவிற்கு தயிர் பச்சடி வழங்கப்படுகிறது. பச்சை வெங்காயத்தை தயிருடன் சேர்ந்து சாப்பிடும்போது நமது செரிமானம் மேம்படும். வெங்காயம் உணவுகளுக்கு சுவையூட்டும் ஒரு பொருள் மட்டுமல்ல. அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளன. குறிப்பாக வெங்காயத்தை சமைக்காலம் பச்சையாக சாப்பிடுவது இதய ஆரோக்கியம், செரிமானம், நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி போன்ற பல நன்மைகளை வழங்குகிறது.

இதய ஆரோக்கியம்

பச்சை வெங்காயத்தில் குர்செடின் (Quercetin) எனப்படும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றம் உள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்க உதவுகிறது. இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது. இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது. பச்சை வெங்காயத்தை ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் சேர்ப்பது உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.

இதையும் படிக்க : சமைத்த உணவை இதற்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.. உடல்நலத்தை கெடுக்கும்..!

செரிமானத்திற்கு நல்லது

பச்சை வெங்காயத்தில் ப்ரீபயாடிக்குகள் நிறைந்துள்ளன. அவை நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவாகச் செயல்பட்டு அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளைக் குறைக்கிறது. மேலும், அவற்றில் உள்ள நீர்ச்சத்து உடலை நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது.

புற்றுநோய் தடுப்பு

வெங்காயத்தில் உள்ள சல்பர் சேர்மங்கள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. வெங்காயம் வயிறு மற்றும் பெருங்குடல் புற்றுநோய்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.

இதையும் படிக்க : முட்டை சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுமா? – உண்மை என்ன?

நீரிழிவு

பச்சை வெங்காயத்தை தொடர்ந்து உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறது. வெங்காயத்தில் உள்ள சில பொருட்கள் இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்தி நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

நோய் எதிர்ப்பு சக்தி

வெங்காயத்தில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த வைட்டமின் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சளி மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.

வெங்காயம் உணவிற்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல், நமது ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை வழங்குகிறது. குறிப்பாக வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவது இதயம், செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு மிகவும் நல்லது. எனவே ஒவ்வொரு நாளும் உங்கள் உணவில் பச்சை வெங்காயத்தைச் சேர்ப்பது மிகவும் நல்லது.