Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

With Love: ‘வித் லவ்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தொலைக்காட்சி?

With Love Movie Satellite Rights: அறிமுக இயக்குநராக சினிமாவில் நுழைந்து தற்போது சினிமாவில் கதாநாயகனாக நடித்துவருபவர் அபிஷன் ஜீவிந்த். இவரின் நடிப்பில் வித் லவ் என்ற படமானது வெளியீட்டிற்கு தயாராகியுள்ள திரைப்படம்தான் வித் லவ். இந்த படத்தின் வெளியீட்டிற்கு முண்ணனி இதன் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பிரபல நிறுவனம் வாங்கியுள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

With Love: ‘வித் லவ்’ படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை பெற்ற பிரபல தொலைக்காட்சி?
வித் லவ் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 31 Jan 2026 20:23 PM IST

தமிழ் சினிமாவில் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவராக இருப்பவர் சௌந்தர்யா ரஜினிகாந்த் (Soundarya Rajinikanth). இவர் இயக்குநராகவும் படத்தை இயக்கியுள்ளார். அந்த வகையில் பல ஆண்டுகளுக்கு பின் இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள புது படம்தான் வித் லவ் (With Love). இப்படத்தில் டூரிஸ்ட் பேமிலி பட இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் (Abhishan Jeevinth) கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக மலையாள திரைப்பட நடிகை அனஸ்வரா ராஜன் (Anaswara Rajan) நடித்துள்ளார். இவர் இப்படத்தின் மூலமாகத்தான் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் இதற்க்கு முன் திரிஷாவின் (Trisha) நடிப்பில் வெளியான ராங்கி என்ற படத்தில் 2வது நடிகை வேடத்தில் இவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வித் லவ் படமானது பள்ளிப்பருவ காதல் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த திரைப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் அட்லீ (Atlee) வெளியிட்டிருந்தார். அந்த வகையில் தற்போது இப்படத்தின் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையையும் பிரபல நிறுவனமானது வாங்கியுள்ளது. அது குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: நடிகர் சூர்யா உடன் பணியாற்ற வேண்டும் என்பது என் கனவு – அபிஷன் ஜீவிந்த்

வித் லவ் படத்தின் டைட்டிலைட் ரிலீஸ் உரிமையை வாங்கிய நிறுவனம் குறித்த அறிவிப்பு பதிவு :

இந்த வித் லவ் திரைப்படத்தில் சாட்டிலைட் ரிலீஸ் உரிமையை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி நிறுவனமானது வாங்கியுள்ளது. இதன் காரணமாக, இப்படத்தின் திரையரங்க ரிலீசிற்கு பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வித் லவ் படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

வித் லவ் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பெட்ரா நிறுவனம் :

இந்த வித் லவ் படமானது அபிஷன் ஜீவிந்தின் நடிப்பில் வெளியாகும் முதல் திரைப்படமாகும். இவர் ஹீரோவாக இப்படத்தின் மூலமாக அறிமுகமாகும் நிலையில், இப்படம் டூரிஸ்ட் பேமிலி திரைப்படத்தைப் போலவே வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: தீபிகா படுகோனின் இடத்தை நிரப்பும் சாய் பல்லவி.. எந்த படத்தில் தெரியுமா?

அந்த விதத்தில் இப்படம் வரும் 2026 பிப்ரவரி 6ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் வெளியீட்டிற்கு பின் 4 முதல் 6 வாரங்களுக்கு பின்னே ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது. அந்த விதத்தில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்பிளிக்ஸ் வாங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.