Health Tips: புதிதாகப் பிறந்த குழந்தைகள் அதிகமாக தூங்குவது ஏன்? இது பிரச்சனையை தருமா?
New Born Baby Sleeping: புதிதாகப் பிறந்த குழந்தைகள் வேகமாக வளர தொடங்கும். அப்போது, அவர்களின் மூளை மற்றும் உடல் விரைவான வேகத்தில் வளரும். இந்த வளர்ச்சிக்கு போதுமான தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கத்தின் போது உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி தொடர்பான முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது.
புதிதாகப் பிறந்த குழந்தைகள் (New Born Baby) தங்கள் பெரும்பாலான நேரத்தைத் தூங்குவதிலும், தாய்ப்பால் கொடுப்பதிலும் செலவிடுகின்றனர். எனவே, புதிதாக பெற்றோர் ஆன தம்பதிகள் தங்கள் குழந்தை எவ்வளவு தூங்க வைக்க வேண்டும், எப்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது பற்றி அறியாமல் கவலைப்படுகிரார்கள். முக்கிய விஷயம் என்னவென்றால், பிறந்த முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட அளவிலான தூக்க அட்டவணை என்பது கிடையாது. இதன் காரணமாகவே, புதிதாக பிறந்த குழந்தைகள் பெரும்பாலும் பகலில் அதிக நேரம் தூக்கமும் (Sleeping), இரவில் அதிக நேரமும் முழிக்கிறார்கள். புதிதாகப் பிறந்த குழந்தைக்கு பகல் மற்றும் இரவு நேர வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள நேரம் எடுக்கும். இது முற்றிலும் இயல்பான செயல் என்று குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, புதிதாகப் பிறந்த குழந்தைக்கு எத்தனை மணிநேர தூங்குவது அவசியம், எப்போது தாய்ப்பால் குடிக்க வேண்டும் உள்ளிட்ட விவரங்களை தெரிந்து கொள்வோம்.
ALSO READ: புதிதாக பிறந்த குழந்தைக்கு இந்த அறிகுறிகளா? உடனே டாக்டரை பாருங்க!
புதிதாகப் பிறந்த குழந்தைகள் பகல் மற்றும் இரவில் எவ்வளவு தூங்குவார்கள்?
குழந்தைகள் நல மருத்துவர்களின் கூற்றுப்படி, புதிதாகப் பிறந்த குழந்தைகள் பொதுவாக பகலில் சுமார் 8 முதல் 9 மணி நேரமும், இரவில் சுமார் 8 மணி நேரமும் தூங்குகிறார்கள். இதன் காரணமாக மொத்தம் 14 முதல் 17 மணி நேரம் தூக்கத்தை பெறுகிறார்கள். இருப்பினும், இந்த தூக்கம் ஒரே நேரத்தில் அல்ல, மாறாக சிறிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது. முதல் இரண்டு மாதங்களில், குழந்தைகள் 30 நிமிடங்கள் முதல் 3 மணி நேரம் வரை தூங்குகிறார்கள். பின்னர், தாய்ப்பால் குடிக்க எந்திரிப்பாஎகள். புதிதாகப் பிறந்த குழந்தைகளின் வயிறு சிறியதாக இருப்பதால், அவர்கள் ஒவ்வொரு 2 முதல் 4 மணி நேரத்திற்கு ஒருமுறை தாய்ப்பால் குடிப்பார்கள். இதுதான் சரியான நேரம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால்தான் குழந்தைகளின் தூக்கம் அடிக்கடி தடைபடுகிறது. பெரும்பாலான குழந்தைகள் 3 மாத வயதுக்கு பின் தொடர்ந்து தூங்குவது கிடையாது. 6 மாதங்களுக்குப் பிறகு பல குழந்தைகளில் தூக்க பழக்கம் மாறும்.




குழந்தைகள் ஏன் இவ்வளவு அதிகமாக தூங்குகிறார்கள்?
புதிதாகப் பிறந்த குழந்தைகள் வேகமாக வளர தொடங்கும். அப்போது, அவர்களின் மூளை மற்றும் உடல் விரைவான வேகத்தில் வளரும். இந்த வளர்ச்சிக்கு போதுமான தூக்கம் தேவைப்படுகிறது. தூக்கத்தின் போது உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சி தொடர்பான முக்கிய செயல்பாடுகளைச் செய்கிறது. இருப்பினும், ஒரு பெற்றோர் தங்கள் குழந்தை அதிகமாகவோ அல்லது வழக்கத்திற்கு மாறாகவோ தூங்குவதைக் கவனித்தால், ஒரு குழந்தைகள் நல மருத்துவரை அணுகுவது முக்கியம். சில நேரங்களில், காய்ச்சல், தொற்று அல்லது பிற பிரச்சனைகளும் அதிகப்படியான தூக்கத்தை ஏற்படுத்தும்.
புதிதாகப் பிறந்த குழந்தையின் தூக்கத்தின் வெவ்வேறு நிலைகள்:
பெரியவர்களை போலவே குழந்தைகளின் தூக்கமும் வெவ்வேறு நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன. இது இரண்டு முக்கிய நிலைகளைக் கொண்டுள்ளது: REM மற்றும் REM அல்லாத தூக்கம். REM கட்டத்தில், குழந்தைகள் லேசான தூக்கத்தில் இருப்பார்கள். அதாவது கண் அசைவுகள் மற்றும் அவ்வப்போது உடலின் லேசான அசைவுகள் இருந்து கொண்டே இருக்கும். புதிதாகப் பிறந்த குழந்தைகள் தங்கள் மொத்த தூக்கத்தின் பெரும்பகுதியை இந்த நிலையில்தான் செலவிடுவார்கள்.
ALSO READ: இதை கவனிங்க.. குழந்தைகளை தாக்கும் கால்சியம் பிரச்னை.. கண்டறிவது எப்படி?
REM அல்லாத தூக்கம் என்பது ஆழ்ந்த தூக்கத்தை உள்ளடக்கியது. இதில் குழந்தையின் உடல் கிட்டத்தட்ட அசையாமல் நீண்ட நேரம் இருக்கும். சில நேரங்களில், குழந்தைகள் ஆழ்ந்த தூக்கத்திலிருந்து லேசான தூக்கத்திற்குச் சென்று சிறிது நேரத்திற்கு பிறகு, மீண்டும் ஆழ்ந்த தூக்கத்திற்கு செல்வார்கள்.