அஜீரணம் – வாயு பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டுமா? காலையில் இந்த உணவுகளை டிரை பண்ணுங்க
Gut Health : சமீப காலமாக வாழ்க்கை முறை மாற்றம், தவறான உணவுப் பழக்கம் காரணமாக பலரும் செரிமான பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். மருத்துவர் சௌரப் சேத்தி அளித்த பரிந்துரையின் படி செரிமான பிரச்னைகளை சரி செய்ய எடுத்துக்கொள்ள வேண்டிய காலை உணவுகள் பற்றி பார்க்கலாம்.

காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான உணவு. அதனால்தான் நீங்கள் காலையில் சாப்பிடும் முதல் உணவு ஊட்டச்சத்துக்கள் நிறைந்ததாக இருக்க வேண்டும். இது வாயு மற்றும் அஜீரணம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடாது. பிரபல இரைப்பை குடல் நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி தனது இன்ஸ்டாகிராம் (Instagram) பக்கத்தில் இந்த பிரச்னைகளைத் தவிர்க்க ஐந்து காலை உணவுகளை பரிந்துரைத்துள்ளார். டாக்டர் சேதியின் கூற்றுப்படி, இந்த ஐந்து காலை உணவுகளும் (Breakfast) எளிதில் ஜீரணமாகும். அவை குடலுக்கு மிகவும் நல்லது. அவை காலை முழுவதும் உடலுக்கு ஆற்றலை வழங்குகின்றன.
குடல் ஆரோக்கியத்துக்கு எடுத்துக்கொள்ளக் கூடிய காலை உணவுகள்
புளிப்பு சுவையுடயை பிரெட் (Sourdough Bread)
வாழைப்பழம்
பொட்டாசியம் அதிகம். இது உடலில் சோடியம் அளவை சமப்படுத்துகிறது. உடலில் நீர் தேங்குவதைத் தடுக்கிறது. வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.




இதையும் படிக்க : காலை உணவாக சாப்பிடக்கூடாத உணவுகள்.. இது வயிற்றுக்கு பிரச்சனையை தரும்!
டாக்டர் சௌரப் சேத்தியின் இன்ஸ்டாகிராம் பதிவு
View this post on Instagram
தயிர்
இதில் புரோபயாடிக்குகள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியமான குடல்களுக்கு உதவுகின்றன. வாயு உற்பத்தியைக் குறைத்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன. தயிரில் உள்ள லாக்டோஸ் பகுதி பெரும்பாலும் ஜீரணிக்கக்கூடியது.
அவகேடோ
அவகேடோவில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்துள்ளன. அவை சீரான செரிமானத்திற்கு உதவுகின்றன. மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தைத் தடுக்கின்றன.
கிரீன் டீ
கிரீன் டீயில் உள்ள கேட்டசின்கள் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. அவை செரிமான அமைப்பை சரி செய்யும். வீக்கத்தைக் குறைக்கும்.
இதையும் படிக்க : உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருக்கா? ஃபேட்டி லிவர் பிரச்னையாக இருக்கலாம்
சமீப காலமாக வாழ்க்கை முறை மாற்றம் மற்றும் உணவுப் பழக்கம் காரணமாக பலரும் செரிமான பிரச்னையினால் அவதிப்பட்டு வருகின்றனர். ஒருமுறை பாதிக்கப்பட்டால் அதில் இருந்து வெளியே வருவது சிரமமாக இருக்கும். நண்பர்களுடன் வெளியே சென்றாலும் நமக்கு பிடித்த உணவுகளை சாப்பிட முடியாது, மகிழ்ச்சியாக இருக்க முடியாது. இதனால் பலரும் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இந்த பிரச்னையில் இருந்து வெளியே வர கடுமையான டயட்டுகளை எல்லாம் மேற்கொள்ள தேவையில்லை. உணவுப் பழக்கத்தில் சிறிய மாற்றம் கொண்டுவருவதன் மூலம் இந்த பிரச்னையில் இருந்து வெளியே வர முடியும். டாக்டர் சேத்தி பரிந்துரைத்த உணவுகளை முயற்சித்து பார்ப்பதன் மூலம் நம் செரிமான மண்டலத்தை மேம்படுத்தலாம்.
( Disclaimer : இந்த கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. உங்களுக்கு ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், ஒரு மருத்துவரிடம் கலந்தாலோசித்த பிறகு கடைபிடிப்பது மிகவும் நல்லது.)