வாழைப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் என்ன நடக்கும்? ஆச்சரியத் தகவல்!
Banana Health Tips : வாழைப்பழம் உடலுக்கு தேவையான பல நன்மைகளை வழங்குகின்றன. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவது நம்மை நோய்களில் இருந்து பாதுகாப்பை வழங்கும். ஆனால் வாழைப்பழம் சாப்பிட்டவுடன் செய்யக் கூடாத விஷயம் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நம்மில் பலர் நமது ஆரோக்கியமான பழக்கவழக்கங்களின் ஒரு பகுதியாக தினமும் வாழைப்பழங்களை (Banana) சாப்பிடுகிறோம். இது எப்போதும் குறைந்த விலையில் கிடைக்கும் ஒரு சிறந்த உணவு. அதில் மிகச்சிறந்த வைட்டமின் (Vitamin) மற்றும் தாதுக்கள் நிரம்பியுள்ளன. இருப்பினும், வாழைப்பழத்தை சாப்பிட்ட உடனேயே செய்யும் ஒரு பொதுவான தவறு, அது வழங்கும் நன்மைகளை இழக்க வழிவகுக்கும். வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால் வயிற்றுப் பிரச்னைகள் ஏற்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாக உள்ளது. இது தண்ணீரில் கலக்கும்போது, அது செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அஜீரணம், வாயு மற்றும் அமிலத்தன்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் ஏன் குடிக்கக்கூடாது?
வாழைப்பழம் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதால், அதில் உள்ள பொட்டாசியம் தண்ணீரில் கரைந்து, செரிமான அமைப்பைப் பாதிக்கும். இது வயிற்று வலி மற்றும் வீக்கம் போன்ற சிறிய பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். நாம் ஆரோக்கிய நன்மைகளுக்காக உண்ணும் வாழைப்பழங்களை சரியாக எடுத்துக்கொள்ளவிட்டால் அதன் பலன் நமக்கு முழுமையாக கிடைக்காது.
இதையும் படிக்க : தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் வெந்நீர்: உடலுக்கு அற்புதம் தரும் ஆரோக்கியப் பலன்கள்!




எப்போது தண்ணீர் குடிக்க வேண்டும்?
வாழைப்பழம் சாப்பிட்டு குறைந்தது 30 நிமிடங்களுக்குப் பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், அதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் முறையாக எடுத்துக்கொள்ளப்படுகின்றன. செரிமான அமைப்பிலும் எந்தப் பிரச்னையும் ஏற்படாது. உணவுகள் நமக்கு பல நன்மைகள் வழங்கும் என்றாலும் அதனை சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதும் மிக முக்கியம்.
வாழைப்பழம் சாப்பிட சிறந்த நேரம்
காலை உணவுக்கு சிறிது நேரத்துக்கு முன் அல்லது மதியம் சோர்வாக உணரும்போது வாழைப்பழம் சாப்பிடலாம். தயிர் போன்ற ஆரோக்கியமான பொருட்களுடன் சேர்த்து சாப்பிட்டால் அது இன்னும் நல்லது. இது உடலுக்குத் தேவையான ஆற்றலை வழங்குகிறது. இது பசியையும் கட்டுப்படுத்துகிறது.
இதையும் படிக்க : வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன?
வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கியமான நன்மைகள்
- வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. கால்சியம் எலும்புகளை வலிமையாக்குகிறது.
வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்து கிடைக்கும். - வாழைப்பழம் கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் B6, C மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை அதிகமாக கொண்டுள்ளது.
- ழைப்பழத்தில் இருக்கும் டிரிப்டோபன் (tryptophan) என்னும் அமினோ அமிலம், மூளையில் செரோடெனின் உருவாக உதவுவதால் மனஅழுத்தம் குறையும்.
- நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும் வைட்டமின் பி6 மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது.
- நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானம் சிறப்பாக நடைபெறும். மலச்சிக்கல் இருந்தால் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம்.
- வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி இதய நலனை பாதுகாக்கிறது.