AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட 3 அறிகுறிகள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

Key Dengue Symptoms : மழை காலங்களில் கொசுவின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது டெங்கு காய்ச்சலின் அபாயமும் அதிகரிக்கிறது. டெங்கு காய்ச்சலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்ளும்போது விரைவிலேயே குணமடையலாம். இந்த கட்டுரையில் டெங்குவின் ஆரம்பகட்ட 3 அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

டெங்கு காய்ச்சலின் ஆரம்பகட்ட 3 அறிகுறிகள்  – மருத்துவர்கள் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 11 Aug 2025 23:02 PM IST

நாடு முழுவதும் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.  மழைக்காலத்தில் (Monsoon) கொசுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது, டெங்குவின் அபாயமும் அதிகரிக்கிறது. கொசு கடித்தவுடன், வைரஸ் உடலில் நுழைந்து அமைதியாக செயல்படத் துவங்குகிறது. டெங்கு வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியுடன் போராடத் தொடங்குகிறது. இதனால் நம் உடலுக்கு சில விளைவுகளை ஏற்படுத்துகிறது. ஆரம்ப நாட்களில் அதை அடையாளம் காண்பது கடினமாக இருக்கும்.  பல நேரங்களில் சோர்வு மற்றும் லேசான காய்ச்சல் (Fever) மட்டுமே இருக்கும். இதனால் இரண்டு நாட்கள் ஓய்வு எடுத்தால், சரியாகிவிடும் என்று மக்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்படி அலட்சியமாக இருந்தால் பாதிப்புகள் கடுமையாக இருக்கும் இந்த கட்டுரையில் டெங்குவின் 3 ஆரம்ப அறிகுறிகள் குறித்து பார்க்கலாம்.

இதன் அறிகுறிகளை சரியான நேரத்தில் அடையாளம் காணவில்லை என்றால் வைரஸ் இரத்தத்திற்குள் பரவி, பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கையை பாதிக்கத் தொடங்குகிறது. இந்த நேரத்தில்தான் ஒருவர் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.  ஆரம்பத்தில், அறிகுறிகள் மிகவும் லேசானவை, எனவே பலர் இதை ஒரு சாதாரண காய்ச்சல் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். இந்த அலட்சியம் பின்னர் நிலைமையை மோசமாக்கும்.

இதையும் படிக்க : இயற்கையாக கல்லீரலை சுத்தப்படுத்துவது எப்படி ? இதை டிரை பண்ணுங்க!

டெங்கு காய்ச்சல் குறித்து மனதில் கொள்ள வேண்டியவை

அறிகுறிகள் தீவிரமடையத் தொடங்கும் போது தான் டெங்குவின் உண்மையான ஆபத்து தொடங்குகிறது. உடலில் வைரஸின் தாக்கம் காய்ச்சல் ஏற்படும்.  கிட்டத்தட்ட ஒவ்வொரு டெங்கு நோயாளிக்கும் பொதுவான சில அறிகுறிகள் காணப்படுகின்றன. அதனை சரியான நேரத்தில் அடையாளம் காணப்பட்டால், நோய் பரவாமல் தடுக்கலாம்.

டெங்கு நோயாளிகளுக்கு ஏற்படும் பொதுவான 3 அறிகுறிகள்

டெங்கு காய்ச்சலின் ஆரம்ப கட்டத்தில் நோயாளிகளுக்கு பொதுவான 3 அறிகுறிகள் தோன்றும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இதையும் படிக்க : கடைகளில் கொடுக்கும் பில்லை தொட்டால் கேன்சர் வருமா ? சமீபத்திய ஆய்வில் அதிர்ச்சி தகவல்

  1. முதல் அறிகுறி அதிக மற்றும் தொடர்ச்சியான காய்ச்சல் ஏற்படும். இந்த காய்ச்சல் பெரும்பாலும் 102 முதல் 104 டிகிரி வரை ஏற்படும். மேலும் சாதாரண மருந்துகளால் எளிதில் குறையாது.
  2. இரண்டாவது அறிகுறி உடல் மற்றும் மூட்டுகளில் கடுமையான வலி ஏற்படும். இதனால் நடப்பதற்கு மிகவும் சிரமப்படலாம்.
  3. மூன்றாவது மற்றும் மிக முக்கியமான அறிகுறி பிளேட்லெட்டுகள் வீழ்ச்சியடைதல் ஆகும், இதன் காரணமாக உடலில் சிறிய சிவப்பு அல்லது ஊதா நிற தடிப்புகள் அல்லது புள்ளிகள் தோன்றக்கூடும், சில சமயங்களில் ஈறுகள் அல்லது மூக்கில் இருந்து லேசான இரத்தம் வெளியேறலாம்.

ஆரம்பகால அறிகுறிகளை புரிந்துகொண்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டால் டெங்கு தீவிரமடைவதைத் தடுக்கலாம். டெங்குவைத் தடுப்பதற்கான சிறந்த வழி கொசுக்களிடமிருந்து விலகி இருப்பது. வீடுகளை சுற்றி தண்ணீர் தேங்க அனுமதிக்க கூடாது. உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

Follow Us