Health Tips: காலையில் செய்ய வேண்டிய முக்கிய 3 விஷயங்கள்.. இவை ஆற்றலை அதிகரிக்கும்..!
Healthy Morning Habits: உங்கள் காலை வழக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதுதான் முழு நாளையும் நிர்ணயிக்கும். பலர் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நாள் முழுவதும் வாயு (Gas), அமிலத்தன்மை மற்றும் பலவீனம் போன்ற பல்வேறு உடல் பிரச்சனைகளை கொடுக்கலாம்.
காலை நேரம் அனைவருக்கும் மிக மிக முக்கியமானது. காலையில் (Morning Habits) சில விஷயங்களை தொடங்கவில்லை என்றால், அன்றைய நாள் முழுவதும் சோர்வு அல்லது பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதன்படி, சுருக்கமாக சொன்னால், காலையில் நீங்கள் என்ன செய்கிறீர்கள் அல்லது உங்கள் காலை வழக்கத்தில் என்ன செய்கிறோம் என்பதுதான் முழு நாளையும் நிர்ணயிக்கும். பலர் அறியாமலேயே சில தவறுகளைச் செய்கிறார்கள். இதனால் நாள் முழுவதும் வாயு (Gas), அமிலத்தன்மை மற்றும் பலவீனம் போன்ற பல்வேறு உடல் பிரச்சனைகளை கொடுக்கலாம். இவற்றைத் தவிர்க்க காலையில் நீங்கள் செய்யக்கூடாத சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கேரட் சாப்பிடுவதை யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்! எவ்வளவு சாப்பிடுவது நல்லது?
காலை சூரிய ஒளி:
நமது தாத்தா பாட்டி காலத்தில் சூரிய உதயத்திற்கு முன்பே எழுந்து குளித்துவிட்டு சூரிய உதயத்தின்போது சூரியனை கும்பிட்டு வழிபட்டார்கள். இது அவர்களுக்கு தேவையான வைட்டமின் டியை கொடுத்தது. ஆனால், இன்றைய நவீன வாழ்க்கையில் பலர் காலையில் எழுந்து தங்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்தத் தொடங்குகிறார்கள். மேலும், வெளியேயும் வருவது கிடையாது. இதனால் அவர்களுக்கு தேவையான காலை சூரிய ஒளி கிடைப்பதில்லை. இருப்பினும், காலை சூரிய ஒளி ஆரோக்கியத்திற்கு முக்கியமானது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதாவது, காலை சூரிய ஒளியில் 5-10 நிமிடங்கள் நிற்பது அல்லது அமர்ந்திருப்பது மகிழ்ச்சியான ஹார்மோன் செரோடோனின் அளவை அதிகரிக்கிறது. காலை சூரிய ஒளி உங்களுக்குக் கிடைக்காதபோது, உங்களுக்கு தேவையான வைட்டமின் டி கிடைப்பதில்லை. இது நாள் முழுவதும் சோம்பலுக்கு வழிவகுக்கும்.




வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி:
பலருக்கு காலையில் எழுந்ததும் டீ அல்லது காபி இல்லாமல் அன்றைய நாட்களை தொடங்குவது கிடையாது. அதாவது, வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் மிகவும் மோசமானது. வெறும் வயிற்றில் காஃபின் மற்றும் அமில பானங்கள் எடுத்து கொள்வது வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரிக்கும். அமிலத்தன்மையை அதிகரிக்கும்போது வாந்தி, குமட்டல், வயிற்று வலி மற்றும் வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும். எனவே, காலையில் எழுந்து முதலில் சூடான நீரை குடிக்கலாம். இது வயிற்றில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவி செய்யும்.
ALSO READ: குளிர்காலத்தில் காலையில் இந்த உணவுகளா? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு!
உடற்பயிற்சி போன்ற உடல் செயல்பாடு:
பலர் ஒரு பரபரப்பான நாளுக்குப் பிறகு மாலையில் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி மேற்கொள்கிறார்கள். இருப்பினும், மாலையில் உடற்பயிற்சி செய்வது உடலை மிகவும் சுறுசுறுப்பாக்கும் என்றால், மூளைக்கு தேவையான சுறுசுறுப்பை தராது. இது இரவு தாமதமாக தூங்குவதற்கும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளுக்கும் வழிவகுக்கும். இந்த சூழ்நிலையில், உங்கள் சோம்பல் மற்றும் பலவீனம் அதிகரிக்கக்கூடும். எனவே காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதே நல்லது.