கடைகளில் கொடுக்கும் பில்லை தொட்டால் கேன்சர் வருமா ? சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்
Toxic Receipt Warning : பொதுவாக சிலர் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது பில்லை மறக்காமல் கேட்டு வாங்குவார்கள். அது நம் வாங்கிய பொருட்களையும், செலுத்திய பணத்தையும் உறுதி செய்துகொள்வதற்கான் முக்கிய ஆவணமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அப்படி நாம் வாங்கும் ரசீதுகளால் நம் உயிருக்கே ஆபத்து என சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

கடைகள், உணவகங்கள் (Restaurant) மற்றும் ஏடிஎம்கள் (ATM) ஆகியவற்றில் நமக்கு வழங்கப்படும் ரசீதுகள் நாம் வாங்கிய பொருட்கள் சரியாக இருக்கிறதா என பரிசோதிக்கவும், நம் செலுத்திய பணம் குறித்து தெரிந்துகொள்ள முக்கிய ஆவணமாகும். சிலர் செலவுகளை நிர்வகிக்க கட்டாயமாக ரசீது வாங்கிக்கொள்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அப்படி நாம் வாங்கும் ரசீதுகள் சாதாரணமானவையாக இருந்தாலும் அவை நம் உயிரை பறிக்கக்கூடிய ஆபத்துகள் கொண்டவை என சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. கடைசிகளில் பொருள்கள் வாங்கும்போது நமக்கு அளிக்கப்படும் ரசீதுகளில் உள்ள பிஸ்ஃபீனால் எஸ் (Bisphenol S – BPS) என்ற வேதிப்பொருள் தோல் வழியாக உடலுக்குள் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என சமீபத்திய ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
ரசீதுகளில் உள்ள தீங்கு விளைவிக்கும் வேதிப்பொருள்
பிஸ்ஃபீனால் எஸ் (BPS) என்பது ஹார்மோன்களை பாதிக்கும் ஒரு வேதிப்பொருளாகும். இது ஈஸ்ட்ரஜன் ஹார்மோனை போல வேலைசெய்யும் தன்மையைக் கொண்டுள்ளது. இது உடலின் இயற்கையான செயல்பாடுகள் — வளர்ச்சி, மேம்பாடு, மெட்டபாலிசம் (Metabolism) ஆகியவற்றில் பாதிப்புகளை ஏற்படுத்தும். பிஸ்ஃபீனால் எஸ் என்பது BPA எனப்படும் வேதிப்பொருளின் மாற்று வடிவம். இது கூடுதலாக புற்றுநோய், நரம்பியல் பாதிப்பு, விந்தணு குறைபாடு போன்ற பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இதையும் படிக்க : உணவு பொருட்களில் காணப்படும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு நிறங்கள் – காரணம் என்ன?




தெர்மல் பேப்பரால் வரும் ஆபத்து
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வில், பிஸ்ஃபீனால் (BPA) உடன் தொடர்புடைய ரசீதிகளை தொடுவது, மார்புப் புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களின் அபாயத்தை அதிகரிக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது BPA கைவிடப்பட்டு, அதன் மாற்றாக BPS பயன்படுத்தப்படுகின்றது. ஆனால், அதில் உள்ள வேதிப்பொருள் காரணமாகவும் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையிலானது எனவும் தெரியவந்துள்ளது. தெர்மல் பேப்பர் எனப்படும் ரசீது காகிதங்களில் மேல் பூச்சாக இந்த வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது. இது கடையில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் தினமும் ரசீதுகளை கையாளும் நபர்களுக்கு அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
அமெரிக்காவின் Center for Environmental Health (CEH) எனும் அமைப்பு பர்கர் கிங் டாலர் ஜெனரல் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களில் பயன்படுத்தும் ரசீதுகளில் BPS அளவு மிக அதிகமாக உள்ளது என எச்சரிக்கைகள் அனுப்பியுள்ளது. வெறும் சில விநாடிகள் ரசீதியை தொடுவதால் கூட, பாதுகாப்பு அளவை தாண்டி, BPS உடலில் செல்வதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.
இதையும் படிக்க: வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? ஆச்சரியத் தகவல்!
தற்காப்பு வழிமுறைகள் என்ன?
-
டிஜிட்டல் முறையில் பில்களைப் பெறலாம்.
-
அடிக்கடி ரசீதுகளை கையாளும் ஊழியர்கள் கையுறை (gloves) அணியவும்.
- கைகளை அடிக்கடி ஆல்கஹாலில் கழுவ வேண்டும்.
-
BPS இல்லாத ரசீதிகளை பயன்படுத்தும் நிறுவனங்களை ஆதரிக்கவும்.
-
தெர்மல் காகிதம் பயன்படுத்தப்படுகிறதா என்பதை கவனிக்கவும்.