AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சர்வதேச விமான நிலையமான மதுரை… தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் மாற்றம் – வெளியான அறிவிப்பு

Madurai Becomes International Airport: மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவிக்க வேண்டும் என தமிழக மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் மார்ச் 14, 2026 அன்று மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து இதுகுறித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையமான மதுரை… தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயர் மாற்றம் – வெளியான அறிவிப்பு
மதுரை சர்வதேச விமான நிலையம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Mar 2026 18:41 PM IST

மதுரை, மார்ச் 14 :  இந்த நிலையில் இதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் மார்ச் 14, 2026 அன்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக அறிவித்து இதுகுறித்து அரசாணையும் வெளியிட்டுள்ளது. முன்பு மதுரையில் இருந்து சென்னை போன்ற நகரங்களுக்கு சென்று அங்கிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை இருந்தது. இந்த நிலையில் தற்போது மதுரையில் இருந்தே நேரடியாக வெளிநாடுகளுக்கு விமான பயணம் மேற்கொள்ள முடியும்.

சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்வு

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட வேண்டுமம் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த மார்ச் 10, 2026 அன்று மத்திய விமான போக்குவரத்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் தற்போது இதற்கான அரசாணை மார்ச் 14, 2026 அன்று வெளியிடப்பட்டது. அதில், மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக உடனடியாக செயல்பாட்டு வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வளிமண்டல கீழடுக்கு சுழற்சியால் மழைக்கு வாய்ப்பு.. எங்கெங்கு தெரியுமா?

தமிழ்நாட்டில் மொத்தம் 10 விமான நிலையங்கள் உள்ளன. இதில் ஓசூர் மற்றும் நெய்வேலி ஆகியவை தனியாருக்கு சொந்தமானது. மேலும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சி ஆகிய 3 சர்வதேச விமான நிலையங்கள் உள்ளன. இது தவவிர தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர் ஆகியவை உள்நாட்டு விமான நிலையங்களாக உள்ளன. இந்த நிலையில் மதுரையும் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் மதுரையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமான போக்குவரத்து துவங்கும். முதற்கட்டமாக மதுரையில் இருந்து துபாய், அபுதாபி, கொழும்பு ஆகிய இடங்களுக்கு விமான சேவைகள் துவங்கும் என கூறப்படுகிறது. வருங்காலங்களில் பிற நாடுகளுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க : சிலிண்டர் தட்டுப்பாடு… தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!

தூத்துக்குடி விமான நிலையத்தின் பயர் மாற்றம்

தூத்துக்குடி விமான நிலையத்தின் பெயரை ஆங்கிலத்தில் Thoothukudi Airport என மாற்றி மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். முன்னதாக Tuticorin Airport என இடம் பெற்றிருந்த நிலையில் தற்போது தமிழுக்கு ஏற்ப மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தூத்துக்குடி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

Follow Us