குடல் ஆரோக்கியம் மோசமடைவதை காட்டும் அறிகுறிகள் – தவிர்க்க வேண்டிய உணவுகள் என்ன?
Gut Health Guide : குடல் ஆரோக்கியம் தான் நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்த கட்டுரையில் குடல் ஆரோக்கியம் மோசமடைவதன் அறிகுறிகள் என்ன ? தவிர்ப்பதற்கு என்ன மாதிரியா உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நாம் உண்ணும் உணவு நம் ஆரோக்கியத்தில் நிறைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குடல் ஆரோக்கியம் (Gut Health) நன்றாக இருந்தால், பிற உடல்நலப் பிரச்னைகள் நன்றாக இருக்கும். குடல் ஆரோக்கியம் என்பது குடல் ஆரோக்கியத்தைப் பற்றியது மட்டுமல்ல. இது நமது செரிமான அமைப்பு, நோய் எதிர்ப்பு சக்தி,(Immunity) மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபடுவது மற்றும் வாயு ஆகியவற்றைக் குறிக்கிறது. அனைவரின் செரிமான அமைப்பும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலர் சில உணவுகளால் பாதிக்கப்படுகிறார்கள். அதனால்தான் ஒருவரின் செரிமான அமைப்பை மற்றொருவருடன் ஒப்பிடுவது சரியல்ல. நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் வளர உதவுகின்றன. தவறான உணவுகளை சாப்பிட்டால், நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கை குறைந்து, குடல் தொடர்பான பிரச்சனைகள் தொடங்குகின்றன. இந்த கட்டுரையில் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம்.
குடல் ஆரோக்கியம் மோசமடைவதைக் காட்டும் அறிகுறிகள்
சிறிய வேலைகளைச் செய்த பிறகும் நீங்கள் சோர்வாக உணர்ந்தால், அல்லது குறைவாக சாப்பிட்ட பிறகும் வயிறு நிரம்பியதாக உணர்ந்தால், அது உங்கள் குடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் உடல் ஆரோக்கியம் உங்கள் குடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. அதனால்தான் ஆரோக்கியத்தைப் பராமரிக்க, குடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும். குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் முக்கியமான உணவுகளைப் பற்றி இப்போது அறிந்து கொள்வோம்.
இதையும் படிக்க : குடல் ஆரோக்கியத்திற்கு அற்புதம் செய்யும் இயற்கை பானம் என்ன?
நார்ச்சத்து உணவுகள்
செரிமான அமைப்பை மேம்படுத்த நார்ச்சத்து மிகவும் முக்கியமானது. இது வயிறு நிரம்பிய உணர்வைத் தருவது மட்டுமல்லாமல், ஆஸ்துமா, மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்னைகளையும் குறைக்கிறது. பழங்கள், கீரைகள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் அனைத்தும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள்.
புளித்த உணவுகள்
புளித்த உணவுகள் இயற்கையாகவே புரோபயாடிக்குகள் நிறைந்தவை. இது உடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கிறது. தயிர், மோர், இட்லி மாவு மற்றும் தோசை மாவு போன்ற உணவுகள் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இவை குடல் ஆரோக்கியத்தை பெரிதும் மேம்படுத்துகின்றன.
இதையும் படிக்க : கண்களை ஆரோக்கியமாக பராமரிக்க வேண்டுமா? இந்த உணவுகளை தினமும் எடுத்துக்கொள்வது அவசியம்
தவிர்க்க வேண்டிய உணவுகள்
- பொரித்த உருளைக்கிழங்கு போண்டா, பஜ்ஜி, சிப்ஸ் போன்றவை குடல் அமைப்பை பாதிக்கும்.
- கேக், கூல் டிரிங்க்ஸ், ஜூஸ் போன்றவை குடலில் நல்ல பாக்டீரியாவை குறைத்து, மோசமான பாக்டீரியாவை அதிகரிக்கும்.
- பேக் செய்யப்பட்ட ஸ்னாக்ஸ், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், பிஸ்கட் போன்றவை ரசாயன சேர்க்கைகள் கொண்டதால் குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
- ரெட் மீட் எனப்படும் பீஃப், மட்டன் போன்ற மாமிச உணவுகளை சாப்பிடுவது குடலுக்கு அழற்சியை ஏற்படுத்தும்.
- காரமான உணவுகள் குடலுக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும்.
- அதிக மதுபானம் அல்லது காபி, டீ குடிப்பது குடல் அமைப்பை பாதிக்கும்.