Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: உடலில் உப்புச்சத்து குறைந்தால் என்ன நடக்கும்..? இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகுமா?

Salt Deficiency Symptoms: உடலில் உப்புச்சத்து குறைபாடு ஏற்பட்டால் சோர்வு, தலைவலி, தலைச்சுற்றல், குமட்டல், வாந்தி, பசியின்மை போன்ற அறிகுறிகள் தென்படும். இது இன்சுலின் எதிர்ப்பு, சர்க்கரை நோய், இதய நோய், அதிக கொழுப்பு போன்ற ஆபத்துகளை அதிகரிக்கும். உப்புச்சத்து குறைபாட்டைத் தவிர்க்க சரியான அளவு உப்பு உட்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் அதிகப்படியான உப்பு உட்கொள்ளுதலும் ஆபத்தானது என்பதை மறக்கக் கூடாது.

Health Tips: உடலில் உப்புச்சத்து குறைந்தால் என்ன நடக்கும்..? இவ்வளவு பிரச்சனைகள் உண்டாகுமா?
உப்புச்சத்துImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 12 Jul 2025 21:44 PM

உடலை ஆரோக்கியமாக வைக்க அனைத்து வகையாக ஊட்டச்சத்துக்களும் கிடைப்பது முக்கியம். இதில், உப்பு (Salt) மிகவும் அத்தியாவசியமான ஒன்று. பெரியவர்கள் உப்பு குறைவாக உணவில் சேர்த்து கொள்வது நல்லது என்று கூறுவார்கள். உப்பு அதிகமாக எடுத்துக்கொள்ளும்போது உடலில் உயர் இரத்த அழுத்த பிரச்சனையை (High Blood Pressure) அதிகரிக்கும். எந்த அளவிற்கு உப்பு அதிகரிக்கும்போது பிரச்சனைகள் ஏற்படுமோ, குறையும்போதும் உடலுக்கு தீங்கு ஏற்படும். எனவே, உப்பு குறைபாடு ஏற்படும்போது உடல் எவ்வாறு அறிகுறிகளை வெளிப்படுத்தும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

உப்பு குறைபாட்டின் அறிகுறிகள்:

சோர்வு மற்றும் பலவீனம்:

உடலில் சோடியம் இல்லாதபோது, தசைகள் மற்றும் நரம்பு செயல்பாடுகள் சரியாக வேலை செய்யாது. உடலில் சோர்வு ஏற்பட்டு, ஆற்றல் பற்றாக்குறையும் ஏற்படும்.

தலைவலி:

உடலில் உப்பு இல்லாதபோது தலைவலி ஏற்படலாம். உப்பில் சோடியம் உள்ளது. அதன்படி, உடலில் சோடியத்தின் அளவு குறையத் தொடங்கும் போது, உடல் நீரிழப்புக்கு ஆளாகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், தலைவலி ஏற்படலாம்.

தலைச்சுற்றல்:

சோடியம் குறைபாடு இரத்த அழுத்தத்தையும் பாதிக்கிறது. குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக, பலவீனம், சோர்வு மற்றும் தலைச்சுற்றல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

குமட்டல் மற்றும் வாந்தி:

உடலில் சோடியம் அளவுகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வு காரணமாக திரவ சமநிலை தொந்தரவு ஏற்படும். இது தலைச்சுற்றல், கிறக்கம் அல்லது குமட்டலை ஏற்படுத்தும்.

பசியின்மை:

உடலில் சோடியம் குறையும்போது, பசி குறைய தொடங்குகிறது. இத்தகைய சூழ்நிலையில், உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காது, இது பிற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கிறது. மேலும், இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் பலவீனமடைகிறது.

ALSO READ: வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன? 

உப்பு இல்லாததால் ஏற்படும் பிரச்சனைகள்:

இன்சுலின் எதிர்ப்பு:

சோடியம் குறைபாடு உடலில் இன்சுலின் எதிர்ப்புக்கு வழிவகுக்கும். இது கட்டுப்பாடற்ற இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவை ஏற்படுத்தும். இது வகை 2 சர்க்கரை நோய் மற்றும் பிற நோய்களில் அபாயத்தை அதிகரிக்கும்.

சர்க்கரை நோய்:

சர்க்கரை நோயாளிகள் சோடியம் உட்கொள்ளலில் சிறப்பு கவனம் செலுத்துவது முக்கியம். அதன்படி, சோடியம் குறைபாடு அவர்களுக்கு ஆபத்தில் முடியலாம்.

இதயநோய்:

உடலில் சோடியம் பற்றாக்குறை இதயத்திற்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இதனால், மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகரிக்கலாம்.

கொழுப்பு:

குறைந்த சோடியம் உணவுகள் LDL (கெட்ட) கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை அதிகரிக்கும். இது இதயத்தை பாதிக்கும் மற்றும் பிற நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கும்.

ALSO READ: தீராத நோயை தீர்க்கும் குணம் கொண்ட திப்பிலி.. எவ்வாறு உட்கொள்வது..?

(Disclaimer : இணையத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உள்ளடக்கங்கள் தகவலுக்காக மட்டுமே. முயற்சிக்கும் முன் தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெறவும். எந்த விளைவுகளுக்கும் TV9Tamil பொறுப்பேற்காது.)