Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Liver Disease: ஆரோக்கியமான இந்த உணவுகள்.. கல்லீரலுக்கு தொல்லை தருமா..?

Liver Disease: ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் பொதுவாக தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவுகளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்த உணவுகளில் சில மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன. அந்தவகையில், நமது உணவில் உள்ள சில ஆரோக்கியமான உணவுகள் எவை கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்வோம். 

Liver Disease: ஆரோக்கியமான இந்த உணவுகள்.. கல்லீரலுக்கு தொல்லை தருமா..?
கல்லீரல் ஆரோக்கியம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Dec 2025 17:37 PM IST

சமீப காலமாக கல்லீரல் நோய்கள் (Liver diseases) வேகமாக அதிகரித்து வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினரிடையே இதுபோன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் (Patients) எண்ணிக்கை சீராக அதிகரித்து வருகிறது. கல்லீரலுக்குள் கொழுப்பு படிப்படியாகக் குவிவதால் இந்த நிலை காலப்போக்கில் சிக்கலாகி, கல்லீரல் செயல்பாடு பலவீனமடையும். ஆரம்பத்தில், கல்லீரல் நோயின் அறிகுறிகள் லேசானவையாக தோன்றலாம். அதன்படி, ஆரம்ப கட்டங்களில் இதை புறக்கணிப்பது கடுமையான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரல் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், கல்லீரல் சிரோசிஸ் போன்ற கடுமையான நிலைமைகளுக்கு வழிவகுக்கும். கொழுப்பு கல்லீரல் கல்லீரல் சேதத்தைத் தொடங்கி, சிரோசிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்பு போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.

ஆரோக்கியத்தில் அக்கறை கொண்டவர்கள் பொதுவாக தங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சில உணவுகளை தங்கள் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வார்கள். இந்த உணவுகளில் சில மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகின்றன. இருப்பினும் இந்த உணவுகள் உங்கள் கல்லீரலுக்கு ஆபத்தானவையாக மாறி, கொழுப்பு கல்லீரலை ஏற்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? அந்தவகையில், நமது உணவில் உள்ள சில ஆரோக்கியமான உணவுகள் எவை கல்லீரலுக்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றன என்பதை தெரிந்து கொள்வோம்.

பேக் செய்யப்பட்ட ஜூஸ்:

கடைகளில் கிடைக்கும் ப்ரஷ் ஜூஸ்களுக்கு பதிலாக, வணிக ரீதியாக கிடைக்கும் பேக் செய்யப்பட்ட ஜூஸ்கள் மீது அதிக விருப்பம் கொள்கிறோம். அதாவது, பேக் செய்யப்பட்ட ஜூஸ்களில் சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. இதன் பிரக்டோஸ் நேரடியாக கல்லீரலில் குவிந்து கொழுப்பு குவிய செய்கிறது. இதனால் கொழுப்பு கல்லீரல் அபாயம் அதிகரிக்கிறது. அதேநேரத்தில், பழங்களை கொண்டு ப்ரஷாக தயாரிக்கப்பட்ட பழச்சாறுகள் கூட குறைந்த நார்ச்சத்து காரணமாக மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுவதில்லை. எனவே, சாறுகளுக்கு பதிலாக முழு பழங்களை சாப்பிடுவது கல்லீரலுக்கு அதிக நன்மை பயக்கும்.

ALSO READ: பெண்களே உஷார்! தொப்புளில் அடிக்கடி வலியா? இந்த பிரச்சனைகளாக இருக்கலாம்!

சுவையான தயிர்:

தயிர் ஆரோக்கியமானது என்றாலும் வணிக ரீதியாகக் கிடைக்கும் சுவையூட்டப்பட்ட தயிரில் நிறைய சர்க்கரை மற்றும் செயற்கை சுவைகள் உள்ளன. இவை கல்லீரலில் வீக்கம் மற்றும் கொழுப்பு படிவுகளின் அபாயத்தை அதிகரிக்கின்றன. நீங்கள் தயிரை எடுத்துகொள்ள விரும்பினால், சாதாரண தயிர் அல்லது வீட்டில் தயாரிக்கப்பட்ட தயிர் குடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

ஓட்ஸ் பாக்கெட்டுகள்:

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று பலரும் ஓட்ஸை எடுத்து கொள்கிறார்கள். ஓட்ஸ் ஆரோக்கியமானது என்றாலும், இப்படியான ஓட்ஸில் சர்க்கரை, சுவையூட்டும் தன்மை மற்றும் சோடியம் அதிகமாக உள்ளது. இந்த பொருட்கள் ஜீரணிக்க எளிதாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உட்கொள்வது கல்லீரலில் அழுத்தத்தை அதிகரிக்கும்.

தானியங்கள்:

பிரட் மற்றும் வெள்ளை அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் கொழுப்பு கல்லீரலில் சேரும் அபாயத்தை அதிகரிக்கின்றன. இவை விரைவாக ஜீரணமாகி இரத்த சர்க்கரையை விரைவாக அதிகரிக்கச் செய்து, கல்லீரலில் அழுத்தத்தை அதிகரிக்கும். 100% கோதுமை ரொட்டி அல்லது பாஸ்தா கூட அதிக அளவில் சாப்பிடும்போது கல்லீரலில் அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை குவிக்கச் செய்யும்.

ALSO READ: காலையில் செய்ய வேண்டிய முக்கிய 3 விஷயங்கள்.. இவை ஆற்றலை அதிகரிக்கும்..!

கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பேண என்ன சாப்பிட வேண்டும்?

ஆரோக்கியமான கல்லீரலைப் பராமரிக்க நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளை எடுத்து கொள்வது அவசியம். பச்சை காய்கறிகள், பீன்ஸ், கஞ்சி, பழங்கள், சாலடுகள் மற்றும் தானியங்கள் கல்லீரலைச் சுத்தப்படுத்தவும் கொழுப்பு சேர்வதைத் தடுக்கவும் உதவுகின்றன. மீன், வால்நட்ஸ் மற்றும் சியா விதைகள் போன்ற ஒமேகா-3 உணவுகள் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கின்றன.

இதுமட்டுமின்றி, இனிப்பு சேர்க்காத காபி, கிரீன் டீ, எலுமிச்சைப் பழம் மற்றும் போதுமான தண்ணீர் கல்லீரலை நச்சு நீக்க உதவுகிறது. ரெட் மீட் மற்றும் வறுத்த உணவுகளைத் தவிர்ப்பது முக்கியம்.