Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: இளம் வயதிலேயே எலும்பு பலவீனம்.. எலும்பு தேய்மானத்தின் காரணங்களும், தீர்வுகளும்..!

Bone Weakness in Young Adults: இளம் வயதிலேயே எலும்பு பலவீனமடைவது அதிகரித்து வருகிறது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு, உடற்பயிற்சியின்மை இதற்குக் காரணம். எலும்பு வலி, எடை இழப்பு, சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவரை அணுக வேண்டும்.

Health Tips: இளம் வயதிலேயே எலும்பு பலவீனம்.. எலும்பு தேய்மானத்தின் காரணங்களும், தீர்வுகளும்..!
எலும்பு பலவீனம்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 20 Aug 2025 15:37 PM

இளமையான காலத்தை கடந்து வயதான காலத்தை நெருங்கும்போது, நம் உடலில் எலும்புகள் பலவீனமடைவது (Weak Bones) சகஜம். ஆனால், இப்போதெல்லாம் இந்த பிரச்சனை இளைஞர்களிடையே (Young Adults) கூட அதிகரித்து வருகிறது. பலரும் இந்த பிரச்சனையை சரிசெய்ய சிறுவயதிலேயே மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இருப்பினும், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு, கால்சியம் குறைபாடு மற்றும் உடற்பயிற்சியின்மை ஆகியவை எலும்புகள் பலவீனமடைவதற்குக் காரணமாகின்றன. இதற்கு சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல் விட்டால் ஆஸ்டியோபோரோசிஸ், மூட்டுவலி (Arthritis) மற்றும் எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. இந்தநிலையில், நம் உடலில் எலும்பு பலவீனமடைய காரணம் என்ன..? இதை வராமல் எப்படி தடுப்பது உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.

உடல் எடை குறைதல், எளிதில் சோர்வு:

உங்கள் மூட்டுகளுக்கு அருகில் வீக்கம் மற்றும் விறைப்பு ஏற்பட்டால், அது எலும்பு பலவீனம் அல்லது கீல்வாதத்தின் அறிகுறியாக இருக்கலாம். உங்கள் முழங்கால்கள், முழங்கைகள் அல்லது விரல் மூட்டுகள் வலி மற்றும் வீக்கமாக இருந்தால், நீங்கள் மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துகொள்வது முக்கியம். மருத்துவரை சந்திக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாடு அல்லது உடற்பயிற்சி இல்லாமல் உங்கள் எடையானது தானாக குறைந்தால், அது பலவீனமான எலும்புகளின் அறிகுறியாக இருக்கலாம். எலும்பு அடர்த்தி குறைவது உடலின் ஒட்டுமொத்த சமநிலையைப் பாதிக்கிறது. இது எடை இழப்புக்கு வழிவகுக்கிறது.

ALSO READ: எடை குறைப்பது முதல் சகிப்புத்தன்மை வரை … படிக்கட்டில் ஏறி, இறங்குவது இவ்வளவு நன்மைகளா?

குறிப்பாக முதுகு, இடுப்பு அல்லது மூட்டுகளில் எந்த காயமோ அல்லது சுளுக்குமோ இல்லாமல் தொடர்ந்து எலும்பு வலியை அனுபவித்தால், குத்துதல் போன்ற உணர்வை உணர்ந்தால் அது பலவீனமான எலும்புகள் அல்லது கால்சியம் குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். எலும்புகள் பலவீனமடையும் போது, உடலின் சமநிலை சரியாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால் நடப்பது, படிக்கட்டுகளில் ஏறுவது அல்லது ஓடுவது சிரமமாகிறது. நீங்கள் மீண்டும் மீண்டும் விழும் பயம் அல்லது எளிதில் சோர்வடைந்துவிட்டால், எலும்புகள் பலவீனமடைந்து வருகின்றன.

தடுக்க என்ன செய்யலாம்..?

எலும்புகளை வலுப்படுத்த சரியான அளவு புரதத்தை எடுத்துக் கொள்வது முக்கியம். அதன்படி பருப்பு வகைகள், முட்டை, மீன், சிக்கன் மற்றும் பால் பொருட்கள் புரதத்தின் நல்ல ஆதாரங்கள் இருப்பதால் இதனை தினமும் உணவுடன் எடுத்து கொள்ளலாம். மேலும், வழக்கமான சுகாதார பரிசோதனைகளை மேற்கொள்வது முக்கியம். உங்கள் எலும்புகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால், அடர்த்தி பரிசோதனை செய்து, மருத்துவரின் ஆலோசனையின்படி கால்சியம் மற்றும் வைட்டமின் டி சப்ளிமெண்ட்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

ALSO READ: காலையில் எழுந்தவுடன் கை, கால்களில் வலியா..?ஒருபோதும் அலட்சியம் செய்யாதீர்கள்!

எலும்புகளை வலுப்படுத்த, பால், தயிர், சீஸ், பச்சை காய்கறிகள், பாதாம் மற்றும் சோயாபீன்ஸ் போன்ற கால்சியம் மற்றும் வைட்டமின் டி நிறைந்த உணவுகளை எடுத்து கொள்ளலாம். வைட்டமின் டி உடல் கால்சியத்தை உறிஞ்ச உதவுகிறது. எனவே வெயிலில் அமருதல், முட்டை, மீன் போன்ற உணவுகளைச் சேர்த்து கொள்ளலாம். மேலும் நடைபயிற்சி, நடனம், யோகா மற்றும் எடை தூக்கும் பயிற்சிகள் போன்ற எலும்புகளை வலுப்படுத்தும் வழக்கமான உடற்பயிற்சிகளைச் செய்யலாம். அதேபோல், சிகரெட் மற்றும் மதுவைத் தவிர்க்கவும், ஏனெனில் அவை எலும்புகளுக்கு தீங்கு விளைவிக்கும்.