Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் – ஆச்சரிய தகவல்

Barefoot Walking for Wellness : நம் முன்னோர்கள் இயல்பாகவே காலில் செருப்பு இல்லாமல் தான் நடந்தார்கள். ஆனால் அது தற்போது கிரௌண்டிங் என்ற பெயரில் டிரெண்டாகி வருகிறது. வெறும் காலில் நடப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை வழங்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த கட்டுரையில் செருப்பு இல்லாமல் வெறுங்காலில் நடக்கும்போது உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள் – ஆச்சரிய தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 06 Aug 2025 22:55 PM

நம் முன்னோர்களிடையே மிகவும் சாதாரணமாக காணப்பட்ட பழக்கம் தற்போது கிரௌண்டிங் என்ற பெயரில் டிரெண்டாகி வருகிறது. இந்த முறை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது செருப்பு இல்லாமல் வெறும் காலில் தான் நம் முன்னோர்கள் நடந்து வந்தார்கள். ஆனால் தற்சமயம் சுகாதாரம் என்ற பெயரில் வீட்டிற்குள் கூட செருப்பு இல்லாமல் இருப்பதில்லை. ஆனால் அது நம் உடல் நலனை (Health) பாதிக்கும் எனவும், அவ்வப்போது முடிந்தவரை செருப்பு இல்லாமல் நடப்பது (Walking)பல வழிகளில் நமக்கு நன்மை பயக்கும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அது நம் முன்னோர்கள் இயல்பாக கடைபிடித்த பழக்கம் தான். இந்த நிலையில் இப்படி வெறும் காலில் நடப்பதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

நடப்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி.  இது உடலில் தலை முதல் பாதம் வரை அனைத்து உறுப்புகளுக்கு சிறந்த நன்மைகளை வழங்குகின்றன. இது எடை குறைக்க,  தசைகளை வலுப்படுத்த, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த நடைபயிற்சி சிறந்தது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால், ஷூ மற்றும் செருப்பு இல்லாமல் வெறும் காலில் நடப்பது, அதாவது நம் பாதங்கள் நேரடியாக பூமியோடு தொடும் படி நடப்பது நமக்கு நன்மை பயக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.  இந்த கட்டுரையில் செருப்பில்லாமல் வெறும் காலில் நடப்பதால் ஏற்படும்  நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

இதையும் படிக்க : நாலு படிக்கட்டு ஏறினாலே மூச்சுத்திணறல் வருதா? இந்த சிக்கல்களாக இருக்கலாம்!

1. கால்கள் மற்றும் கால் தசைகள் வலுப்படும்

ஷூ அல்லது செருப்பு இல்லாமல் நடப்பது, காலின் தசைகளை வலுப்படுத்தும் . குறிப்பாக குழந்தைகள் இப்படி செருப்பில்லாமல் நடப்பது அவர்களுக்கு நல்ல பாத வளர்ச்சியை ஏற்படுத்தும்.

2. மன அழுத்தம் குறையும்

பூமியின் மேற்பரப்பை பாதங்களின் வழியாக தொடும்போது, மன அழுத்ததைக் குறைத்து மனதுக்கு அமைதியை வழங்கும். இதனால் அன்றைய நாள் முழுவதும் உற்சாகமாக இருப்பார்கள் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

3. கவனித்தல் திறனை ஏற்படுத்தும்

பாதங்களின் வழியாக தரையைத் தொடும் போது அது நம் மூளைக்கு புதிதான சிக்னல்களை அனுப்புகிறது. இது மன நிறைவை அளிப்பதோடு, கவனித்தல் திறனையும் மேம்படுத்தும்.

இதையும் படிக்க : நடைபயிற்சியின் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் – பலன் கிடைக்காது!

4. உடலுக்கு உணர்திறனை மேம்படுத்தும்

நம் உடலின் நிலையை நாமே உணரும் திறன் அதிகரிக்கும்போது, நம் உடலை நிலையானதாக மாறும். குறிப்பாக வயதான காலங்களில் தடுமாற்றம் குறையும் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும்.

5. நடக்கும் முறை மேம்படும்

கால்களை தரையில் ஊன்றி நடக்கும்போது, நம் நடையில் ஒரு ஒழுங்கு ஏற்படும். நேராக பார்த்து நம்மால் நடக்க முடியும்.