Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Health Tips: உணவுடன் உடனுக்குடன் தண்ணீர்! செரிமானத்தை மெதுவாக்குமா..?

Drinking Water While Eating: சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதன் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து இந்தக் கட்டுரை விரிவாக விளக்குகிறது. சிறிதளவு தண்ணீர் செரிமானத்திற்கு உதவும் என்றாலும், அதிகளவு தண்ணீர் செரிமான சாறுகளை நீர்த்துப்போகச் செய்து செரிமானத்தை மெதுவாக்கும். ஐஸ் தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

Health Tips: உணவுடன் உடனுக்குடன் தண்ணீர்! செரிமானத்தை மெதுவாக்குமா..?
தண்ணீர் குடித்தல்Image Source: Freepik
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Sep 2025 16:35 PM IST

காலை உணவு, மதிய உணவு (Lunch) அல்லது இரவு உணவு என எந்த உணவாக இருந்தாலும் சிலர் தண்ணீர் இல்லாமல் குடிக்காமல் சிலர் சாப்பிட மாட்டார்கள். இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் எண்ணிக்கை இன்றைய காலத்தில் அதிகம். உணவுடன் தண்ணீர் குடிப்பது, உணவுக்கு பிறகு தண்ணீர் (Water) குடிப்பது குறித்தும் பல்வேறு தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது. ஆனால் அறிவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால், உணவுடன் சிறிது தண்ணீர் குடிப்பதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படாது. இருப்பினும், இதைப் பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிந்து கொள்வது முக்கியம். எந்த ஒரு பொருளுக்கும் நன்மைகள் இருப்பது போல, தீமைகளும் உண்டு. சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பதால் ஏற்படும் சில நன்மைகள் பற்றி முதலில் தெரிந்து கொள்வோம். அதேநேரத்தில், சாப்பிடும்போது எப்போது தண்ணீர் குடிக்கக்கூடாது என்பதையும் பார்ப்போம்.

ALSO READ: சாப்பிட்ட உடனே ஏன் குளிக்கக் கூடாது? செரிமான சிக்கலை தருமா..?

சாப்பிடும்போது என்ன செய்யலாம்..?

சாப்பிடும்போது சிறிது தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்கு உதவுகிறது.  தண்ணீர் எந்த உணவையும் மென்மையாக்க உதவுகிறது. இதனுடன், வயிற்றில் உள்ள உணவை உடைக்கவும் இது உதவுகிறது. இது தவிர, உலர்ந்த அல்லது கடினமான உணவை சாப்பிடும்போது யாராவது சிறிது தண்ணீர் குடித்தால், அந்த உணவை விழுங்குவது எளிதாகிவிடும். இந்த தந்திரங்கள் எடை குறைக்க விரும்பும் நபர்களுக்கும் வேலை செய்கின்றன. உண்மையில், எடையைக் குறைக்க நினைப்பவர்கள், உணவு உண்ணும்போது தண்ணீர் குடிப்பது எடையைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

என்ன செய்யக்கூடாது..?

சாப்பிடும்போது ஒருபோதும் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது. அவ்வாறு செய்வது உடலில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். உதாரணமாக, ஒருவர் சாப்பிடும்போது அதிகமாக தண்ணீர் குடித்தால், வயிற்றில் உள்ள செரிமான சாறுகள் நீர்த்துப்போகும். இதனால் செரிமான செயல்முறை மிகவும் மெதுவாகிறது. இது தவிர, சாப்பிடும்போது ஒரே நேரத்தில் நிறைய தண்ணீர் குடித்தால், வயிற்றில் அசௌகரியம் ஏற்படலாம். அதுமட்டுமின்றி, வாயு அல்லது வீக்கம் போன்ற பிரச்சனைகளும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ALSO READ: நின்றுகொண்டே தண்ணீர் குடிப்பது ஆபத்தா? உண்மை என்ன?

நிபுணர்களின் கூற்றுப்படி, சாப்பிடும்போது அல்ல, சாப்பிட்ட பிறகும் குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பது செரிமானத்தை மேம்படுத்துகிறது. சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது அல்லது சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு தண்ணீர் குடிப்பது உடலில் பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறுகின்றனர். ஒருவர் சாப்பிடும்போது ஒரே நேரத்தில் 1-2 கிளாஸ் தண்ணீர் குடிக்கக்கூடாது. இது தவிர, ஐஸ் வார்ட்டர் குடிப்பது சரியல்ல. மேலும், முற்றிலும் அவசியமில்லை என்றால், உணவு சாப்பிடும்போது தண்ணீர் குடிக்க வேண்டாம் என்று நிபுணர்கள் பலமுறை அறிவுறுத்துகிறார்கள்.