எடை குறைப்பது முதல் சகிப்புத்தன்மை வரை … படிக்கட்டில் ஏறி, இறங்குவது இவ்வளவு நன்மைகளா?
Simple Fitness Habit: இன்றைய இளைஞர்கள் பலரும் உடல் பருமன் பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். இன்றைய காலகட்டங்களில் பல இடங்களில் லிஃப் வசதி இருப்பதால் பலரும் படிக்கட்டுகளை முற்றிலும் தவிர்க்கின்றனர். இந்த கட்டுரையில் படிக்கட்டில் ஏறி இறங்குவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தற்போதைய காலகட்டத்தில், மூன்று மாடிகளுக்கு மேல் உள்ள கட்டிடங்களில் லிஃப்ட் (Lift) இடம்பெற ஆரம்பித்துவிட்டன. இதன் விளைவாக, பெரும்பாலான மக்கள் படிக்கட்டுகளில் ஏறுவதை தவிர்த்து வருகின்றனர். படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது நேரத்தை வீணாக்கும் என்று பலர் நினைக்கிறார்கள். அதனால்தான் ஒரு தளத்தில் இருந்து இன்னொரு தளத்துக்கு நிமிடங்களில் அழைத்துச் செல்லக்கூடிய லிஃப்டுக்கு அதிக முன்னுரிமை கொடுக்கிறார்கள். இருப்பினும், உடற்பயிற்சி செய்ய நேரமில்லாதவர்களுக்கு அல்லது ஜிம் வசதிகள் இல்லாதவர்களுக்கு, இந்தப் படிக்கட்டுகளில் ஏறுவது மிகவும் நன்மை பயக்கும். குறிப்பாக உடல் எடை (Body Weight) குறைக்க விரும்புகிறவர்களுக்கு இது பெரிதும் பலனளிக்கும். இது கடினமாகத் தோன்றினாலும், அதிலிருந்து பல ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம். எனவே படிக்கட்டுகளில் ஏறுவதால் ஏற்படும் நன்மைகள் என்ன? இந்தப் பழக்கம் நமது ஆரோக்கியத்திற்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பதை இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
எடை குறைப்பதற்கு உதவும்
படிக்கட்டுகளில் ஏறுவதும் ஒரு உடற்பயிற்சி. அதை அன்றாட நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மாற்றுவது நல்லது. படிக்கட்டுகளில் ஏறும் பழக்கத்தை ஏற்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று மருத்துவ நிபுணர்களும் கூறுகிறார்கள். அதிக எடை கொண்டவர்கள் சில நாட்களுக்குள் எடை இழக்க இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது உடலில் குவிந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது. சமீபத்திய ஆய்வுகள் படிகளில் ஏறுவது கலோரிகளை எரிக்கவும் எடை குறைக்கவும் உதவுகிறது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளன.
இதையும் படிக்க : நாலு படிக்கட்டு ஏறினாலே மூச்சுத்திணறல் வருதா? இந்த சிக்கல்களாக இருக்கலாம்!




தசைகளை வலுப்படுத்துகிறது
படிக்கட்டுகளில் ஏறுதல் எனப்படும் எளிய உடற்பயிற்சி கால் தசைகளை வலுப்படுத்துகிறது. தொடர்ந்து படிக்கட்டுகளில் ஏறுவது தசை பலவீனத்தைத் தடுக்கிறது. மேலும், படிக்கட்டுகளில் ஏறுவது இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இரத்த ஓட்டம் மேம்படுகிறது. இது எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. இது மூட்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது
படிக்கட்டுகளில் ஏறுவது உடல் கொழுப்பை எரிக்க உதவும் ஒரு சிறந்த பயிற்சியாகும். தொடர்ந்து செய்தால், அது விரைவாக எடை இழக்க உதவுகிறது. மேலும், படிக்கட்டுகளில் ஏறுவது சகிப்புத்தன்மையை அதிகரிக்கும் ஒரு ஏரோபிக் பயிற்சியாகும். தொடர்ந்து பயிற்சி செய்தால், உங்கள் சகிப்புத்தன்மை இரட்டிப்பாகும்.
இதையும் படிக்க : நடைபயிற்சியின் போது இந்த தவறுகளை செய்யாதீர்கள் – பலன் கிடைக்காது!
படிக்கட்டுகளில் ஏறுவது நடைபயிற்சி போன்ற செயல்பாடுகளை விட அதிக கலோரிகளை எரிக்கிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் நிரூபித்துள்ளனர். படிக்கட்டுகளில் ஏறுவது நிமிடத்திற்கு 8 முதல் 11 கலோரிகளை எரிக்கிறது. வாரத்திற்கு ஐந்து நாட்கள் சுமார் 30 நிமிடங்கள் படிக்கட்டுகளில் ஏறுவது எடை குறைக்க உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.