எடை குறைக்க உதவுவது முதல்… நீரிழிவு நோய் வரை…. பிளாக் காபியில் உள்ள நன்மைகள் பற்றி தெரியுமா?
Black Coffee Benefits : காபி என்பது அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. இது உடலுக்கு உடனடி புத்துணர்வை வழங்குகின்றன. குறிப்பாக பிளாக் காபியில் எடை குறைப்பது முதல் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவது வரை உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது.

பிளாக் காபி (Black Coffee) உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. காபியை பொதுவாக நாம் பால், சர்க்கரை கலந்து குடிப்பது தான் நம்மில் பெரும்பாலானோருக்கு குடிக்க பிடிக்கும். ஆனால் அப்படி குடிப்பதால் எந்த பலனும் கிடைக்காது. குறிப்பாக சர்க்கரை கலந்து கொடிப்பதால் அது நம் உடலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். அதே நேரம் கருப்பு காபி கசப்பாக இருந்தாலும் அதில் பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இது நம் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குவதுடன் நீரிழிவு நோய் (Diabetic) அபாயத்தையும் குறைப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த கட்டுரையில் பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
பிளாக் காபியினால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்
பிளாக் காபி குடிப்பதால் உடலுக்கு உடனடி ஆற்றல் கிடைக்கும். எனவே நீங்கள் வேலைகள் செய்து சோர்வாகவோ அல்லது சோம்பலாகவோ உணர்ந்தால், உடனடி ஆற்றலுக்கு பிளாக் காபி குடிக்கலாம். இது புத்துணர்ச்சி அளிக்கின்றன. பிளாக் காபியில் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், தாதுக்கள், ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளன. இவை நம் உடலுக்கு தேவையான நன்மைகளை வழங்குகின்றன.
இதையும் படிக்க : தூங்கும் முன் சூடான பால் குடித்தால் என்ன நடக்கும்? மருத்துவர்கள் சொல்வது என்ன?
எடை குறைக்க உதவும்
எடை அதிகரிப்பது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்கள் என்றால் பிளாக் காபி குடிக்கலாம். இதனால் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிப்பதோடு, உடலில் இருந்து கலோரிகளை எரிக்கிறது. மேலும் உடலில் அதிகப்படியான கொழுப்பையும் குறைக்கிறது.
கவனத்தை அதிகரிக்கிறது
காபியில் உள்ள காஃபின் மூளை செல்களை துரிதப்படுத்த உதவுகிறது. காபி குடிப்பது நினைவாற்றலை அதிகரிக்கிறது மேலும் கவனத்தை அதிகரிக்கிறது. அலுவலகத்தில் வேலை செய்யும் போது நீங்கள் சோம்பலாக உணர்ந்தால், நீங்கள் பிளாக் காபி குடிக்கலாம். பிளாக் காபி குடிப்பது மன அழுத்தத்தைக் குறைக்கிறது. மனநிலையும் மேம்படும்.
இதையும் படிக்க : வெறும் வயிற்றில் தயிர் சாப்பிடலாமா..? யார் யார் சாப்பிடக்கூடாது..?
நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கிறது
பிளாக் காபி குடிப்பது உடலில் இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கிறது. இது இரத்த குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது. கருப்பு காபி குடிப்பது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. தினமும் காபி குடிப்பது நீரிழிவு நோயின் அபாயத்தைக் குறைக்கும்.
பிளாக் காபியின் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்ற போதும் அதனை மருத்துவர்களின் ஆலோசனைகளுக்கு பிறகே எடுத்துக்கொள்ள வேண்டும். பிளாக் காபியினால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படும். அதிக இரத்த அழுத்த பிரச்னை உள்ளவர்கள் பிளாக் காபி எடுத்துக்கொள்வதற்கு முன் மருத்துவர்களிடம் கலந்தாலோசித்த பிறகு எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக சர்க்கரை இல்லாமல் குடிப்பதே முழு நன்மைகள் கிடைக்கும் என்பதை மனதில் கொள்ளவும்.