Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

புரோட்டீன் பவுடரால் ஆபத்தா? எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி?

Protein Powder Health Alert : புரோட்டீன் பவுடர் உடலுக்கு நன்மை தரும் என நம்பி பலரும் தினசரி பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், சில புரோட்டீன் பவுடர்களில் மெர்குரி ஆசெனிக், லெட் போன்ற ரசாயனங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை தவிர்க்க வீட்டிலேயே எளிமையாக புரோட்டீன் பவுடரை தயாரிப்பு எப்படி என பார்க்கலாம்.

புரோட்டீன் பவுடரால் ஆபத்தா? எளிதாக வீட்டிலேயே செய்வது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 13 Jul 2025 21:53 PM

இப்போது பெரும்பாலான உடற்பயிற்சி (Exercise) ஆர்வலர்களும் விரும்பிப் பயன்படுத்தும் ஒன்று புரோட்டீன் பவுடர் (Protein Powder). இதனை எடுத்துக்கொள்வதால் ஆரோக்கியம் மேம்படும் என நம்பப்படுகிறது.  குறிப்பாக ஜிம்மிற்கு செல்பவர்கள் புரோட்டீன் பவுடரை அதிகம் பயன்படுத்துகின்றனர். புரோட்டீன் நம் தசை மற்றும் எலும்பு உறுதியாக இருப்பதற்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் மக்களிடையே ஆரோக்கியம் என நம்பப்படும் புரோட்டீன் பவுடர் குறித்து அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.  அமெரிக்காவின் ஹார்வார்ட் பல்கலைகழகம் நடத்திய சமீபத்திய ஆய்வு, புரோட்டீன் பவுடரில் உடல் நல பாதிப்புகள் ஏற்படுவதாக பல தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

புரோட்டீன் பவுடரில் உள்ள ஆபத்துகள்

ஹார்வார்டு பல்கலைக்கழகத்துட் இணைந்து பிரிங்காம் மருத்துவக் கல்லூரி நடத்திய ஆய்வில், பால் சார்ந்த புரோட்டீன் பவுடர்கள் லாக்டோஸ் அளர்ஜி உள்ளவர்களுக்கு வயிற்றில் வீக்கம் மற்றும் ஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுல்ளது. மேலும் சில புரோட்டீன் பவுடர்கள் உடல் எடை அதிகரிப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற பிரச்னையை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கிளீன் லேபல் புராஜெக்ட் என்ற அமைப்பு வெளியிட்ட ஆய்வில் 134 வகை புரோட்டீன் பவுடர்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் இருப்பதாக கண்டறிந்துள்ளனர். குறிப்பாக மெர்குரி, லெட் ஆர்சனிக் போன்ற ரசாயனங்கள் இருந்துள்ளன. 

இதையும் படிக்க: புரோட்டீன் பவுடர் வாங்கப்போறீங்களா? இந்த 5 தவறுகளை செய்யாதீர்கள்!

வீட்டிலேயே தயார் செய்யலாம் புரோட்டீன் பவுடர்

இப்போது வீட்டிலேயே நீங்கள் உங்கள் தேவைக்கு ஏற்ற பாதுகாப்பான, ஆரோக்கியமான புரோட்டீன் பவுடரை உருவாக்கலாம். வீடுகளிலேயே தயாரிக்கும் போது அதில் கெமிக்கல்கள் போன்ற கலப்படங்கள் இருக்காது. கலோரியின் அளவை தெரிந்துகொள்ளலாம். உடலுக்கு தீங்கு விளைவிக்காது. விலையும் குறைவாகும். பிளாஸ்டிக் பயன்பாடு குறையும்.

இயற்கையான புரோட்டீன் பவுடர் தயாரிக்கும் செய்முறை

தேவையான பொருட்கள்:

  • 1 கப் வறுத்த ஓட்ஸ்

  • 1 கப் வறுத்த பாசி பருப்பு

  • ½ கப் வறுத்த வேர்க்கடலை

  • ½ கப் பாதாம்

  • 2 ஸ்பூன் சூரியகாந்தி விதைகள்

  • 4 டேட்ஸ்

இதையும் படிக்க : வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்குமா? உண்மை என்ன?

செய்முறை

  • அனைத்து பொருட்களையும் தனித்தனியாக வறுக்கவும்
  •  மிக்சியில் நைஸ் பவுடராக அரைக்கவும்
  • பின் அதனை காற்று புகாத பாட்டிலில் வைத்து, தேவையான அளவில் பயன்படுத்தலாம்.

தினமும் 1 முதல் 2 ஸ்பூன் இயற்கையாக வீட்டில் தயாரித்த புரோட்டீன் பவுடரை பால், ஸ்மூத்தி, சப்பாத்தி மாவில் கலந்து சாப்பிடலாம்.

குழந்தைகளுக்கு கொடுக்கும்போது தேனும், நாட்டுச்சக்கரையும் கலந்து கொடுக்கலாம்.  எடை குறைக்க வேண்டும் என்றால் ஓட்ஸ் பயன்படுத்தலாம். லாக்டோஸ் அலர்ஜி உள்ளவர்கள், பாதாம் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

கடைகளில் விற்கப்படும் புரோட்டீன் பவுடர்கள் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகின்றன. ஆனால் அதில் ஆபத்துகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அதற்கு பதிலாக வீட்டிலேயே எளிமையாக தயாரிக்கப்படும் புரோட்டீன் பவுடர்களை எடுத்துக்கொள்ளலாம்.