AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Health Tips: சர்க்கரை அளவை குறைத்தால் என்ன நடக்கும்? உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?

Reduce Sugar: சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) படி, உலகளவில் சுமார் 589 மில்லியன் மக்கள் தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 185 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அன்றாட வாழ்வில் சர்க்கரையின் அளவை குறைத்துகொள்வது நல்லது.

Health Tips: சர்க்கரை அளவை குறைத்தால் என்ன நடக்கும்?  உடலில் என்ன மாற்றங்கள் நிகழும்?
சர்க்கரை அளவுImage Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 11 Feb 2026 17:33 PM IST

வயது மற்றும் உடல்நிலையை கருத்தில் கொண்டு சர்க்கரை உட்கொள்ளலை கட்டுப்படுத்துவது முக்கியம். இது ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு புத்திசாலித்தனமான வழியாகும். கடைகளில் கிடைக்கும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை ஆரோக்கியமற்றது. ஆனால், அது உங்கள் உணவில் இருந்து அனைத்து வகையான சர்க்கரையையும் (Sugar) நீக்க வேண்டும் அர்த்தமல்ல, பழங்கள் (Fruits), சில பால் பொருட்கள் மற்றும் சில காய்கறிகளில் காணப்படும் இயற்கை சர்க்கரை நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பிற ஊட்டச்சத்துக்களுடன் கிடைக்கும். இந்த சரியான அளவு சர்க்கரையே உடலுக்கு பாதுகாப்பானது. இந்தநிலையில், சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.

ALSO READ: அதிக விலை ப்ளூபெர்ரி.. எளிதாக கிடைக்கும் கொய்யாவில் இவ்வளவு நன்மைகளா? எது சிறந்தது..?

தி லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, உலகின் பெரியவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் 2050 ஆம் ஆண்டுக்குள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள். இதனால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உச்சத்தை தொடும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) படி, உலகளவில் சுமார் 589 மில்லியன் மக்கள் தற்போது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த எண்ணிக்கை 2050 ஆம் ஆண்டுக்குள் 185 மில்லியனாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

எடை குறைப்பு:

சர்க்கரை சேர்க்காமல் இருப்பது என்பது உங்கள் ஒட்டுமொத்த கலோரி உட்கொள்ளலை குறைக்கும். இது எடையை குறைத்து பராமரிக்க எளிதாக்கும். அதிக சர்க்கரையை உட்கொள்வது அதிக எடை மற்றும் உடல் பருமனுக்கு பங்களிப்பதாக ஆய்வுகள் காட்டுகின்றன. சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகளுக்கு பதிலாக சர்க்கரை குறைவாக உள்ள அல்லது சேர்க்கப்படாத உணவுகளை பயன்படுத்துவது பல நன்மைகள் தரும்.

சர்க்கரை நோய் தடுப்பு:

அதிக சர்க்கரை உட்கொள்ளல், குறிப்பாக இனிப்பு பானங்களிலிருந்து வகை 2 சர்க்கரை நோயை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூட்டும். சர்க்கரையிலிருந்து அதிக கலோரிகளை உட்கொள்ளும்போது மக்கள் எடை அதிகரிப்பு பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். அதிக எடை அல்லது பருமனாக இருக்கும்போது இன்சுலின் உணர்திறன் குறைவதற்கும் வழிவகுக்கும். இது நாளடைவில் வகை 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.

ALSO READ: அதிக எடை அதிகரிப்பிற்குக் காரணம் சாதமா..? எடையை குறைக்க சாதத்தை தவிர்க்கலாமா?

வயதானதை மெதுவாக்கும்:

அதிகப்படியான சர்க்கரையை குறைத்து இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவது சருமத்தின் வயதான செயல்முறையை மெதுவாக்கும். அதிக சர்க்கரை உணவு, சரும வயதான செயல்முறையை துரிதப்படுத்துவதோடு தொடர்புர்டைய மேம்பட்ட கிளைசேஷன் உற்பத்தியை ஊக்குவிக்கும். சர்க்கரை உட்கொள்ளலை குறைப்பது சருமத்தில் ஏற்படும் வயதான விளைவுகளை மெதுவாக்கும். குறிப்பாக, உங்கள் உணவில் ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள் இருந்தால், இவை சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

Follow Us