Health Tips: மாரடைப்பு, பக்கவாதம் வருமோ என்ற பயமா..? இந்த 3 எளிய குறிப்புகள் வராமல் தடுக்கும்!
Heart Attack Stroke Prevention: வைட்டமின் K2 தமனிகள் இறுதி போவதை தடுப்பதற்கான ஒரு சஞ்சீவி என்றே சொல்லலாம். இந்த வைட்டமின் உடலில் உள்ள ஒரு புரதத்தை செயல்படுத்தி, தமனிகளின் சுவர்களில் கால்சியம் படிவதைத் தடுக்கிறது. வைட்டமின் K2 பொதுவாகவே முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் பொருட்கள் மற்றும் புளிப்பு சார்ந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம்.
இன்றைய நவீன காலகட்டத்தில் மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Paralysis) ஏற்படும் நிகழ்வுகள் ஆபத்தான விகிதத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதற்கு முக்கிய காரணம் தமனிகளில் அடைப்பு ஏற்படுவதாகும். வீட்டை சுத்தம் செய்வது எவ்வளவு அவசியமோ, அதே போல் உடலின் நரம்புகளை அதாவது தமனிகளை சுத்தம் செய்வதும் சமமாக முக்கியமானது. அதன்படி, தமனிகளை இயற்கையாகவே சுத்தமாகவும், இதயத்தை ஆரோக்கியமாகவும் வைத்திருக்க 3 பயனுள்ள குறிப்புகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
நரம்புகளில் பிளேக் ஏன் ஏற்படுகிறது..?
மருத்துவ ரீதியாக, தமனிகளில் பிளேக் ஏற்படுவதை ‘பெருந்தமனி தடிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. கொழுப்பு மற்றும் கால்சியம் போன்ற பொருட்கள் தமனிகளுக்குள் சேருவதையே ‘பிளேக்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த பிளேக் இரத்த நாளங்களை சுருங்கச் செய்து, இரத்தம் மற்றும் ஆக்ஸிஜனின் ஓட்டத்தைக் குறைக்கிறது. இந்த நிலையில், இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய கடினமாக உழைக்க முயற்சிக்கும். இது மார்பு வலி மற்றும் இதய நோய்களை ஏற்படுத்தும்.
ALSO READ: குளிர்காலத்தில் வெந்நீர் மட்டும் குடிப்பது நல்லதா கெட்டதா? இது உடல் எடையை குறைக்குமா?




இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வைட்டமின் K2:
வைட்டமின் K2 தமனிகள் இறுதி போவதை தடுப்பதற்கான ஒரு சஞ்சீவி என்றே சொல்லலாம். இந்த வைட்டமின் உடலில் உள்ள ஒரு புரதத்தை செயல்படுத்தி, தமனிகளின் சுவர்களில் கால்சியம் படிவதைத் தடுக்கிறது. வைட்டமின் K2 பொதுவாகவே முட்டையின் மஞ்சள் கருக்கள், பால் பொருட்கள் மற்றும் புளிப்பு சார்ந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம். ஆராய்ச்சியின் படி, இந்த வைட்டமின் போதுமான அளவு உணவில் உள்ளவர்களுக்கு இதய நோய் ஏற்படும் அபாயம் மிகக் குறைவு என்று கூறப்படுகிறது.
வெள்ளை நிற உணவுகள்:
வைட்டமின் K2 சார்ந்த உணவுகளை தவிர, உங்கள் உணவில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் சார்ந்த உணவுகளை எடுத்து கொள்வதையும் குறைக்க வேண்டும். அதாவது ஒயிட் பிரட், சர்க்கரை நிறைந்த சிற்றுண்டிகள், குளிர்பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்கலாம். இவற்றை அதிகமாக எடுத்து கொள்வது இரத்த நாளங்களில் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை அதிகரித்து, மறைமுகமாக தமனிகளில் அடைப்பை அதிகரிக்கச் செய்யும்.
ALSO READ: தினமும் ஒரு கைப்பிடி பூசணி விதைகள்.. ஆரோக்கிய அட்வைஸ் தரும் மருத்துவர் சிவசுந்தர்!
தினமும் 30 நிமிட உடற்பயிற்சி:
மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை தவிர்த்தும், சேர்ப்பதை தவிர, மிகவும் பயனுள்ள தீர்வு உடல் செயல்பாடு மேற்கொள்வதாகும். மருத்துவரின் ஆலோசனையின்படி, நீங்கள் ஒவ்வொரு நாளும் குறைந்தது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அதன்படி நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் அல்லது வலிமை பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ளலாம். தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்து, எடையை பராமரிக்க உதவுகிறது. மேலும், இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் பிளேக் குவிப்பு செயல்முறையை மெதுவாக்குகிறது.