Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

உணவு பொருட்களில் காணப்படும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு நிறங்கள் – காரணம் என்ன?

Understanding Food Packet Labels : கடைகளில் கிடைக்கும் உணவு பாக்கெட்களில் சிவப்பு, பச்சை, மஞ்சள், கருப்பு, நீலம் போன்ற நிறங்களில் வட்டங்கள் இருப்பதை பார்த்திருப்போம். அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அர்த்தங்கள் இருக்கின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

உணவு பொருட்களில் காணப்படும் சிவப்பு, பச்சை, நீலம், மஞ்சள், கருப்பு நிறங்கள் – காரணம் என்ன?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 29 Jul 2025 22:07 PM

நாம் கடைகளில் இருந்து பாக்கெட்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்களை (Food Product) வாங்கும் போது, அதில் மூலையில் ஒரு சிவப்பு அல்லது பச்சை வட்டம் இடம்பெற்றிருப்பதா கவனித்திருப்போம். பெரும்பாலானவர்களும் அதன் அர்த்தம் என்ன என்பது தெரியும். ஆனால், உணவுப் பொருட்களில் இவை தவிர பல வண்ணங்களில் சிறிய வட்டங்கள் இருப்பதைக் கவனித்தீர்களா? இந்த வண்ணங்களும் ஒரு முக்கியமான தகவலை வழங்குகின்றன. அது உங்கள் உடல்நலத்துடன் (Health) நேரடியாக தொடர்புடையது. பலருக்கும் இந்த நிறங்களுக்கு பின் இருக்கும் கருத்துகள் தெரியாமல் போகிறது. ஆனால் இனிமேல் நீங்கள் உணவுப் பொருட்கள் வாங்கும் போது, இந்த நிறங்களுக்கான காரணத்தை தெரிந்துகொண்டால், உங்கள் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகளையே தேர்வு செய்ய முடியும்.

உணவுப் பொருட்களில் உள்ள நிறங்களுக்கான காரணம் என்ன?

சிவப்பு வட்டம்

கடைகளில் பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் உணவுப்பொருட்களில் சிவப்பு வட்டம் இருக்கிறது என்றால், அந்த உணவில் அசைவ பொருட்கள் உள்ளன என்று அர்த்தம். அதாவது, அதில் கோழி, ஆட்டு மாட்டிறைச்சி, மீன் அல்லது பிற மாமிசப் பொருட்கள் கலந்திருக்கலாம். சைவம் மட்டுமே பின்பற்றும் நபர்கள் இந்த வகை உணவுகளை தவிர்க்கவேண்டும்.

இதையும் படிக்க : அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான காரணங்கள் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

பச்சை வட்டம் 

இந்த பச்சை நிறம் உள்ள வட்டம் சைவ உணவு என்பதை குறிக்கிறது. அதில் எந்தவிதமான மாமிசம் அல்லது முட்டை கூட இல்லை என்பதை குறிக்கிரது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்கள் இதனை தைரியமாக தேர்வு செய்யலாம்.

நீல வட்டம்

இந்த நீலம் நிற வட்டம் என்பது, அந்த உணவு ஒரு மருத்துவ நோக்கில் மட்டுமே பயன்படவேண்டும் என்பதைக் குறிக்கிறது. இது ஒரு வழக்கமான ஸ்நாக் அல்ல. அவற்றை மருத்துவர் பரிந்துரை செய்யும்போது மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும்.

இதையும் படிக்க : காலையில் வெறும் வயிற்றில் இனிப்புகளை சாப்பிடுவது நல்லதா? மருத்துவர்கள் சொல்வது என்ன?

மஞ்சள் வட்டம்

இந்த வட்டம் இருக்கிறதா என்பதை உணவுப் பொருளை வாங்கும் முன் கவனிக்கவும். அந்த உணவில் முட்டை கலந்திருக்கிறது என்பதைக் குறிப்பது தான் மஞ்சள் வட்டம். இது தனிப்பட்ட காரணங்களுக்காக முட்டை உணவுகளை தவிர்ப்பவர்களுக்கானது. அவர்களுக்கு இது முக்கியமான அடையாளம்.

கருப்பு வட்டம் 

இந்த வட்டம் பெரும்பாலும் பிராசஸ்ட் செய்யப்பட்ட உணவுகள் அல்லது நீண்ட நாட்கள் பயன்படுத்தக் கூடிய பொருட்களில் இருக்கும். இது அந்த உணவில் வேதியியல் கலப்புகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதைக் குறிக்கிறது. இந்த வகை உணவுகளை அடிக்கடி சாப்பிடுவதால் உடல்நிலையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

பல நேரங்களில் நாம் விலை, பிராண்ட் ஆகியவற்றை பார்த்து மட்டுமே உணவுப் பொருட்களை வாங்குகிறோம். ஆனால் இதில் இந்த வட்டங்களை கவனிக்காமல் இருப்பது நம் உடல்நலத்திற்கு ஆபத்தான முடிவுகளைத் தரக்கூடும். சிறிய இவற்றைப் புரிந்துகொள்வதன் மூலம் உங்கள் உடலையும், உணவுப் பழக்கத்தையும் பாதுகாக்க முடியும்.