Health Tips: குழந்தைகள் திடீரென மூச்சை பிடித்துக்கொள்கிறதா? மருத்துவர் ஜெரிஷ் சொல்லும் சூப்பர் அட்வைஸ்!
Breath Holding Spell in Baby: குழந்தைகளுக்கு மூச்சு பிடித்து கொள்வது பொதுவாக 30-60 வினாடிகளுக்குள் சரியாகிவிடும். அப்போது குழந்தைகள் தானாக மூச்சுவிடவோ அல்லது கத்தவோ தொடங்குவார்கள். அதேநேரத்தில், சில சமயங்களில் குழந்தைகள் முழுதாக சுயநினைவை இழக்கும் வரை மூச்சை பிடித்து கொள்ளும்.
பெரும்பாலான பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் (Child Care) நலனில் தொடர்ந்து அக்கறை கொள்கிறார்கள். புதிதாக பிறந்த குழந்தைகள் மீது எவ்வளவு கவனம் செலுத்தினாலும், சில நேரங்களில் நம்மை அறியாது பிரச்சனை வந்துவிடும். அதில் முக்கியமான ஒன்று. புதிதாக பிறந்த குழந்தைகள் முதல் 5 வயதுகுட்பட்ட குழந்தைகள் இந்த பிரச்சனையை சந்திக்கிறார்கள். இது பெரும்பாலும், குழந்தைகள் அதிக நேரம் அழும்போதோ, திடீரென அதிர்ச்சியடையும்போதோ அல்லது பயன் காரணமாக மூச்சு பிடித்து கொள்ளும். இந்தநேரத்தின்போது, குழந்தைகள் தன்னிச்சையாக சுவாசிப்பதை நிறுத்தும். இதனால் மயக்கம் ஏற்பட்டு குழந்தையின் முகம் வெளிர் நீல நிறமாக மாறும். இந்தநிலையில், பெற்றோர்கள் (Parents) என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் ஜெரிஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.




பொதுவாக இது எப்படி சரியாகும்..?
View this post on Instagram
குழந்தைகளுக்கு மூச்சு பிடித்து கொள்வது பொதுவாக 30-60 வினாடிகளுக்குள் சரியாகிவிடும். அப்போது குழந்தைகள் தானாக மூச்சுவிடவோ அல்லது கத்தவோ தொடங்குவார்கள். அதேநேரத்தில், சில சமயங்களில் குழந்தைகள் முழுதாக சுயநினைவை இழக்கும் வரை மூச்சை பிடித்து கொள்ளும். மூச்சு பிடித்து கொள்வது என்பது ஒரு நாளைக்கு பல முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறை கூட நிகழலாம்.
இந்த பிரச்சனை பொதுவாக 6 மாத குழந்தைகள் முதல் 5 வயது குழந்தைகள் வரை நிகழும். இருப்பும். பெரும்பாலும் 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இது தானாகவே சரியாகும்.
குழந்தைகளுக்கு மூச்சு பிடிக்கும்போது பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்..?
- உங்கள் குழந்தைகளுக்கு மூச்சு பிடிக்கும்போது, முடிந்தவரை குழந்தையை அமைதியாக வைக்க முயற்சி செய்யுங்கள்.
- இதுபோன்ற சூழ்நிலையில், குழந்தையை இடது புறமாக ஒரு பக்கத்தில் படுக்க வைத்து, காற்றோட்டத்தை கொடுக்க உதவுங்கள்.
- உங்கள் குழந்தையை எக்காரணத்தை கொண்டும் கடுமையாக அசைக்காதீர்கள். இது சுவாசத்தை கொடுக்காது, மாறாக பிரச்சனையை அதிகரிக்கலாம்.
- சில நேரங்களில் குழந்தைகள் மயக்கத்தின் போது விழுந்து தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்ளலாம். எனவே, உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்லலாம்.
ALSO READ: 90 சதவீத பெண்களுக்கு வைட்டமின் டி குறைபாடு ஏன்..? எப்படி சரிசெய்யலாம்?
கவனிக்க வேண்டியவை:
குழந்தைகளுக்கு ஏற்படும் மூச்சு திணறல் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தினாலும், அமைதியான மனநிலையுடன் விஷயத்தை கையாள்வது முக்கியம். இந்த மயக்கங்கள் பாதிப்பில்லாதவை. எனவே, குழந்தை வளர வளர அவை தானாகவே சரியாகிவிடும். இந்தநேரத்தில், பெற்றோர்கள் பீதி அடையாமல், மேலே சொன்ன வழிகாட்டுதல்களை பின்பற்றுவது நல்லது. இதன்பிறகு, மருத்துவரிடம் அழைத்து செல்லலாம்.