மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா போறீங்களா? காத்திருக்கும் ஆபத்து!
Health Alert for Travelers : மலைப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான விஷயம். ஆனால் தற்போது மலைபிரதேசங்களில் காணப்படும் மேகங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுகள் இருப்பதாக சமீபத்திய ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது.

மலைப்பகுதிகள் (Hill Station) என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். சுத்தமான காற்று, குளிர்ந்த காலநிலை, பசுமையான காட்சிகள் அனைத்தும் நம் மனதை லேசாக மாற்றும். ஆனால் இப்போது நீங்கள் மலைகளுக்குச் செல்வதற்கு முன் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற மலைப்பகுதிகளில் காணப்படும் மேகங்கள் நம் ஆரோக்கியத்தை பாதிக்கும் அம்சங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது, அதில் மலைகளில் காணப்படும் மூடுபனி மற்றும் மேகங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கும் ஆபத்தானவை என்று கண்டறியப்பட்டது. மலைப்பகுதிகளில் காணப்படும் மேகங்கள் மற்றும் மூடு பனிகளில் நச்சுக்கள் நிறைந்துள்ளதாகவும் அது நம் உடல் நலனை பாதிக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.
கோடைக்காலமாக இருந்தாலும் சரி, மழைக்காலமாக இருந்தாலும் சரி, நகரங்களில் வசிக்கும் மக்கள் விடுமுறை கிடைத்தவுடன் மலைப் பகுதிகளை நோக்கிச் செல்லத் தொடங்குகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், சில பிரபலமான இடங்களில் காற்றின் மாசுபாடு அதிகரித்து வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மலைகளின் காற்று விஷமாகி வருகிறது. இந்த காற்று உங்கள் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல் மற்றும் மூளைக்கு கூட தீங்கு விளைவிக்கிறது.
இதையும் படிக்க : சமைத்த உணவை இதற்கு மேல் ஃப்ரிட்ஜில் வைக்காதீர்கள்.. உடல்நலத்தை கெடுக்கும்..!




மேகங்களில் நச்சுத்தன்மை கண்டறியப்பட்ட இடங்கள்
இதற்குப் பின்னால் பல காரணங்கள் உள்ளன சமீபத்திய ஆராய்ச்சியில், சிம்லா, முசோரி, மணாலி, அவுலி மற்றும் டார்ஜிலிங் போன்ற மலை பகுதிகளில் நீங்கள் அனுபவிக்கும் மூடுபனியில் நச்சு இரசாயனங்கள் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரசாயனங்கள் நம் உடலுக்குள் சென்று படிப்படியாக உடல் உறுப்புகளை சேதப்படுத்தத் தொடங்குகின்றன. இதனால் ஏற்படும் பாதிப்பு உடனடியாக தெரியாது என்பதால் நமக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்படும்போது அதற்கனா காரணத்தை தெரிந்துகொள்வது சிரமம்.
ஜெர்மனி மற்றும் இந்தியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் கூட்டு ஆராய்ச்சியில், இந்த மேகங்களில் பிளாஸ்டிக் துகள்கள், கன உலோகங்கள் மற்றும் உடலுக்கு ஆபத்து விளைவிக்கின்ற இரசாயனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவை புற்றுநோயை கூட உருவாக்கக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் இதற்கு மேகத்தில் மறைந்திருக்கும் புற்றுநோய் ஆபத்து எனப்பெயரிட்டுள்ளனர்.
இதையும் படிக்க : இரத்த எண்ணிக்கையை அதிகரிக்க ஆம்லா – பீட்ரூட் ஜூஸ்: உண்மையில் பலனளிக்குமா?
இனி மலைகளுக்கு செல்வதால் ஆபத்தா?
நீங்கள் மலைப் பகுதிகளுக்கு செல்வதை நிறுத்த வேண்டிய அவசியமில்லை, மாறாக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய அவசியம் உள்ளது. நீங்கள் அத்தகைய பகுதிகளுக்குச் செல்லும்போது, சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
- காலை மூடுபனி அல்லது கடும் மூடுபனியில் வெளியே செல்ல வேண்டாம்.
- குழந்தைகள் மற்றும் வயதானவர்களை நீண்ட நேரம் வெளியே இருக்க விடாதீர்கள்
- சுவாசப் பிரச்சினைகள் இருந்தால், மாஸ்க் பயன்படுத்துங்கள்.
- மழை அல்லது அடர்ந்த மேகங்களின் போது மலையேற வேண்டாம்.