Health Tips: காய்ச்சல் இருக்கும்போது ஏன் காபி குடிக்கக்கூடாது? இது ஏன் நல்லத்தல்ல..?
Foods To Avoid With Fever: காய்ச்சல் இருக்கும்போது, ஓய்வெடுப்பதும், தூக்கத்தை ஊக்குவிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்வதும் முக்கியம். மேலும் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவது, வெதுவெதுப்பான நீர் அல்லது கஞ்சி குடிப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லது.

வெயில் காலம் (Summer) முடிந்து கிட்டத்தட்ட மழைக்காலம் தொடங்கிவிட்டது. இந்த மாறிவரும் வானிலை காரணமாக பருவகால நோய்கள் ஏற்படும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதன்படி, பலரும் காய்ச்சல் (Fever), சளி போன்ற சிறு உடல்நலப் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றன. ஒருவருக்கு காய்ச்சல் வரும்போது, அவருக்கு எதை சாப்பிட்டாலும் கசப்பை தரும். இதனால், எதுவும் சாப்பிட பிடிக்காது. எனவே இந்த நேரத்தில் டீ அல்லது காபி (Coffee) குடிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படுவது இயற்கையானது. ஆனால் பெரும்பாலான மக்கள் கொஞ்சம் ஆறுதலை காபி மற்றும் டீ குடிக்கிறார்கள் . இருப்பினும், காபியில் காஃபின் அளவு அதிகமாக இருப்பதால், காய்ச்சல் வரும்போது காபியைத் தவிர்ப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். அதன்படி, காய்ச்சல் நேரத்தில் ஏன் காபியை குடிக்கக்கூடாது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
ALSO READ: கால்சியம் குறைபாட்டால் எலும்புகள் மட்டும் பாதிக்காது – இந்த பிரச்னைகளும் ஏற்படலாம்
காய்ச்சல் இருக்கும்போது காபி குடிப்பது ஏன் நல்லதல்ல?
உங்களுக்கு காய்ச்சல் வரும்போது, உங்கள் உடல் ஆற்றலை இழந்து இயல்பாகவே சோர்வடைய டொடங்கும். இந்த நேரத்தில் உங்கள் உடலுக்கு ஓய்வு தேவையான ஒன்று. காய்ச்சலின்போது நீங்கள் காபி குடித்தால், அதில் உள்ள காஃபின் உங்கள் உடலை விழிப்புடன் வைத்திருக்கும் என்பது உண்மைதான். இருப்பினும், காபி, டீ உள்ளிட்ட பானங்களை குடிப்பதும் உங்கள் உடலில் எதிர் விளைவை ஏற்படுத்த தொடங்கும். அதனை தொடர்ந்து, உங்கள் உடல்நலம் மோசமடையும் போது, நீரேற்றத்தை பராமரிப்பது முக்கியம். இருப்பினும், இந்த காபியை குடிப்பதால் சிறுநீர் கழிப்பது அதிகமாகும். இந்த காரணத்திற்காக, இந்த நேரத்தில் காபி குடிப்பது நல்லதல்ல என்று கூறப்படுகிறது. அதாவது, இந்த காபியில் உள்ள காஃபின் உங்களுக்கு தூங்க உதவாது. இது முதலில் உங்கள் உடலில் நீரிழப்பையும் ஏற்படுத்தும்.
எனவே, காய்ச்சல் இருக்கும்போது, ஓய்வெடுப்பதும், தூக்கத்தை ஊக்குவிக்கும் சத்தான உணவுகளை உட்கொள்வதும் முக்கியம். மேலும் எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிடுவது, வெதுவெதுப்பான நீர் அல்லது கஞ்சி குடிப்பது போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். காஃபின் உள்ள பானங்களை முடிந்தவரை உட்கொள்வதைத் தவிர்க்கவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
காய்ச்சலின்போது எதை சாப்பிடக்கூடாது..?
சீஸ்:
சீஸில் ஹிஸ்டமைன் என்ற ரசாயனம் உள்ளது. நார்மல் நாட்களில் இது மிகப்பெரிய அளவில் பிரச்சனையை ஏற்படுத்தாது. அதேநேரத்தில், காய்ச்சல் நாட்களில் ஹிஸ்டமைன் வெளியிடப்படும்போது, இது உடலில் வீக்கம் மற்றும் சளியை ஏற்படுத்தும். எனவே, இத்தகைய நாட்களில் சீஸ் உணவுகளை உட்கொள்வதை தவிர்க்கவும்.
ALSO READ: டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? அதை எவ்வாறு தடுப்பது..?
பால் பொருட்கள்:
காய்ச்சல் நேரத்தில் ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. இது உடலில் சளியை அதிகரிக்க செய்யும். எனவே, சூப் போன்ற ஆரோக்கியமானவற்றை எடுத்துக்கொள்ளலாம்.