Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இதுதான் ட்ரான்சிஸன்.. பூக்கியாக மாறிய AK – வைரலாகும் வீடியோ!

Ajith Kumar Viral Video : தென்னிந்திய சினிமாவில் நடிகராகவும், கார் ரேஸராகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருப்பவர் அஜித் குமார். இந்நிலையில் சமீபத்தில் வீடியோ ஒன்றில் அஜித் குமார் செய்த ட்ரான்சிஸன் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. அது குறித்து பார்க்கலாம்.

இதுதான் ட்ரான்சிஸன்.. பூக்கியாக மாறிய AK – வைரலாகும் வீடியோ!
அஜித் குமார் வைரல் வீடியோ
Barath Murugan
Barath Murugan | Published: 31 Jan 2026 20:22 PM IST

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) தமிழ் சினிமாவில் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்துவருகிறார். தளபதி விஜய்யின் (Thalapathy VIjay) போலவே இவர் வேறு எந்த மொழி படங்களிலும் நடிப்பதற்கு ஆர்வம் காட்டவில்லை. அந்த விதத்தில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இப்படம் கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றியை பெற்றிருந்தது. இந்த படத்தை அடுத்தாக நடிகர் அஜித் குமார் கார் ரேஸில் முழுமையாக இறங்கியுள்ளார். கிட்டத்தட்ட 1 ஆண்டுக்கும் மேலாக முழுமையாக கார் ரேஸ் (Car Race) பயிற்சியிலும், போட்டியிலும் கவனத்தை செலுத்திவருகிறார். மேலும் இவர் சமீபத்தில் துபாயில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டியிலும் கலந்துகொண்டார். இந்நிலையில் அந்த போட்டியின்போது இவரின் கார் தீப்பற்றி எறிந்த காரணத்தால் இவரின் அணி அந்த போட்டியில் இருந்து விலகியது. இந்நிலையிலும் தற்போது கார் ரேஸ் பயிற்சியில் அஜித் குமார் இருந்துவருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கும் ட்ரான்சிஸன் வீடியோ ஒன்றில் அஜித் குமார் செய்திருந்த நிலையில், அது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. தற்போதுள்ள ட்ரெண்ட்டிற்கு ஏற்றதுபோல அஜித் குமார் செய்த இந்த விஷயம் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: சங்கரின் வேள்பாரி படத்தில் இரண்டு நாயகனா? எந்த நடிகர்கள் நடிக்கிறார்கள் தெரியுமா?

இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெரும் அஜித் குமாரின் வீடியோ :

அஜித் குமாரின் புது படத்தின் ஷூட்டிங் எப்போது :

அஜித் குமார் அடுத்தாக AK64 என்ற படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கவுள்ள நிலையில், இது ஒரு கடத்தல் சார்ந்த கதைக்களம் கொண்ட திரைப்படமாக உருவாக்கவுள்ளது. மேலும் இப்படம் முழுக்க குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்திருந்தார். இதில் அஜித் குமார் லீட் நாயகனாக நசடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீலீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் ரவிசந்தர் இயக்கயமைக்கவுள்ள நிலையில், இன்னும் எந்த தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் வெளியாகவில்லை.

இதையும் படிங்க: தூசி தட்டப்படும் வெங்கட் பிரபுவின் பார்ட்டி படம்… ரிலீஸ் குறித்து வெளியான அப்டேட்

இப்படத்தின் ஷூட்டிங் வரும் 2026 ஆண்டு பிப்ரவரி மாதத்தின் இறுதிக்குள் துவங்கும் என இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த படத்தை ஆரம்பத்தில் 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்ட நிலையில், தற்போது இப்படம் 2027ம் ஆண்டு பொங்கல் அல்லது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.