Painkiller Side Effects: வலி நிவாரணிகளால் ஏற்படும் சிறுநீரக பாதிப்புகள்.. இவற்றை சரியாக எப்படி கையாள்வது..?
Kidney Damage from Painkillers: வலி நிவாரணிகள் அடிக்கடி உட்கொள்ளுவது சிறுநீரக பாதிப்புக்கு வழிவகுக்கும். இரத்த ஓட்டம் குறைவு, இடைநிலை நெஃப்ரிடிஸ், நாள்பட்ட சிறுநீரக நோய், எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள் மற்றும் நீரிழப்பு போன்றவை ஏற்படலாம். மருத்துவ ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணிகளை நீண்ட காலம் பயன்படுத்துவதைத் தவிர்ப்பது நல்லது.

உலகின் மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்று, மெடிக்கல் கடைகளில் கிடைக்கும் வலி நிவாரணிகள் (Painkiller) ஆகும். மக்கள் வலியால் பலவீனம் அடையும்போது அதாவது தலைவலி (Headache), தசை வலி, மூட்டு வலி அல்லது அறுவை சிகிச்சைக்கு பிந்தைய வலி இருந்தாலும், பெரும்பாலான மக்கள் எந்தவொரு யோசனையும் இன்றி வலி நிவாரணியை போட்டு கொள்கிறார்கள். வலிக்கு இவை உடனடி நிவாரணத்தை வழங்குவதில் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், உங்கள் சிறுநீரகங்களில் (Kidney Damage) ஒரு சில தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் உங்களால் நம்ப முடியுமா..? நிபுணர்களின் கூற்றுப்படி, அடிக்கடி வலி நிவாரணி எடுத்துகொள்வது சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
வலி நிவாரணிகள் உங்கள் சிறுநீரகங்களை எவ்வாறு சேதப்படுத்துகின்றன..?
இரத்த ஓட்டம் குறையும்:
பெரும்பாலான வலி நிவாரணிகள் NSAIDகள் உட்பட உங்கள் சிறுநீரகங்களில் உள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்தும் புரோஸ்டாக்லாண்டின்களின் உற்பத்தியில் தலையிடுகின்றன. புரோஸ்டாக்லாண்டின் அளவு குறைவதால் உங்கள் இரத்த நாளங்கள் குறுகி, இரத்த ஓட்டம் குறைகிறது.
இடைநிலை நெஃப்ரிடிஸ்:
இடைநிலை நெஃப்ரிடிஸ் என்பது உங்கள் சிறுநீரகத்தின் வடிகட்டுதல் அலகுகளின் வீக்கத்தால் ஏற்படுகிறது. இது நெஃப்ரான்கள் என்றும் அழைக்கப்படுகிறது. வலி நிவாரணிகள் போன்ற மருந்துகளுக்கு ஒவ்வாமை எதிர்விளைவுகளால் இது தூண்டப்படுகிறது.
ALSO READ: இளைஞர்களிடையே சிறுநீரக கற்கள் அதிகரிப்பதற்கான காரணம் என்ன? எப்படி தவிர்ப்பது?
நாள்பட்ட சிறுநீரக நோய்:
நாள்பட்ட சிறுநீரக நோய் வலி நிவாரணிகளை நீண்ட காலமாக பயன்படுத்துவதால் ஏற்படுகிறது. குறிப்பாக, இதன் வடிக துகள்கள் குவிந்து, சிறுநீரக செயல்பாட்டை படிப்படியாக இழக்க செய்கிறது. மேலும், காலப்போக்கில் சேதம் அதிகரிக்கும்போது, நிலை கடுமையாக மாறும் வரை அது கவனிக்கப்படாமல் போகும்.
எலக்ட்ரோலைட் ஏற்றத்தாழ்வுகள்:
வலி நிவாரணிகள் உங்கள் சிறுநீரகங்கள் பொட்டாசியம், சோடியம் மற்றும் கால்சியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளின் சரியான சமநிலையை பராமரிக்கும் திறனை பாதிக்கின்றன. இது சோர்வு, ஒழுங்கற்ற இதய துடிப்பு அல்லது தசை பலவீனத்திற்கு வழிவகுக்கும்.
நீரிழப்பு:
வலி நிவாரணிகள் உங்கள் சிறுநீரகங்களின் தண்ணீரை சேமிக்கும் திறனை குறைத்து, நீரிழப்பு அபாயத்தை அதிகரிக்கும். இது இரத்த ஓட்டத்தை மேலும் குறைத்து, ஏற்கனவே உள்ள எந்தவொரு சேதத்தையும் மோசமாக்கும்.
ALSO READ: மது அருந்தாதவர்களுக்கும் வரும் கல்லீரல் சிக்கல்.. 3 முக்கிய காரணங்கள் இவைதான்!
இவற்றை எப்போதும் செய்யாதீர்கள்..
- உங்கள் மருத்துவரை அணுகாமல் சில நாட்களுக்கு மேல் எந்த வகையான வலி நிவாரணிகளையும் எடுத்துக்கொள்ளாதீர்கள்.
- நீங்கள் மருத்துவரின் அறிவுரையின்படி வலி நிவாரணி மருந்தை எடுத்துகொள்ளும்போது மது அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது உங்கள் சிறுநீரக ஆரோக்கியத்தை நேரடியாக பாதிக்கும்.
- சிறுநீரக செயல்பாட்டை சரியாக மேற்கொள்ள போதுமான அளவு தண்ணீர் மற்றும் திரவங்களை குடிப்பதும், நீரேற்றத்துடன் இருப்பதும் முக்கியம். இது வலி நிவாரணியால் ஏற்படும் சேதத்தின் அபாயத்தை குறைக்கும்.