இயற்கையாக கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படி ? இதை டிரை பண்ணுங்க!
Natural Health Tips : உடலில் கல்லீரல் மிக முக்கியமான உறுப்பு. கல்லீரல் நம் ரத்தத்தை சுத்தப்படுத்தி உடல் ஆரோக்கியமாக இயங்க பெரிதும் உதவுகிறது. இந்த கட்டுரையில் கல்லீரலை வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி சுத்தப்படுத்துவது எப்படி என பார்க்கலாம்.

கல்லீரலை (Liver)ஆரோக்கியமாக வைத்திருப்பது நம் உடலுக்கு மிகவும் முக்கியம். செரிமானம், இரத்தத்தை சுத்திகரித்தல், உடலில் இருந்து நச்சுகளை அகற்றுவதில் கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்ற உறுப்புகளைப் போல கல்லீரலில் ஏற்படும் பிரச்னைகள் அவ்வளவு எளிதில் தெரியாது. எனவே அவற்ற மிகவும் கவனமாக பராமரிக்க வேண்டும். நம் சமையலறையில் (Kitchen) காணப்படும் சில உணவுகள் கல்லீரலை இயற்கையாகவே ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக நமது இந்திய உணவு வகைகளில் பயன்படுத்தப்படும் சில சூப்பர்ஃபுட்கள், கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க மிகவும் சிறப்பாக செயல்படுகின்றன. இதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
நெல்லிக்காய்
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்றுகின்றன. இவை கல்லீரல் செல்கள் மீண்டும் வளரவும், ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
மஞ்சள்
மஞ்சள் இயற்கையாகவே கல்லீரலில் வீக்கத்தைக் குறைத்து கொழுப்பு சேருவதைத் தடுக்கிறது. இது செரிமானத்திற்கு அவசியமான பித்தத்தை உற்பத்தி செய்வதற்கும் உதவுகிறது.
இதையும் படிக்க : உணவில் இருக்கும் மறைக்கப்பட்ட உப்பு பற்றி தெரியுமா? அதிகரிக்கும் இதய நோய் ஆபத்து!
பப்பாளி
கல்லீரல் ஆரோக்கியத்திற்கு பப்பாளி மிகவும் நல்லது. இது செரிமானத்தை மேம்படுத்தி கல்லீரலில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கிறது. பப்பாளியில் உள்ள பப்பேன் மற்றும் கைமோபப்பைன் நொதிகள் உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைத்து கல்லீரலைச் சுத்தப்படுத்துகின்றன.
பூண்டு
பூண்டில் உள்ள சல்பர் மற்றும் செலினியம் கல்லீரல் சிறப்பாக செயல்பட உதவுகின்றன. இவை கல்லீரல் நொதிகளைத் தூண்டி இரத்தத்தில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். கொழுப்பு கல்லீரலைக் குறைப்பதிலும் இது மிகவும் நல்லது.
கொத்தமல்லி
கொத்தமல்லி இயற்கையாகவே கல்லீரலைச் சுத்தப்படுத்துகிறது. இதில் உள்ள பொருட்கள் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகின்றன.
இதையும் படிக்க : முட்டை சாப்பிடுவது கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுமா? – உண்மை என்ன?
பீட்ரூட்
பீட்ரூட்டில் பீட்டாலைன்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கல்லீரல் செல்களில் வீக்கம் மற்றும் அழுத்தத்தைக் குறைக்கின்றன. பீட்ரூட்டை தினமும் உட்கொள்வது கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வெந்தயம்
வெந்தயம் கல்லீரல் நச்சுத்தன்மை நீக்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவை செரிமானத்திற்குத் தேவையான நொதிகளை உற்பத்தி செய்கின்றன. அவை வாயு, மலச்சிக்கல் மற்றும் வீக்கம் போன்ற பிரச்னைகளைக் குறைத்து, கல்லீரலில் உள்ள வேலைப் பளுவைக் குறைக்கின்றன.
கல்லீரல் மிகவும் சிக்கலான உறுப்பு என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். சிறிய உறுப்பாக இருந்தாலும் அது உடல் பிரச்னையின்றி இயங்க தேவையான அடிப்படை பணிகளை செய்து வருகிறது. எனவே அவற்றை ஆரோக்கியமாக பராமரிப்பது மிகவும் அவசியம்.