உணவில் இருக்கும் மறைக்கப்பட்ட உப்பு பற்றி தெரியுமா? அதிகரிக்கும் இதய நோய் ஆபத்து!
Hidden Salt Health Risk : உணவுகளில் நாம் சுவைக்காக உப்பு சேர்க்கப்படுவது வழக்கம். இதனால் நம் ஆரோக்கியத்திற்கு ஏற்ப எவ்வளவு உப்பு சேர்க்க வேண்டும் என்பது பற்றி நமக்கு தெரியும். ஆனால் உணவுகளில் மறைக்கப்பட்ட உப்பு பற்றி தெரியுமா? உணவுகளில் இருக்கும் மறைக்கப்பட்ட உப்பு நமக்கு இதய நோய் ஆபத்துகளை அதிகரிக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

சமீப காலமாக 40 வயதுக்குட்பட்டவர்களுக்கு இதய நோய் அதிகரித்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் மறைந்திருக்கும் உப்புகள் (Salt) தான். இவை நாம் தினமும் உண்ணும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மறைந்திருந்து இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் இளைஞர்களிடையே இதய நோய் (Heart Disease) அதிகரித்து வருகிறது. குறிப்பாக மாரடைப்பு வழக்குகள் வேகமாக அதிகரித்து வருகின்றன, குறிப்பாக 40 வயதுக்குட்பட்டவர்களிடையே இந்த பிரச்னை அதிகம் காணப்படுகிறது. தற்போது பதிவாகியுள்ள மாரடைப்புகளில் தோராயமாக 25 முதல் 30 சதவீதம் இந்த வயதினரிடையே ஏற்படுகின்றன. இந்த நிலைக்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறை மாற்றங்கள். குறிப்பாக உணவுப் பழக்கவழக்கங்கள் இந்தப் பிரச்னையை அதிகப்படுத்துகின்றன. ஆரோக்கியமான உணவை உட்கொள்வது இதய நோய் அபாயத்தை பெருமளவில் குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மறைக்கப்பட்ட உப்புகள் என்றால் என்ன?
நாம் நம் உணவுகளில் சுவைக்காக உப்பைப் பயன்படுத்துகிறோம். இது சாதாரணமானது. ஆனால் பல பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மறைக்கப்பட்ட உப்புகளும் உள்ளன. இவை நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் ஆபத்தானவை. அவை நம்மை அறியாமலேயே நம் உடலில் தினமும் நுழைந்து நம் இதயங்களை சேதப்படுத்துகின்றன.
இதையும் படிக்க : 40 வயதுக்கு பிறகும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? இந்த எளிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க
இந்த மறைக்கப்பட்ட உப்புகள் பெரும்பாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் காணப்படுகின்றன. அவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்கள், சுவையை அதிகரிக்கவும், நீண்ட கால சேமிப்பை உறுதி செய்யவும் அதிக சோடியத்தைச் சேர்க்கின்றன. நாம் உணவில் உப்பு சேர்ப்பதாக நம்மை நினைத்துக் கொள்கிறோம். ஆனால் இந்த மறைக்கப்பட்ட சோடியம், தினசரி உப்பு எடுத்துக்கொள்ளும் அளவவை விட அதிகமாக இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் ஆபத்து
இந்த வேகமான வாழ்க்கையில், பலர், சமைப்பதற்கு நீீண்ட நேரம் எடுத்துக்கொள்வதில்லை. உடனடியாக கிடைக்கும் உணவுகளை சாப்பிடப் பழகிக் கொள்கிறார்கள். காரமான, வறுத்த மற்றும் துரித உணவுப் பொருட்களில் சோடியம் அதிகமாக உள்ளது. மேலும், அவற்றில் கெட்ட கொழுப்பும் அதிகமாக உள்ளது. அதே நேரம் நார்ச்சத்து குறைவாக உள்ளது.
இதையும் படிக்க : காலையில் தினமும் ஒரு கிளாஸ் பப்பாளி ஜூஸ்.. ஆரோக்கியத்திற்கு இது கேரண்டி..!
இது தவிர, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்காத பொருட்களில் கூட சோடியம் அதிகமாக உள்ளது. உதாரணமாக, பிஸ்கட், சீஸ், ஊறுகாய், நூடுல்ஸ், சூப்கள், பீட்சாக்கள், பாஸ்தாக்கள் போன்றவற்றில் அவற்றை பாதுகாக்க உப்பு சேர்க்கப்படுகின்றன.
சோடியம் என்பது நமது உடலில் நீர் சமநிலையையும் நரம்பு செயல்பாட்டையும் ஒழுங்குபடுத்தும் ஒரு முக்கியமான கனிமமாகும். ஆனால் ஒரு நாளைக்கு 1.5 முதல் 2.5 கிராமுக்கு மேல் உட்கொள்வது உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். அதிகப்படியான சோடியம் உடலில் தண்ணீரைத் தக்கவைத்து, இரத்த அழுத்தத்தை அதிகரிக்கும். இவை மாரடைப்பு, பக்கவாதம், பார்வை இழப்பு மற்றும் இரத்த நாளங்களில் அடைப்பு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
மறைக்கப்பட்ட உப்பை தவிர்க்க என்ன செய்வது?
- பதப்படுத்தப்பட்ட உணவுகளைக் குறையுங்கள்.. சாஸ்கள், நூடுல்ஸ், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை எடுத்துக்கொள்வதை குறையுங்கள்.
- புதிய பொருட்களுக்கு முன்னுரிமை கொடுங்கள். புதிய காய்கறிகள், பழங்கள் மற்றும் புதிய இறைச்சியைப் பயன்படுத்துங்கள்.
- லேபிள்களைப் படிப்பதை ஒரு பழக்கமாக்குங்கள். சூப்பர் மார்க்கெட்டில் ஏதாவது வாங்கும்போது, உணவில் எவ்வளவு சோடியம் உள்ளது என்பதைச் சரிபார்க்கவும்.
- வீட்டில் சமைத்த உணவை உண்ணுங்கள். வெளியில் சாப்பிடுவதற்குப் பதிலாக வீட்டில் சமைப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- உப்புக்குப் பதிலாக மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துங்கள். கொத்தமல்லி, சீரகம், இஞ்சி, எலுமிச்சை சாறு மற்றும் மஞ்சள் போன்ற சுவையான மசாலாப் பொருட்களைப் பயன்படுத்துவது சுவையை அப்படியே வைத்திருக்கும். உப்பு தேவையும் குறைகிறது.