Health Tips: காலை உணவை தவிர்க்கிறீர்களா..? சர்க்கரை நோய் வருமா?
Skipping Breakfast: காலை உணவைத் தவிர்ப்பது கலோரிகளைக் குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்பி மேற்கொள்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது. காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் பசியை ஏற்படுத்தும்.
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் பணி சுமை, தாமதமாக எழுவது உள்ளிட்ட பல காரணங்களுக்காக காலை உணவை தவிர்க்க தொடங்குகிறார்கள். அலுவலகத்திற்கு சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்ற அவசரம், எடை குறைக்க முயற்சித்தல் உள்ளிட்ட காரணங்களுக்காக காலை உணவை (BreakFast) சிலர் வேண்டுமென்று, சிலர் வழக்கமாகவே தங்கள் பழக்கமாக கொள்கிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு ஆபத்தானது என்பது தெரியுமா? காலை உணவு ஒரு நாளின் மிக முக்கியமான உணவு (Food) என்றும், அதை தவிர்ப்பதால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்வோம்.
காலை உணவு எவ்வளவு முக்கியம்..?
இரவு எடுத்து கொள்ளும் உணவுக்கு பிறகு, இரவு முழுவதும் உடல் சக்தி இல்லாமல் இருக்கும். காலையில் எழுந்தவுடன் அதற்கு சக்தி மிகவும் தேவைப்படுகிறது. எனவே, நீங்கள் காலை உணவைத் தவிர்த்தால், உங்கள் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகலாம். இது மெதுவாக உங்கள் ஆரோக்கியத்தைப் பாதிக்க செய்யும்.
ALSO READ: அதிகப்படியான உடற்பயிற்சி இதயத்திற்கு ஆபத்தானதா? உண்மை என்ன..?




காலை உணவை உட்கொள்ளாமல் இருப்பது எப்படி இரத்த சர்க்கரையை அதிகரிக்கும்?
காலை உணவைத் தவிர்ப்பவர்களுக்கு டைப் 2 சர்க்கரை நோய் வருவதற்கான ஆபத்து 30 சதவீதம் அதிகம். இது இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு காரணமாகும். காலை உணவைத் தவிர்ப்பது உடலுக்குத் தேவையான குளுக்கோஸை இழந்து, அதன் சேமிக்கப்பட்ட சக்தியைப் பயன்படுத்த கட்டாயப்படுத்துகிறது. இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உடல் அதிக இன்சுலினை உற்பத்தி செய்கிறது, இது கணையத்தை சோர்வடையச் செய்கிறது. அடிக்கடி காலை உணவைத் தவிர்ப்பது உடல் இன்சுலினுக்கு மோசமாக விளைவை ஏற்படுத்தும். இது இன்சுலின் எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.
காலை உணவைத் தவிர்ப்பது ஏன் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது?
காலை உணவைத் தவிர்ப்பது கலோரிகளைக் குறைத்து எடை இழப்புக்கு வழிவகுக்கும் என்று பலரும் சமூக வலைதளங்களில் பரவும் செய்திகளை நம்பி மேற்கொள்கிறார்கள். ஆனால் இது முற்றிலும் தவறானது. காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பது நாள் முழுவதும் மீண்டும் மீண்டும் பசியை ஏற்படுத்தும்.
ALSO READ: வெறும் வயிற்றில் தினமும் ஒரு பல் பூண்டு.. உடலில் இவ்வளவு ஆரோக்கியம் நடக்கும்..!
இதனால், நீங்கள் மதிய உணவு அல்லது இரவு உணவின்போது அதிகமாக சாப்பிட தொடங்குவீர்கள். பசியை விரைவாகப் பூர்த்தி செய்ய, மக்கள் துரித உணவு, ஸ்நாக்ஸ் அல்லது இனிப்புகளை அதிகமாக சாப்பிடுகிறார்கள். அதிகமாக சாப்பிடுவது உடலில் அதிகப்படியான கொழுப்பைச் சேமிக்க வைக்கிறது. இவை படிப்படியாக எடை அதிகரிப்பதற்கான காரணங்களாக அமைந்துவிடுகிறது. மேலும், வளர்சிதை மாற்றம், உடல் உணவை ஜீரணித்து ஆற்றலை உற்பத்தி செய்யும் செயல்முறை பாதிக்கப்படுகிறது. நீங்கள் காலை உணவைத் தவிர்க்கும்போது, உங்கள் வளர்சிதை மாற்றம் குறைகிறது, இதன் விளைவாக குறைவான கலோரிகள் எரிக்கப்படுகின்றன. இதனால், ஆற்றல் அளவுகள் குறைந்து சோர்வு ஏற்பட தொடங்கும்.