Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Milk Intolerance: பால் குடித்த பிறகு உங்களுக்கு வாயு பிரச்சனைகள் ஏற்படுகிறதா? அதற்கான காரணங்கள்!

Lactos Intolerance: உலக மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேரும் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களாக உள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது கூட தெரியாது. இந்த பிரச்சனை மிகவும் பொதுவானது. அந்தவகையில், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

Milk Intolerance: பால் குடித்த பிறகு உங்களுக்கு வாயு பிரச்சனைகள் ஏற்படுகிறதா? அதற்கான காரணங்கள்!
பால் குடித்தால் ஏற்படும் பிரச்சனைகள்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 31 Oct 2025 15:13 PM IST

பால் குடித்த பிறகு அல்லது பால் பொருட்களை (Dairy products) சாப்பிட்ட பிறகு உங்களுக்கு எப்போதாவது வீக்கம், வாயு, வாந்தி அல்லது வயிற்று அசௌகரியம் ஏற்பட்டிருக்கிறது என்றால் இது லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்று அழைக்கப்படுகிறது. தேசிய மருத்துவ நூலகத்தின்படி, தோராயமாக 60 சதவீத இந்தியர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். மேலும், உலக மக்கள் தொகையில் சுமார் 65 சதவீதம் பேரும் லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவர்களாக (Lactos Intolerance) உள்ளனர். பெரும்பாலான மக்கள் தங்களுக்கு இந்த பிரச்சனை இருப்பது கூட தெரியாது. இந்த பிரச்சனை மிகவும் பொதுவானது. அந்தவகையில், லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்றால் என்ன? இந்த நிலை யாருக்கு அதிகம் பாதிக்கப்படுகிறது? இது ஏன் ஏற்படுகிறது, அதற்கான அடிப்படைக் காரணம் என்ன? நீங்களும் இதே கேள்வியை கேட்டால், இந்த செய்தி உங்களுக்கானது. இதனை பற்றிய முழு விவரங்களையும் இங்கு தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ஆரோக்கியமான கல்லீரல் செயல்பட வேண்டுமா..? இவை உணவில் இடம்பெறுவது கட்டாயம்!

லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்றால் என்ன..?

லாக்டோஸ் சகிப்புத்தன்மையின்மை என்பது ஒரு பொதுவான செரிமான பிரச்சனையாகும். இதில், உஙக்ள் உடல் பால் மற்றும் பால் பொருட்களில் காணப்படும் ஒரு சர்க்கரையான லாக்டோஸை முழுமையாக ஜீரணிக்க முடியாது. இது உங்கள் சிறுகுடல் போதுமான அளவு லாக்டேஸ் நொதியை உற்பத்தி செய்யாததால் ஏற்படுகிறது. இதுதான் லாக்டோஸை உடைக்க உதவி செய்யும். இந்த நிலை உயிருக்கு ஆபத்தானது அல்ல என்றாலும் வயிற்று வலி, வாயு மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தும். இதற்கு சிகிச்சை என்றும் எதுவும் இல்லை. இருப்பினும், உங்கள் உணவில் பால் மற்றும் பால் பொருட்களின் அளவை குறைப்பதன் மூலம் இந்த பிரச்சனை ஏற்படாமல் தடுக்கலாம்.

லாக்டோஸ் சகிப்புத்தன்மை உங்கள் உடலில் என்ன செய்யும்..?

சாதாரண மனிதர்களுக்கு சிறுகுடலில் உள்ள லாக்டேஸ் நொதி பால் சர்க்கரையை உடைத்து உடலால் எளிதில் உறிஞ்சப்படுகிறது. இருப்பினும், லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் போதுமான லாக்டேஸை உற்பத்தி செய்வதில்லை. இதன் விளைவாக, லாக்டோஸ் உடைக்கப்படாமல் இருந்து நேரடியாக பெருங்குடலுக்குள் செல்கிறது. இங்கு, அது பாக்டீரியாவுடன் இணைந்து வாயு, வீக்கம் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.

ALSO READ: வெறும் வயிற்றில் வைட்டமின் டி சப்ளிமெண்ட்.. இது பலன் தருமா..? விரிவான பார்வை!

சிலருக்கு பால் குடித்த பிறகு சோர்வு, தலைவலி மற்றும் மூட்டு வலியும் ஏற்படலாம். ஆசிய மற்றும் ஆப்பிரிக்க மக்களிடையே லாக்டோஸ் சகிப்புத்தன்மை அதிகமாகக் காணப்படுகிறது. பால் குடித்த சில மணி நேரங்களிலேயே அறிகுறிகள் தோன்றத் தொடங்குகின்றன. அறிகுறிகள் கடுமையாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இந்தப் பிரச்சனைக்கு இரைப்பை குடல் மருத்துவரைப் பார்ப்பது நல்லது.