Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பது ஆபத்தா? உண்மை என்ன?

Health Myths: சரியான அளவில் குடிப்பது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும், மலச்சிக்கல் சிறுநீரக கற்கள் போன்ற கடுமையான உடல் நல பிரச்னைகளை தடுக்கும். எனினும் நின்றுகொண்டே தண்ணீர் அருந்துவது ஆபத்தானது என்ற எண்ணம் மக்களிடையே இருக்கிறது. அதன் உண்மை என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பது ஆபத்தா? உண்மை என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 08 Sep 2025 23:18 PM IST

நம் பெரியவர்கள் நின்று கொண்டே தண்ணீர் (Water)குடிக்கக் கூடாது என்று கூறுகிறார்கள். ஏனென்றால், இப்படி தண்ணீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்கிறார்கள். குறிப்பாக செரிமான பிரச்னைகளை ஏற்படும் என்றும் முழங்காலில் வலி ஏற்படுத்தும் எனவும் மக்கள் நம்புகின்றனர். இந்த விஷயத்தில் நம் சமூகத்தில் ஒரு நம்பிக்கை உள்ளது. இருப்பினும், இதே பிரச்னைக்கு மருத்துவர்கள் நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.  நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது உண்மையில் நம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துமா? அவர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். இந்த நம்பிக்கைக்குப் பின்னால் எந்த அறிவியல் அடிப்படையும் இல்லை என்று அவர்கள் கூறுகிறார்கள். நின்று கொண்டே தண்ணீர் குடிப்பது அல்லது உட்கார்ந்திருப்பது முழங்கால்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்காது என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பது ஆபத்தா?

நம் உடலில் தண்ணீரை உறிஞ்சுவது என்பது முழங்கால்களுடன் நேரடியாக தொடர் புடைய ஒரு அறிவியல் செயல்முறை அல்ல. ஆனால் செரிமான அமைப்புடன் தொடர்புடையது. நாம் தண்ணீர் குடிக்கும்போது, ​​இந்த நீர் நேரடியாக செரிமான அமைப்புக்குள் செல்கிறது. உடல் அந்த தண்ணீரை உறிஞ்சுகிறது. மூட்டுகளில் குருத்தெலும்பு தேய்மானம், கால்சியம் குறைபாடு அல்லது மூட்டுவலி போன்ற பிரச்னைகளால் பெரும்பாலும் முழங்கால் வலி ஏற்படுகிறது, இது நாம் தண்ணீர் குடிக்கும் விதத்துடன் எந்த தொடர்பும் இல்லை.

இதையும் படிக்க : சாப்பிட்ட உடனே ஏன் குளிக்கக் கூடாது? செரிமான சிக்கலை தருமா..?

இருப்பினும், சிலருக்கு படுத்துக் கொண்டே தண்ணீர் குடிக்கும் பழக்கம் உள்ளது. படுத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும் என்று ஒரு ஊட்டச்சத்து நிபுணர் கூறுகின்றனர். யாராவது படுத்துக் கொண்டே தண்ணீர் குடித்தால்.. அந்த தண்ணீர் உணவுக்குழாயிலிருந்து நேரடியாக வயிற்றுக்குச் செல்கிறது. இது உணவுக் குழாயில் அடைப்பை ஏற்படுத்துகிறது. இது சில நேரங்களில் உடலில் கடுமையான பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, படுத்துக் கொண்டே தண்ணீர் குடிக்கக் கூடாது.

தண்ணீர் குடிப்பது முக்கியம்

நீங்கள் தண்ணீர் குடிக்கும் முறையை விட தண்ணீரின் அளவு மிக முக்கியமானது. எந்தவொரு நபரும் ஒரு நாளைக்கு குறைந்தது 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது சிறுநீரக கற்கள், மலச்சிக்கல் மற்றும் சோர்வு போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கலாம்.

இதையும் படிக்க : வாழைப்பழம் சாப்பிடுவதற்கு சரியான நேரம் எது? காரணம் என்ன?

நின்று கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பதிலாக உட்கார்ந்து மெதுவாகவும் போதுமான அளவிலும் தண்ணீர் குடிக்கவும். ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடிப்பதை விட, சிறிது சிறிதாக தண்ணீர் குடிப்பது நல்லது. மேலும், உட்கார்ந்திருக்கும் போது தண்ணீர் குடிப்பது சிறுநீரகங்களின் சுமையைக் குறைத்து, தண்ணீர் உடலை சீரான முறையில் சென்றடைவதை உறுதி செய்கிறது. எனவே, முடிந்தவரை உட்கார்ந்திருக்கும் போது தண்ணீர் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது.