Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்க வேண்டுமா? இந்த தினசரி பழக்கங்களை டிரை பண்ணுங்க!

Diabetes Care : இன்றைய காலகட்டத்தில் வாழ்க்கை முறை மாற்றம் காரணமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணைக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. சில பழக்கங்களை மாற்றுவதன் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். அது குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நீரிழிவு நோய் பாதிப்பை குறைக்க வேண்டுமா? இந்த தினசரி பழக்கங்களை டிரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 18 Aug 2025 23:14 PM

நம் உடலில் குளுக்கோஸ் அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். இவை அதிகரித்தால், நீரிழிவு நோய் (Diabetic) போன்ற உடல்நலப் பிரச்னைகள் ஏற்படலாம். ஒரு காலத்தில் இந்த நோய் பெரும்பாலும் வயதானவர்களிடம் காணப்பட்டது. ஆனால் இப்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுகிறது. இதற்கு நம் வாழ்க்கை முறை மாற்றம் முக்கிய காரணம். சர்க்கரை நோய் காரணமாக இதயம், சிறுநீரகம் (Kidney) மற்றும் கண்கள் போன்ற பிரச்னைகளின் அபாயத்தையும் ஏற்படுத்துகிறது. இருப்பினும், நம் அன்றாட வாழ்க்கையில் சில பழக்கங்களைப் பின்பற்றினால், இயற்கையாகவே இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உணவு

நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் உணவில் இருந்து சர்க்கரை விரைவாக இரத்தத்தில் நுழைவதைத் தடுக்கிறது. எனவே அதிக காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் மற்றும் தானியங்களை சாப்பிடுவது நல்லது. மேலும், சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறிப்பாக வெள்ளை அரிசி, இனிப்புகள், பிரெட் ஆகியவற்றை சாப்பிடுவதை குறைக்க வேண்டும். டீ மற்றும் காபியில் சர்க்கரையை குறைவாகப் பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிக்க : வலி நிவாரணிகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள்.. இவற்றை சரியாக எப்படி கையாள்வது..?

உடற்பயிற்சி

தினசரி உடற்பயிற்சி செய்வது உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், இன்சுலின் சரியாகச் செயல்படவும் உதவுகிறது. இது இயற்கையாகவே இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறது. நடைபயிற்சி, ஜாகிங், நீச்சல் மற்றும் சைக்கிள் ஓட்டுதல் போன்ற பயிற்சிகள் மிகவும் நல்லது. போதுமான தூக்கம் பெறுவதும் மிகவும் முக்கியம்.

மன அழுத்தம்

மன அழுத்தம் அதிகரித்தால், இரத்த குளுக்கோஸ் அளவு அதிகரிக்கிறது. ஏனெனில் கார்டிசோல் மற்றும் குளுக்ககான் போன்ற ஹார்மோன்கள் மன அழுத்தத்தின் போது அதிகமாக வெளியிடப்படுகின்றன. இவை இரத்த சர்க்கரையை அதிகரிக்கின்றன. எனவே, யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சி மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன.

 இதையும் படிக்க : இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் இயற்கை உணவுகள் – அவற்றின் நன்மைகள் என்ன?

தண்ணீர்

நாள் முழுவதும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உடலில் உள்ள அதிகப்படியான சர்க்கரையை சிறுநீர் மூலம் வெளியேற்ற உதவுகிறது. ஆராய்ச்சியின் படி, அதிக தண்ணீர் குடிப்பவர்களுக்கு இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் அபாயம் குறைவு.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துவதைத் தவிர்க்கவும். நீரிழிவு அறிகுறிகள் தெரிந்தால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். உங்கள் சர்க்கரை அளவை நீங்கள் தொடர்ந்து சோதிக்க வேண்டும். இந்த குறிப்புகள் உங்கள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இருப்பினும், ஏற்கனவே நீரிழிவு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் இவற்றைப் பின்பற்ற வேண்டும்.