Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? அதை எவ்வாறு தடுப்பது..?

Dengue Prevention: மழைக்காலத்தில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள், தடுப்பு முறைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ உதவி பெற வேண்டும். கொசுக்கள் பெருகுவதைத் தடுக்க, சுத்தமான சூழலை உருவாக்குவது அவசியம்.

Health Tips: டெங்குவின் ஆரம்ப அறிகுறிகள் என்ன? அதை எவ்வாறு தடுப்பது..?
டெங்கு காய்ச்சல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 13 Sep 2025 15:50 PM IST

நகரங்கள் மற்றும் கிராமங்களில் இப்போது கொசுக்கள் எல்லா இடங்களிலும் பெருகி வருகின்றன. மழைக்காலத்தில் கொசு கடித்தால் மலேரியா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் ஏற்படலாம். மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களில் டெங்கு காய்ச்சல் (Dengue Fever) மிகவும் ஆபத்தான ஒன்று. சரியான நேரத்தில் இதற்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும். மழைக்காலம் என்பதால் டெங்கு வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை (Immunity) பலவீனப்படுத்துகிறது. ஆரம்ப கட்டங்களில், அறிகுறிகள் வெளிப்படையாகத் தெரியாது. பல நேரங்களில் நோயாளிகள் காய்ச்சலுடனும் சோர்வாகவும் உணர தொடங்குவார்கள். இந்தநிலையில், டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் என்ன.. அதை எப்படி கட்டுபடுத்துவது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

டெங்கு காய்ச்சலில் அறிகுறிகள் என்ன..?

ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட 3 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறிகள் தோன்ற தொடங்கும். இதில் டெங்கு காய்ச்சல் ஏற்பட்ட நபருக்கு அதிக காய்ச்சல், தலைவலி, வாந்தி, தசை மற்றும் மூட்டு வலி ஆகியவை ஏற்படும். சில நோயாளிகளில், இந்த நோய் இரத்தப்போக்கு, இரத்த நுண் சுழற்சிகள் குறைதல் மற்றும் இரத்த பிளாஸ்மா கசிவு ஆகியவற்றுடன் கூடிய டெங்கு ரத்தக்கசிவு காய்ச்சலாக மாறும்.

ALSO READ: உணவுடன் உடனுக்குடன் தண்ணீர்! செரிமானத்தை மெதுவாக்குமா..?

டெங்கு பாதிப்பு அதிகரிக்கும்போது மூக்கு மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு ஏற்படலாம். டெங்கு பாதித்த நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், நோயாளியின் உயிரும் போகலாம்.

கொசுகளில் பல வகையான ஏடிஸ் கொசுக்கள் இருந்தாலும், ஏடிஸ் எஜிப்டி என்ற வகை கொசு டெங்குவைப் பரப்புகின்றன.முதலில் டெங்குவில், காய்ச்சலுடன் சேர்ந்து, உடலில் உள்ள பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையும் குறையத் தொடங்குகிறது, இதனால் டெங்குவிலிருந்து மீள நிறைய நேரம் எடுக்கும்பல நேரங்களில் பிளேட்லெட்டுகள் குறைவாக இருக்கும்போது நோயாளிகளுக்கு பிளேட்லெட் பரிமாற்றமும் செய்ய வேண்டியிருக்கும்.

ALSO READ: சிறுநீர் கழித்த உடனே தண்ணீர் குடிக்கலாமா? இந்த பிரச்சனையை உண்டாக்கும் அபாயம்!

டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பது எப்படி..?

  • டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்பதற்கு, முதலில் நம்மையும், நம் வீட்டை சுற்றியும் சுத்தமாக வைப்பது முக்கியம். அதன்படி, நோயைப் பரப்பும் கொசுக்களிடமிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
  • உங்கள் வீட்டிற்குள் அருகில் சேர்த்து வைத்துள்ள தண்ணீரை நீண்ட நாட்களாக மூடி வைக்காதீர்கள். அதேபோல், வீட்டிற்கு அருகில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்க விடாதீர்கள்.
  • நீங்கள் ஏதேனும் காட்டு பகுதியில் அல்லது செடி அதிகம் உள்ள பகுதிகளில் நுழைய வேண்டியிருந்தால், கொசு கடித்தலைத் தடுக்க நீண்ட கை சட்டை மற்றும் நீண்ட பேன்ட் அணியுங்கள். மேலும், கொசு கடியை தடுக்கும் க்ரீம்களை பயன்படுத்துங்கள்.
  • வீட்டைச் சுற்றியுள்ள தேவையற்ற செடி, கொடிகளை வெட்டி எரியுங்கள். மேலும், மாலை நேரத்தில் வேப்ப இலை புகை, கொசு விரட்டிகளை பயன்படுத்துங்கள்.