Health Tips: ஷாப்பிங் வண்டியில் குவியும் பாக்டீரியாக்கள்.. குழந்தைகளை உட்கார வைக்க வேண்டாம்! இவ்வளவு ஆபத்து இருக்கு..!
Bacteria in Shopping Carts: ஷாப்பிங் மால்களில் உள்ள ஷாப்பிங் வண்டிகள் பெரும்பாலும் வெளியில்தான் நிறுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து வெயிலிலோ, மழையிலோ அல்லது வாகன நிறுத்துமிடங்களிலோ நிறுத்தப்படும்போது, அவற்றின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரக்கூடும். ஷாப்பிங் வண்டிகள் நம் வசதிக்காகவே செய்யப்பட்டிருந்தாலும், நாம் செய்யும் சில அலட்சியத்தால், அவை உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது நம்மில் பலரும் பொருட்களை வைக்கும் ஷாப்பிங் கார்ட்டை (Shopping Cart) அதிகளவில் பயன்படுத்துகிறோம். அதிலும், குறிப்பாக சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள், குழந்தைகளை வசதியாக ஷாப்பிங் வண்டியில் அமர வைத்து ஷாப்பிங் செய்கிறார்கள். இப்படியான சூழ்நிலையில், நாம் மிகவும் பாதுகாப்பானது என்று நினைக்கும் இந்த ஷாப்பிங் கார்ட்டுகள் தொற்றுநோய்களுக்கான (Infection) இனப்பெருக்கம் செய்யும் இடமாக உள்ளது என்றால் உங்களால் நம்ப முடிக்கிறதா..? பிரபல மருத்துவர் டாக்டர் குணால் சூட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து தெளிவாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் இது ஆபத்தா..?
அரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வை மேற்கோள் காட்டி டாக்டர் குணால் சூட் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த 85 வணிக வண்டிகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், அவற்றில் ஆபத்தான அளவிலான பாக்டீரியாக்கள் இருந்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.




ALSO READ: பிறந்த குழந்தைக்கு பசும் பால் கொடுக்கலாமா? வேண்டாமா? மருத்துவர் ஹரிணி ஸ்ரீ விளக்கம்!
ஷாப்பிங் கார்ட் பொது கழிப்பறைகளை விட ஆபத்தானவையா?
View this post on Instagram
அரிசோனா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்ட மிகவும் அதிர்ச்சியூட்டிய தகவல் என்னவென்றால், பொது கழிப்பறைகள் மற்றும் நாம் வெறுக்கும் பிற பொது இடங்களை காட்டிலும் ஷாப்பிங் கார்ட் கைப்பிடிகளில் அதிக பாக்டீரியாக்கள் உள்ளன. மல மாசுபாட்டிலிருந்து வரும் ஈ. கோலி பாக்டீரியா, ஷாப்பிங் கார்ட் கைப்பிடிகளில் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டது. மோசமான சுகாதாரத்திலிருந்து மட்டுமே வெளிவரும் என்று நாம் நினைக்கும் கோலிஃபார்ம் பாக்டீரியா, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற உடல்நலப் பிரச்சினைகளை குழந்தைகளுக்கு ஏற்படுத்தலாம்.
தொற்று எவ்வாறு பரவுகிறது?
ஷாப்பிங் மால்களில் உள்ள ஷாப்பிங் வண்டிகள் பெரும்பாலும் வெளியில்தான் நிறுத்தப்படுகிறது. இதை தொடர்ந்து வெயிலிலோ, மழையிலோ அல்லது வாகன நிறுத்துமிடங்களிலோ நிறுத்தப்படும்போது, அவற்றின் மேற்பரப்பில் பாக்டீரியாக்கள் விரைவாக வளரக்கூடும். சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு வரும் நுகர்வோர் கைப்பிடிகளைப் பிடித்து முகத்தைத் தொடும்போது அல்லது அதே கைகளால் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கும்போது இந்த கிருமிகள் நேரடியாக உடலில் நுழையலாம்.
ALSO READ: தாய்ப்பால் கொடுக்கும்போது குழந்தை கடிக்கிறதா? தடுக்க Dr. ஹரிணி ஸ்ரீ டிப்ஸ்!
ஆபத்தை எவ்வாறு குறைப்பது?
கிருமிநாசினி துடைப்பான்கள்:
ஷாப்பிங் கார்ட் கைப்பிடியை தொடுவதற்கு முன், குழந்தைகளை உட்கார வைப்பதற்கு முன் கிருமிநாசினி துடைப்பான்கள் கொண்டு சுத்தம் செய்யவும்.
கை சுத்திகரிப்பான்:
ஷாப்பிங் செய்த உடனேயே உங்கள் சானிடைசர் (Hand Sanitizer) மூலம் சுத்தம் செய்யலாம்.
குழந்தைகளிடம் கவனமாக இருங்கள்:
குழந்தைகளை வண்டியில் ஏற்றும்போது, அவர்களை வாயில் வைக்கவோ அல்லது கைப்பிடிகளைத் தொடாமல் பார்த்து கொள்ளுங்கள்.
ஷாப்பிங் வண்டிகள் நம் வசதிக்காகவே செய்யப்பட்டிருந்தாலும், நாம் செய்யும் சில அலட்சியத்தால், அவை உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். எனவே அடுத்த முறை நீங்கள் சூப்பர் மார்க்கெட்டுக்குச் செல்லும்போது சானிடைசர் அல்லது கிருமிநாசினி துடைப்பான்கள் மூலம் பயன்படுத்தி பொருட்களை வாங்க பயன்படுத்தலாம்.